கேள்விகளும் பதில்களும் (COD 1- 9) Jeffersonville, Indiana, USA 59-0628E 1பழைய ஏற்பாட்டில் ஒருவர், ''நாம் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று அவர்கள் சொன்னபோது, ''நான் மகிழ்ச்சி அடைந்தேன்'' என்று கூறினார். ஆகவே இப்பொழுது, மிகவும் உஷ்ணமான மாலைப் பொழுதாகத் தான் இருக்கிறது. இங்கே எங்களுடன் வந்துள்ளவர்களாகிய நீங்கள், இந்த இந்த இங்கே இண்டியானாவில் ஜீவிப்பது ஏன் மிகவும் கடினமான ஒன்று என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளலாம். அது வெறும் 93 டிகிரி தான், 93 டிகிரி வெயில் தான். ஆனால் நீங்கள் பாருங்கள், நீங்கள் 120 டிகிரி உஷ்ணத்தில் செல்வீர்களானால், லூஸியானா மற்றும் அரிசோனாவில் உள்ளது போல, அது எப்படிப்பட்டது என்பதை எப்படியும் அதனுள் செல்ல முடியுமென்பதை உங்களால் உணரமுடியும், அது மாத்திரம் இங்கேயிருக்குமானால், நாம் மாண்டுபோவோம், அதுவே முடிவாக இருக்கும். ஆனால் இங்கேயிருந்து ஆராதனையில் நேரத்தை செலவிடுவது மிகவும் நலமான ஒன்றாகும். இக்காலை நான் வீட்டிற்குச் சென்ற பிறகு, நான் மிக அருமையாக உணர்ந்தேன். அந்த... அநேகர் இக்காலை சுகமாயினர் என்று நான் விசுவாசிக்கிறேன், ஒருக்கால், இந்நேரம் வரை அநேகர் அதை உணராமல் இருக்கலாம், ஆனால் அவர்கள் சுகமடைவார்கள்; ஏனெனில் கர்த்தருடைய வார்த்தையானது இக்காலையில் நம்முடைய இருதயங்களுக்கு விலையேறப் பெற்றதாக இருந்தது. நான்... நான் புறப்பட்ட போது, பரிசுத்த ஆவியானது இங்கே மிகவுமாக இருக்கையில் இந்த சுவர்கள் முழுவதும் பெரிதாக ஊதப்படுவது போல, சுவாசிப்பது போல காணப்பட்டது. அதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தவனாக இருந்தேன். 2ஆன்டர்சனைச் சார்ந்த தேவனுடைய சபையின் மேய்ப்பரும், என் நண்பருமாகிய சகோதரன் ஸ்மித் சற்று முன்னர் ஜெபித்துக் கொண்டிருந்ததை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். சகோதரன் ஸ்மித் ஒரு சிறிய கைப்பிரதியைக் கொண்டிருந்தார், இங்கே அவைகளைக் கூடாரத்தில் கொடுக்கவில்லை என்று நான் நினைக்கிறேன். அந்த சிறிய கைப்பிரதி உங்களில் யாருக்காவது கிடைக்கவில்லையெனில், நீங்கள் அதை வாசியுங்கள். அது மிகவும் திகைப்படையச் செய்கின்ற சிறிய கைப்பிரதியாகும்; அது முற்றிலுமாக வேதாகம சத்தியமாகும். நான் அவைகளில் நிறையவற்றை சிக்காகோவிற்கும் பல இடங்களுக்கும் விநியோகிக்கக் கொண்டு சென்றேன், ஏனெனில் அவை உண்மையான சத்தியமுள்ள, அருமையான கைப்பிரதிகளாகும். தேவனை நேசித்து மற்றும் உத்தமமான இருதயத்திலிருந்து அவை எழுதப்பட்டவையாகும் என்பதை நான் அறிவேன். இதில் சகோதரன் ஸ்மித்திற்கு எந்த ஒரு சுயநல நோக்கமும் கிடையாது, எல்லாம் கிறிஸ்தவமாகும். ஆகவே அந்த விதமான பண்பாற்றலுடைய மக்களுடன் இன்றிரவில் ஐக்கியப்பட்டிருப்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சி கொள்கிறோம். 3இங்கே கலிபோர்னியாவிலிருந்து வருகின்ற என் அருமை நண்பர், சகோதரன் பார்டர்ஸைக் காண்கின்றேன் என்று நம்புகிறேன். சமீபத்தில் - கர்த்தருக்காக - அங்கே சான் ஜோஸ் கூட்டத்தை ஒருங்கே சேர்ந்து துவங்கி அவர் எனக்காக ஒரு மகத்தான பெரிய வேலை செய்தார். அடுத்ததாக வர விருக்கின்றதற்கும் நீங்கள் ஒரு அருமையான பணியை செய்வீர்களென்று எதிர்பார்க்கிறேன். அவருக்குள் ஒரு தாழ்மையான, மிருதுவான ஆவியை நான் காண்பதால் தான் சகோதரன் பார்டர்ஸை எனக்கு பிடிக்கும், அது ஒரு மகத்தானது என்று நான் - நான் நினைக்கிறேன். அந்த விதமான ஆவியைக் கொண்டிருக்கிற ஒரு மனிதன் மிக மகிழ்ச்சியாக இருக்கத்தான் வேண்டும். 4இங்கே நான் எத்தனைப் பேர் இருக்கின்றனர் என்று எண்ணிக்கையளிக்க முடியாதிருக்கிற அநேகர் இங்குள்ளனர். நம்முடைய சகோதரனாகிய சகோதரன் காலின்ஸ் அங்கே இருப்பதை நான் காண்கிறேன், மற்றும் - மற்ற ஊழியக்காரர்கள், மற்றும் வடக்கு சாஸ்கட்சேவான் பகுதியிலிருந்து வருகின்ற நம்முடைய அருமை நண்பர் சகோதரன் சாத்மன், அவருடைய குடும்பத்தினர், சகோதரன் ஈவான்ஸ் இங்கே இருக்கிறார் என்று எனக்குத் தெரியும்; இன்னும் அவரை நான் காணவில்லை, ஆனால் அவருடைய குடும்பத்தாரை நான் பார்த்தேன், அவர்கள் ஜார்ஜியாவிலிருந்து வருகின்றனர். ஜார்ஜியாவைச் சார்ந்த சகோதரன் பாமர் அங்கிருக்கிறார், மற்றும் - மற்றும் சகோதரன் வெஸ்ட், அலபாமா அல்லது ஜார்ஜியாவைச் சார்ந்தவர் என்று நான் நம்புகிறேன். சகோதரன் வெஸ்ட் நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? நான்... அது.... ஓ, ஹண்ட்ஸ்வில். ஆகவே பிறகு... ஓ உங்கள் எல்லாரையும் நான் இங்கே காண்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி.“ ஆகவே இப்பொழுது, சகோதரன் லைல், அங்கே உள்ளார், உட் மற்றும் அவருடைய அருமையானவர்கள், வடக்கு இண்டியானாவைச் சார்ந்தவர்கள், இங்குள்ளனர். என்னுடைய பழைய கூட்டாளி வேட்டை கூட்டாளியான கெண்டக்கியைச் சார்ந்த சகோதரன் சார்லி (கெண்டிக்கியிலேயே சிறந்த அணில் வேட்டைக்காரர்களில் இரண்டாவது நபர், சிறந்த அணில் வேட்டைக்காரரில் இரண்டாவது சிறந்தவர். அதற்காக நான் பணம் செலுத்த அனுமதிப்பார். சரிதானே!) மற்றும் அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தார் இங்கிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். மற்றும் உங்களெல்லாருக்கும் கிறிஸ்தவ வாழ்த்துக்கள். இங்கிருக்கின்ற சிறு சகோதரன், அவருடைய பெயர் எனக்கு ஞாபகம் வரவில்லை - இங்கே, பலத்தரப்பட்ட பேர் உள்ளனர். கூடாரத்தில் எங்களோடு இன்றிரவு ஆராதிக்க நீங்கள் வந்ததற்காக உங்களை நான் மிகவுமாக மெச்சுகிறேன் என்பதை நீங்களெல்லாருமே அறிவீர்கள். 5ஆகவே இப்பொழுது, கூடாரத்தில் இன்றிரவு ஒரு வழக்கத்திற்கு மாறான இரவாகும், ஏனெனில் இதுகேள்வி பதில் இரவாகும். இது வழக்கமாக வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு தடவை நடைபெறும், நான் அதைச் செய்த காரணம் என்னவெனில், ஜனங்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை என் மனதில் கொண்டு, அதினால் அவர்களுடைய கேள்விகள் என்ன என்பதை நான் அறிந்துகொள்ள ஏதுவாயிருக்கும் என்பதே. எல்லாரும் ஒரு கேள்வியை உள்ளே போடும்படிச் செய்து, பிறகு அதற்கு பிரசங்க மேடையிலிருந்து பதிலளிப்பதாகும். 6இப்பொழுது, இதில் என்னால் - இது மிகவும் செயலாக்க முடையதாக இருக்கும் என்று நான் எண்ணினேன், ஆனால் என்னிடம் சில கேள்விகள் மாத்திரமே உள்ளன. ஆகவே இதற்கு பதிலளிக்க நமக்கு நீண்ட நேரம் எடுக்காது. தட்டு நிறைய கேள்விகள் இருக்கும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் சில எளிமையான மற்றும் எளிய கேள்விகள் மாத்திரம் உள்ளன. ஆனால் அவைகளில் சில உபதேசத்தைக் குறித்ததாக இருக்கின்றன. ஆகவே இந்த உபதேசத்தைப் பற்றி மக்களின் கேள்விகளுக்கு அவர்கள் யார் என்று அறியாமலே நான் பதிலளிக்க வேண்டியவனாகவுள்ளேன் (ஏனெனில் அநேகர் கேள்விகளில் தங்கள் பெயர்களை எழுதவில்லை); ஆதலால், கூடாரத்தில் எந்த போதகத்திற்காக நாம் நிற்கிறோமோ அதன்படியாகவே நான் அதற்கு பதிலளிக்க வேண்டியவனாகவுள்ளேன். ஆகவே அதைச் செய்வதின் மூலம். ஆகவே நம்மிடம் வந்திருக்கும் சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு முரண்பாடான சில காரியங்களை நான் பேச நேரிடுமானால், அதை ஒரு காரணமில்லாமல் நாங்கள் செய்திருக்கமாட்டோம். சிறு வேதப்பிரகாரமான காரியங்களின் பேரில் குழப்பிக்கொண்டிருக்கும் எந்த ஒருவர் பேரிலும் எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. நம்மெல்லாரையும் இரட்சிக்ககிறிஸ்து மரித்தாரென்றும், மேலும் நாமெல்லாரும் அவருடைய இரத்தத்தின் மூலமாகவே இரட்சிக்கப்பட்டோம் என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். 7ஒரு சபையாக, ஜனங்களாக, ஒரு சபையோராக, ஒரு சபையாக இருக்கத்தக்கதாக நாம் ஒரு போதகத்தைகொண்டிருக்க வேண்டியவர்களாக இருக்கவேண்டும். ஆகவே நாங்கள் எந்த போதகத்திற்காக நின்று கொண்டிருக்கிறோமோ அது தேவனுடைய சத்தியமாகிய தேவனுடைய வார்த்தையே. நாங்கள் அறிந்தவரை அதுவே சிறந்த ஒன்றாகும். இப்பொழுது, உங்களுக்கு விருப்பமானால் அதை ஒருவித்தியாசமான கோணத்தில் நீங்கள் பார்க்க உங்களுக்கு பரிபூரண உரிமை உள்ளது. ஆதலால் நான்..... 8இங்கே யாரோ கேள்விகள் கேட்டுள்ளனர். இரண்டு கேள்விகள் நீண்டதாக உள்ளன. எனக்குத் தெரிந்த வரையில் இப்பொழுது நான் பதிலளிப்பேன். இப்பொழுது, ஒரு கேள்வியைக் கையாள நான் முயற்சிப்பது இந்த வழியாகத்தான். ஒரு கேள்வி... ஒருவன் ஒரே ஒரு வசனத்தை எடுத்து, அது என்ன கூறவேண்டும் என்று நீ விரும்புகிறோயோ அதை ஏறக்குறைய அவ்விதமே கூறும்படிக்குச் செய்யலாம். ஆனால் அந்த வேதவசனம், ஒவ்வொரு வேதவசனமும் சத்தியமாகும். அது மிகவும் பரிபூரணமானதாகும், அந்த வேத வசனத்தை உரைத்த அந்த முடிவில்லாத தேவனைப் போன்றே, அதற்கு ஒரு முடிவே இல்லாதவகையில் அது மிகவும் பரிபூரணமான ஒன்றாயிருக்கிறது. ஆதலால், அது ஆதியாகமம் துவங்கி வெளிப்படுத்தின விசேஷம் வரைக்கும் அதேவிதமாகத் தான் சென்று கொண்டிருக்கும். அது ஒருபோதும் திசைமாறாது. ஆகவே அப்படியானால், வேதாகமமானது ஊக்குவிக்கப்பட்ட தேவனுடைய வார்த்தையாக இருக்குமானால், அது எந்த ஒரு இடத்திலும் தன்னைத்தானே திசைமாற்றிக் கொள்ளாது. அது வேதவசனத்தின் மூலமாகவே அது செல்லும். இப்பொழுது, அநேக தடவை. இக்காலை நான் சிம்சோன் தெலிலாளை மற்றும் உலக பிரகாரமாக இருக்கின்ற சபையைப்பற்றி பிரசங்கிக்கையில் நான் சற்று கடினமாக பேசினேன், நான் கடினமாக பேசுவது என் நோக்கமல்ல, ஆனால் நான் உத்தமமாக இருக்க வேண்டுமென்று விழைந்தேன், என்னுடைய உண்மைப் பற்றானது எவ்வாறிருக்கிறதோ அதைப் போன்றே உத்தமமாக இருக்க வேண்டுமென்பதே என்னுடைய உறுதியான நம்பிக்கையாகும். 9இப்பொழுது, இந்த வேதவசனங்களில், அவைகள் தவற முடியாத பிழையற்ற தேவனுடைய வார்த்தையாயிருக்கையில் அந்த வேதவசனத்தை சரியாக வியாக்கியானிக்க ஒன்று தான் இருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன், அது பரிசுத்த ஆவி தான், நான் நம்புவது, அது... இந்த வேத வசனங்களை எழுதிய அந்த பரிசுத்த ஆவியானவர் தாமே, அவைகள் ஒரு தனிப்பட்ட வியாக்கியானத்திற்காக அல்லவே என்று கூறினார், அப்படியானால் காலந்தோறும் அதை வியாக்கியானித்தது அதே பரிசுத்த ஆவியாகத் தான் இருக்கும். ஆனால் இப்பொழுது, அநேக மக்கள் தங்கள் சபைகளில் மற்றும் தங்கள் மார்க்கங்களில், கருத்து வேறுபாடுகள், தாங்கள் பிடித்துக்கொண்டிருக்கிற ஒன்றின் பேரில் சிறிது முரண்பாடாக இருப்பார்கள். அப்படியிருந்தால், நான் ஒரு செர்ரீ கேக்கை உண்ணும்போது நான் என்ன செய்கிறேனோ அதே போன்று நீங்களும் செய்யுங்கள். நான் ஒரு கொட்டையைக் கடிக்கையில், அந்த கொட்டையை வெளியே எறிந்து விட்டு, தொடர்ந்து கேக்கை சாப்பிடுவேன். அதைப் போன்றுதான் நீங்களும் செய்ய வேண்டும். 10நம்முடைய சகோதரி வூட்டன் அங்கே தன்னுடைய சிறு குழந்தையுடன் நின்று கொண்டிருப்பதை நான் காண்கிறேன். சகோதரியே, அக்குழந்தை வெப்பத்தை உணருகிறதென்றால், உங்களுக்கு ஒரு இருக்கை இல்லையெனில், நம்முடைய சகோதரரில் ஒருவர் உள்ளேயிருந்து ஒரு நாற்காலியைகொண்டு வந்து அங்கே மின் விசிறியின் அருகில் வைத்தால் நலமாயிருக்கும், ஏனெனில் சகோதரிக்கு உட்காரும்படி ஒரு குளிர்ந்த இடம் உண்டாயிருக்கும். அதைச் செய்வதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாயிருக்கும், இங்கே சகோதரரில் யாராவதொருவர்... சகோதரியே, இங்கே இருக்கின்ற மின்விசிறி, இங்கே காற்றை வீசிக் கொண்டிருக்கிறது, மற்றும் அங்கே ஒரு இருக்கை உள்ளது. நீங்கள் அதில் உட்கார விரும்பினால் நீங்கள் சென்று அமரலாம். இப்பொழுது, சகோதரரில் யாராவது உங்கள் கோட்டை, கழற்ற விரும்பினால் நீங்கள் தாராளமாகச் செய்யலாம், நீங்கள் நலமாக மற்றும் மகிழ்ச்சியாக உணரும்படிக்கும் செய்து கொள்ளுங்கள். 11இப்பொழுது, அவர்கள் எனக்காக ஜெபிப்பார்களா என்று குழுவை நான் கேட்டுக்கொள்ளப்போகிறேன். ஒரு இரவு ஆராதனைக்காக நான் அடுத்த வாரத்தில் கலிபோர்னியா செல்ல வேண்டியவனாகவுள்ளேன். கிறிஸ்தவ வியாபாரிகளின் சர்வதேச கன்வென்ஷன் கூட்டத்தில் ஒரு இரவு மாத்திரம் நான் பிரசங்கிக்கிறேன். ஆனால் அவர்கள் அதை விளம்பரப்படுத்தியுள்ளனர், ஆகவே அநேக ஆயிர மக்கள் அங்கே இருப்பார்களென்று நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். அவர்களை ஏமாற்றமடையச் செய்ய எனக்கு விருப்பமில்லை. திட்டமிட்டபடியே அந்த நேரத்தில் நான் ஆஸ்திரேலியாவில் இல்லையெனில் நான் அங்கு வருவேனென்று அவர்களிடம் கூறியுள்ளேன், ஆகவே எங்களுக்காக ஜெபியுங்கள். 12உங்களுடைய அன்றாட பணிகளிலிருந்து விடுமுறையில் இருக்கின்ற இந்த பூமியின் அருமையான யாத்ரீகர்களில் யாராவது கூட்டங்களில் ஒன்றிலாகிலும் இருக்க விரும்புவீர்களானால், டென்னஸியிலுள்ள, கிளீவ்லாண்டில், தேவனுடைய சபையில் (Church of God) மூன்று நாள் கூட்டங்கள் இருக்கும். அது டாம்லின்ஸசனின் அசைவான, பெந்தெகொஸ்தே தேவனுடைய சபை என்று நான் நினைக்கிறேன். சகோதரன் லிட்டில் பீல்ட், மேய்ப்பராயுள்ளார், அவர் ஒரு அருமையான கிறிஸ்தவ நபர் ஆவார். அவர் வடக்கிலிருந்து, மெய்னிலுள்ள பங்கோரிலிருந்து வருகின்ற ஒரு அமெரிக்கர், ஆனால் ஒரு உண்மையான கிறிஸ்தவர், அருமையான சகோதரன். ஆகவே, நீங்கள் பிரயாணத்தில் இருந்து வரவிரும்பினால், ஒருக்கால் திங்கள் இரவு அவர்கள் கட்டியுள்ள பெரிய, விஸ்தாரமான கூடாரம் பிரதிஷ்டை செய்யப்படும். பிறகு, அடுத்த வாரத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில், கர்த்தருக்கு சித்தமானால்? வருகின்ற வாரம் அல்ல, அடுத்த வாரம் சுகமளிக்கும் ஆராதனைகள் இருக்கும், அது 6ஆம், 7ஆம் மற்றும் 8ஆம் தேதியாக இருக்கும். இப்பொழுது நாம் வார்த்தையை திறப்பதற்கு முன்னர், ஜெபத்திற்காக நம்முடைய தலைகளை நாம் தாழ்த்த நான் விரும்புகிறேன். 13கர்த்தராகிய தேவனே, கர்த்தராகிய இயேசுவை, மரித்தோரிலிருந்து மறுபடியுமாக கொண்டு வந்தவரே மற்றும் அவரை பரிசுத்த ஆவியின் வடிவில் எங்களுக்கு அளித்தவரே, எங்களெல்லாருடைய விலையேறப்பெற்ற தகப்பனே, சிலுவையிலறையப்பட்டப் பிறகு, மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிரோடெழுந்து, மகிமைக்குள் மேலேறிச்சென்று, மத்தியஸ்த ஊழியம் செய்ய என்றென்றும் வாழ்ந்து, எங்கள் பலவீனங்களுக்காக பரிதபிக்கிற மகா பிரதான ஆசாரியராய், இருப்பதிலேயே மிகவும் சிறியதான தெருவில் விழுகின்ற ஒரு குருவியைக் கூட அறிந்தவராக இருக்கின்றாரே, அப்படியானால் வார்த்தையை கேட்க மாத்திரமே இந்த உஷ்ணமான கட்டிடத்தில் இன்றிரவு அமர்ந்திருக்கின்ற தம்முடைய பிள்ளைகளின் உத்தமத்தை அவரால் எப்படி கடந்து சென்று விட முடியும். ஒன்றை நிச்சயமாக அறிவேன், கர்த்தராகிய தேவனே, நான் கேட்கவில்லை என்றாலும், நீர் தாமே உம்முடைய ஆசீர்வாதங்களை தங்களுடைய கடமையென்னும் ஸ்தானத்தில் நின்று கொண்டிருக்கிற இவர்களுடைய தீரத்திற்காக இவர்கள் மீது நீர் ஊற்றுவீர். இங்கே சிலர், வருகை புரிந்துள்ளனர், கர்த்தாவே, இவர்களுக்காகவும் இவர்களுடைய சபைகளுக்காகவும் நாங்கள் ஜெபிக்கிறோம். இந்த கேள்விகளுக்கு என்னை விட இன்னும் அதிகமாக பதிலளிக்கக்கூடிய, சுவிசேஷத்திற்காக நியமிக்கப்பட்ட- தேவனால் நியமிக்கப்பட்ட போதகர்கள் இங்கே அமர்ந்துள்ளனர். கர்த்தராகிய தேவனே, நாங்கள் கூறவேண்டிய சரியான காரியங்களை எங்களுக்கு அளித்து, அது தாமே சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷத்தை எங்கள் இருதயத்திற்குக் எங்களுக்கு கொண்டுவந்து, நாங்கள் ஒன்றாக கிறிஸ்து இயேசுவுக்குள் உன்னதங்களில் அமர்ந்து, எந்த ஒரு பாரபட்சமும் இல்லாமல் கெட்ட உணர்வுகள் இல்லாமல் வேதவாக்கியங்களை ஆராய்ந்து, சத்தியம் என்ன என்பதையும் மற்றும் அந்த சத்தியத்தை ஆராதிக்க மாத்திரம் நீர் தாமே பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு எங்களிடம் வரச் செய்யும்படி நான் ஜெபிக்கிறேன், கர்த்தாவே, இதை அருளும். 14இங்கே ஒன்று கூடுகின்ற இந்த ஆட்டு மந்தையை ஒவ்வொரு ஆண்டும் கடுமையான மற்றும் அசைவில்லாத நேரங்களினூடாக வழிநடத்தி மேய்த்து கடமையில் நிறுத்திப் பெற்றுள்ள ஸ்தானத்தில் நேர்த்தியுடன் துணிவுடன் நிற்கின்ற எங்களுடைய அருமையான மேய்ப்பராகிய சகோதரன் நெவிலை ஆசீர்வதிக்குமாறு நாங்கள் கேட்கிறோம். உம்முடைய ஆவிதாமே அவர் மீது இருந்து, அவருக்கு உதவுமாறு ஜெபிக்கிறோம். கூடாரத்தோடு தொடர்புடைய எல்லாரையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, உம்முடைய சித்தமாயிருக்கும் பட்சத்தில், ஒரு அழகான, பெரிய கூடாரமானது இங்கே மூலையில் விரைவில் இருக்கவும் அங்கே ஒரு பள்ளியை நாங்கள் அமைத்து பரிசுத்தவான்களுக்கு ஒரு விசை ஒப்புவிக்கப்பட்ட விசுவாசத்திற்காக போராடும்படியாக இளம் ஊழியர்களுக்கு போதிக்கும்படி நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம். கர்த்தாவே, நாங்கள், மூப்படைந்து கொண்டிருக்கிறோம், விரைவில் நான் வேதாகமத்தை வேறு யாரேனும் ஒருவருடைய கரங்களில் அளிக்கவேண்டும். கர்த்தாவே, இந்த முயற்சியில் எங்களுக்கு உதவி செய்யும். நாங்கள் அவரில் சார்ந்திருக்கையில், இன்றிரவு எங்கள் கேள்விகளுக்கு பரிசுத்த ஆவியின் மூலமாய் பதிலளியும், இதை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென். 15இப்பொழுது, மிக அதிக வெப்பமாக இருக்கிறதென்பதை நான் அறிவேன், ஆனால் தேவனுக்கு முன்பாக நான் சரியாக அதற்கு பதிலளித்தேன் என்று நான் கருதும் வரை ஒரு கேள்வியை கடந்து செல்வதில் எனக்கு விருப்பமில்லை. இப்பொழுது, நம்மிடம் அநேக கேள்விகள் இல்லை; நான் அவைகளை எண்ணிப்பார்க்கவில்லை, மிகச்சொற்பமான கேள்விகள் மாத்திரமே இருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையுமே பார்க்க முடியாமலும் போகலாம், ஆனால் கூடுமானால் எல்லாவற்றையும் முடிக்க நாங்கள் விரும்புகிறோம். இங்கே இளஞ் சிவப்பு நிறத்தில் இங்கே இருக்கும் இந்த சிறுமியை நான் கேட்க... தேனே, இங்கே வா. இவள் சகோதரன் பீலருடைய சிறு பெண் என்று நான் நினைக்கிறேன். நீ இந்த கேள்விகளை அங்கே கீழே எடுத்துச்சென்று, இவைகளை ஒன்றாய்க் கலக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், நான் என்ன கூற வருகிறேனென்று உனக்கு விளங்குகிறதா, இவைகளை ஒன்றின் மேல் ஒன்று வைத்து இதைப்போன்று குலுக்கி பிறகு என்னிடம் திரும்பவுமாக கொண்டுவா. புரிகின்றதா? நான் ஒரு கேள்விக்கு பதிலளித்தேன் என்று எண்ணிக்கொண்டு, வேறொன்றிற்கு பதிலளிக்கச் சென்று, மற்றொருவருடைய கேள்வியை இடமாற்றாதபடிக்கு இவ்விதம் செய்கிறேன். அவ்வாறிருக்க நான் விரும்பவில்லை. இந்த சிறுமி இதை ஒன்று சேர்த்து கலந்து பிறகு நாம் எது மேலே இருக்கிறதோ அதற்கு நாம் பதிலுரைப்போம். இப்பொழுது, இங்கே (இனியவளே, உனக்கு நன்றி) - நான் கூறத்தக்கதாக ஏதாவது கேள்வியாருடைய மனதிலே இருக்குமாயின், உங்கள் கேள்விக்கு நான் பதிலளித்து விட்டு, அது உங்களுக்கு திருப்தியளிக்காமல் இருக்குமென்றால், நீங்கள் உங்கள் கைகளை உயர்த்தி பதிலளிப்பீர்களானால் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் இங்கு நான் வார்த்தைகளைக் குறித்த விவரங்களுக்கு கிரேக்க, எபிரேய கிரேக்க மற்றும் எபிரேய மூல அகராதி (Lexicon) இங்கே வைத்திருக்கிறேன், (உங்களுக்கு புரிகின்றதா?) ஏனெனில் சிலர் எபிரேய மற்றும் கிரேக்க வார்த்தைகளுக்குக் கூட விவரம் கேட்கின்றனர். 16ஆகவே இப்பொழுது, நாம் பதிலளிக்கையில் கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. நான் உங்களுக்கு தெளிவாகக் கூறட்டும்.... (அங்கே பின்பாக இருக்கிறவர்களுக்கு நான் பேசுவது தெளிவாகக் கேட்கிறதா, அப்படியானால் உங்கள் கைகளையுயர்த்துங்கள். அது அருமையானது) இப்பொழுது நான் தெளிவாகக் கூறட்டும், இந்த கேள்விகளுக்கு நான் பதிலளிக்கையில் இது ஒரு எதிர்ச்சார்பாக இருக்கும்படிக்கு அல்ல, ஆனால் அது போதகத்தையொட்டி இருக்குமானால் அதற்கு இங்கே எங்களுடைய சத்தியப்பற்றுக் கேற்றவாறே நாங்கள் அதற்கு பதிலளிக்க வேண்டியவர்களாக உள்ளோம் என்பதை கூடாரத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரும் நினைவில் கொண்டுள்ளனர், உங்களுடைய சொந்த கருத்துக்களுக்கு முரணாக இருக்கவேண்டும் என்றல்ல, ஆனால் - எங்களுடைய சத்தியப்பற்றுறுதியைக் கொண்டு வரவே. சில சமயங்களில் அதை மிக கடுமையாக ஆணித்தரப்படுத்துவோம். ஆகவே ஆராதிப்பவர் நிச்சயப்படுத்திக்கொள்ளவே இதைச் செய்கிறோம் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். 17இப்பொழுது, மேலே உள்ள முதலாவது கேள்வி. ஓ, ஆம், இது ஒருசிறிய கேள்வியாகும். இது ஒரு கேள்வியல்ல, இது ஒரு ... நல்லது, இது ஒரு கேள்வியாகும். இது வாரத்தின் முதலிலே என்னுடைய தனிப்பட்ட பேட்டியை வைக்க விரும்புகிற ஒருவருடையதாகும். இப்பொழுது, இந்த தனிப்பட்ட பேட்டி எவ்வாறு நாங்கள் நடத்துகிறோம் என்பதை நான் உங்களுக்கு கூறுகிறேன். இது அங்கொன்று இங்கொன்றுமாக, மற்றும் முதலாவதாக யார் வருகிறார்களோ என்பதின் அடிப்படையில் இருந்தது, ஆனால் நாங்கள் அதற்கு ஒரு முறைமையை கொண்டிருக்கிறோம். ஆகவே, ஜெப வரிசைகளில் வருகின்ற அநேக மக்கள் இருக்கின்றனர், அவர்களில் துரிதமாக செல்லுகின்ற வரிசைகளில் செல்பவர், அல்லது சிலர் அதைக் குறித்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் இருப்பவர் உள்ளனர், ஆகவே அவர்கள் கர்த்தரிடம் கேட்க விரும்புகின்றனர். இப்பொழுது, அதைக் கேட்க அவர்களுக்கு பரிபூரண உரிமை இருக்கிறது; அதற்காகத் தான் இந்த தீர்க்கதரிசன வரமானது அளிக்கப்பட்டது, அந்த நோக்கத்திற்காக மாத்திரமே அது அளிக்கப்பட்டுள்ளது. 18வேதாகமத்திலே ஏதாவதொன்றை தெரிந்துகொள்ள அவர்கள் விரும்பினால், தீர்க்கதரிசிகளிடம் சென்றனர், இவர்கள் தேவன் பதிலளிக்கும் வரை ஜெபித்து பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். என்ன, ஒரு குழுவை போஷித்து மற்றொரு குழுவை பட்டினிபோடும் தேவன் அவரல்ல. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆதலால், தீர்க்கதரிசன வரம் அதற்காகத்தான் இருக்கிறது. இந்த தனிப்பட்ட பேட்டிகளில், நாங்கள் ஒரு நபரின், காரியத்தை எடுப்போமானால், அதைக்குறித்து ஒரு வழியில் அல்லது மற்றொரு வழியில் தேவனிடமிருந்து அறியும் வரைக்கும் நான் அதை விடமாட்டேன். அவை சற்று தாமதமாகவே வரும். அது ஆறுமாதம் அல்லது ஒரு வருடம்கூட ஆனாலும், கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை நாங்கள் பெறுகின்ற வரையிலும் அதிலே நாங்கள் அப்படியே தரித்திருப்போம். பாருங்கள்? ஆதலால், அவைகள் சற்று தாமதமாகவே வருகின்றன, ஆனால் ஆயிரக்கணக்கானோர் அழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்களோ.... அன்றொரு நாள் பாப்டிஸ்டாகிய ஒரு மனிதன் என்னிடம் வந்திருந்தார் இந்த மனிதன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்திற்காக அநேக அநேக மாதங்களாக காத்திருந்தார் என்று நான் நம்புகிறேன். ஆனால் நாங்கள் அவரை அப்படியே விட்டு விடவில்லை, அவரை வர அனுமதித்தோம், முடிவாக தேவனுடைய கிருபையால் ஒரு தனிப்பட்ட பேட்டியில்.... உள்ளே வந்தார் என்ன காரணம் என்பதை அறிய ஒரு தரிசனத்தை காண அவர் எப்பொழுதும் விரும்பினார். அப்பொழுது அந்த தரிசனம் வந்தது, அவர் தன்னுடைய நாற்காலியில் உட்கார்ந்தவாறே பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார். 19பிறகு ஒரு - ஒரு கத்தோலிக்கர், சமீபத்தில் மனமாறிய அவர், ஒரு நாளிலே சிக்காகோ நகரத்திலிருந்து தனிப்பட்ட பேட்டிகளுக்காக வந்திருந்தார் - அவர் சுமார் இரண்டு ஆண்டுகளாக பேட்டிகளில் கலந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார்; அறையில் பதினைந்து நிமிடங்களில் நடந்த அவருடைய முதல் பேட்டியில் கர்த்தர் ஒரு தரிசனத்தை அளித்து, மற்றும் எல்லாவற்றையும், அவர் பரிசுத்த ஆவியை பெறும் முன்னர் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பதையும், முழு காரியத்தையும் வெளிப்படுத்தினார். பாருங்கள், அதற்காகத்தான் அது இருக்கின்றது. இப்பொழுது, யாராவதொருவர் எந்த சமயத்திலும் அழைப்புகள் வரும் போது, அவர்கள் வந்து பார்க்கவோ, அல்லது இந்த தனிப்பட்ட பேட்டிகளில் சந்திக்க விரும்புகிறவர்கள், பட்லர் (Butler) 2-1519 என்ற எண்ணிற்கு தொலைபேசி செய்தால், எந்த இடத்தில் தனிப்பட்டபோட்டி நடைபெறும் என்ற சரியான தகவலை அலுவலகம் உங்களுக்கு அஞ்சல் செய்யும். மேலும், உங்களுடைய தனிப்பட்ட பேட்டி எதற்காக என்பதைக் குறிப்பிடுங்கள், அதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்கலாம் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள். அப்பொழுது அது நீதியாக இருக்கும், மற்றும் ஒவ்வொரு நபரும்.... அந்த ஒதுக்கப்பட்ட நேரமானது போதுமானதாக இல்லாதிருக்கும் பட்சத்தில், அப்பொழுது அந்த குறிப்பிட்ட காரியத்திற்கு நாங்கள் மறுபடியுமாக வருவோம். அது சரியாக பதிவேட்டில் எழுத்து மூலமாக பதிவு செய்யப்படும், எங்களுக்கு தேவனிடத்திலிருந்து ஒரு தரிசனத்திலோ அல்லது தேவன் பேசுகின்ற ஏதாவதொரு விதத்தினாலோ அது அறியப்படும் வரை அந்த பதிவேட்டை நாங்கள் வைத்திருப்போம். ஆகவே இந்த விதமாகத்தான் எங்களுடைய தனிப்பட்ட பேட்டிகள் நடத்தப்படுகின்றன. 20ஆதலால், பாருங்கள், நான் வெளியே சென்றிருக்கையில், சில சமயங்களில் மக்கள் சகோதரன் பிரன்ஹாம், நீங்கள் போதுமான அளவிற்கு மக்களை சந்திப்பதில்லை'' என்று எண்ணுகின்றனர். மக்களை சந்தித்துக் கொண்டும் அதே சமயத்தில் தேவனோடும் இருக்கமுடியாது. புரிகின்றதா? யாரோ ஒருவரை கூர்ந்து கவனிக்கிறேன், மேலும் நான் நான் குகையிலோ அல்லது எங்கோ ஓரிடத்திலோ ஜெபித்துக் கொண்டிருக்கிறேன், அப்பொழுது அப்பொழுது.... இதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என நான் பார்க்க விரும்புகிறேன். (சகோதரன் பிரன்ஹாம் குறிப்பை மெதுவாக வாசித்துக்கொள்கிறார் - ஆசி) ஓ, ஆமாம். ஆம், ஆம் இந்த மனிதன்தான் (ஜீன் இதை இங்கே இப்பொழுது வைத்தார்) அந்த ... அன்றொரு நாள் சிக்காகோவிலிருந்து ஒரு மனிதன் வந்தார், மருத்துவர் அவருடைய இருதயத்தை அறுத்தெடுத்து, இருதயத்தை திறந்து அதற்குள்ளாக இருக்கும் கோளாறு என்ன என்பதை பார்க்க வேண்டுமென்றிருந்தார். அது என்னவென்று சரியாக பரிசுத்த ஆவியானவர் வெளிப்படுத்தினார், அதனால் அவருடைய இருதயத்தை அறுத்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லாமற்போயிற்று; அவர் சுகமாக்கப்பட்டார். ஆகவே நீங்கள் பாருங்கள், அநேக காரியங்கள் பேட்டிகளில் உள்ளது. மேலும் அது எவ்வளவு மெதுவாக வருகின்றது என்பதை உங்களுக்கு கூறுவேனானால், தேவனிடமிருந்து ஒரு பதிலுக்காக, ஒரு தரிசனத்திற்காக நானே பதினைந்து ஆண்டுகளாகக் காத்திருந்தேன். தேவன்.... இன்னொருவர் வருவார், அவர் மூன்று நிமிடங்களுக்கு கூட காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாருங்கள்? அது... தேவன் தம்முடைய சொந்த நேரத்தில் தான் பதிலளிக்கின்றார். அதை நாம் கட்டுப்படுத்துவதில்லை, அது தான் நம்மை கட்டுப்படுத்துகின்றது. 21இப்பொழுது மேலே இருக்கின்ற இரண்டாவது கேள்வியானது... சகோதரன் பில், ஆவிக்குரிய வரங்களில் விசுவாசம் கொண்டிராத ஒரு சபையார் மத்தியில், என் மூலமாக தேவன் பயனளிக்கின்ற கிரியைசெய்ய முடியுமா? இதில் பெயர் குறிப்பிடப்படவில்லை, ஆனால், ஆவிக்குரிய வரங்களில் விசுவாசம் கொண்டிராத ஒருசபைக் கூட்டத்தில் அவர்கள் ஊழியம் செய்யும்போது தேவன் அவர்களோடு கிரியை செய்வாரா என்றறிய இந்த நபர் விரும்புகிறார். அப்படி இருக்குமோ என்று சந்தேகங்கொள்கிறேன். அருமையான நண்பரே, கர்த்தர் உங்கள் மூலமாக பலனுள்ள வகையில் கிரியை செய்வாரா என்று நான் மிகவுமாக சந்தேகங்கொள்கிறேன், ஏனெனில் நீங்கள் அவிசுவாசிகள் மத்தியில் இணைக்கப்பட்டுள்ளீர்கள், வேதாகமமானது, 'அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் உங்களை பிணைத்துக் கொள்ளாதீர்கள், ஆனால் அவர்கள் மத்தியிலிருந்து வெளியே வந்து, வேறு பிரிக்கப்பட்டவர்களாயிருங்கள், என்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் உங்களை ஏற்றுக்கொள்வேன்“ என்று கூறுகின்றது. நீங்கள் ஒரு நகரத்தில் வசிப்பீர்களென்றால், அடையாளங்களில் மற்றும் ஆவிக்குரிய வரங்களில் விசுவாசம் கொண்டிருக்கும் ஒரு சபை அங்கே இருக்குமானால், அவைகள் உங்கள் மீது கிரியை செய்துகொண்டிருக்குமானால், அதை விசுவாசிக்கின்ற அந்த சபைக்கு நானே சொல்வேன். மற்றொரு காரியத்தையும் நான் கூறுவேனாக, நான் வழக்கமாக அளிக்கின்ற - ஒரு வேதவசனத்தை அளிக்க விரும்புகிறேன். அருமை நண்பரே, எப்படியாவது இந்த மக்கள் விசுவாசிக்க வேண்டுமென்று உங்களாலான சிறந்த முயற்சியை நீங்கள் மேற்கொண்டீர்கள், அவர்கள் விசுவாசிக்க வேண்டும்மென்று உங்களாலான சிறந்த முயற்சியை நீங்கள் மேற்கொண்டீர்கள், அவர்கள் விசுவாசிக்க வேண்டுமென்று முயற்சி செய்தீர்கள், ஆனால் அவர்களோ அதை அப்படியே செய்வதற்கு விருப்பமில்லாமல் இருந்திருக்கலாம். அப்படியானால், கர்த்தராகிய இயேசு நமக்கு அளிக்க விரும்புகின்றார் என்று நான் விசுவாசித்து நான் உங்களுக்கு ஒரு வேதவசனத்தை அளிக்கப்போகிறேன். 22நீங்கள் முயற்சி செய்திருந்தால், நீங்கள் அந்த மேய்ப்பரிடம் பேசியிருந்தால், நீங்கள் அவர்களில் அநேகரிடம் பேசி அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் விட்டு அவை விசுவாசிக்காமல் இருந்தால், இங்கே மத்தேயு 7:6 ல் அதைக் குறித்து இதைத் தான் இயேசு கூறியுள்ளார். பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களை பன்றிகள் முன் போடாதேயுங்கள். போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் முழு சுவிசேஷத் தையும் விசுவாசியாமல், அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று விசுவாசியாமல் இருக்கின்ற ஒரு சபைக் கூட்டத்தோடு நான் இணைந்திருப்பேனா என்பது சந்தேகம் தான். நான் ஒரு சபைக்கூட்டத்தில் உட்கார்ந்து அவர் கிரியை நடப்பிப்பதை அவர் கூறினவிதமாகவே அவர் செய்கிறதை நான் பார்க்கையில், நான் மக்களிடம் இப்படிப்பட்டவைகளிலிருந்து வெளியே வந்து, எல்லா வேதவசனங்களையும் பிரசங்கம் செய்து அவைகளை விசுவாசிக்கும் ஒரு நல்ல சபையை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள் என்று நான் கூறுவது சரியெனக் காட்டுகிறது. 23இப்பொழுது, அடுத்த கேள்வி : நீங்கள் பரிசுத்த ஆவியைப்பெற்றிராமல் இருந்தால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை என்பது உண்மையா? இதன் பேரில் ஐந்து மணி நேரம் விவாதிக்கலாம். நீங்கள் கிறிஸ்துவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டு தண்ணீர் ஞானஸ்நானத்திற்காக ஆயத்தமாயிருக்கையில்; நீங்கள் இன்னுமாக குணப்படவில்லை; நீங்கள் மனந்திரும்புதலுக்காக விசுவாசிக்கிறீர்கள். மனந்திரும்புதல் என்றால், ''மாற்றப்படுவதற்காக'' என்பதாகும். 24இப்பொழுது, இதை இன்னுமாக வலியுறுத்தத்தக்கதாக, தம்மை 3 1/2 ஆண்டுகளாக பின்பற்றி வந்த பேதுருவிடம் இயேசு ... மத்தேயு 10 வது அதிகாரத்தில் இயேசு பேதுருவிற்கு வியாதியுள்ளவர்களை சொஸ்தமாக்கவும், சுவிசேஷத்தை பிரசங்கிக்கவும், அசுத்த ஆவிகளை துரத்த, அவைகளுக்கு எதிராக பிரயோகிக்க வல்லமையை அளித்தார். பரிசுத்த யோவான்17:17ல் பேதுருவை சத்தியத்தின் மூலமாக பரிசுத்தப்படுத்தி, வசனமே சத்தியம் என்றும், அவர் தான் அந்த வார்தை என்றும் கூறினார். பிறகு - பெந்தெகொஸ்தேவிற்கு முன்னர் அவர், ''நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்று கூறினார். நீங்கள் விசுவாசித்து மாற்றப்படத்தக்கதாக முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள். 25இப்பொழுது, உங்களில் அநேகர், என்னுடைய பாப்டிஸ்டு, பிரஸ் பிடேரியன் நண்பர்களாகிய உங்களை அறிவேன், ஏனெனில் நீங்கள் இந்த வேதவசனத்திற்கு திரும்பிச் செல்கையில்.... இப்பொழுது, இங்கே தான் இதை நான் ஆணித்தரமாக கூற வேண்டியவனாக இருக்கிறேன். பாருங்கள்? நீங்கள் வேதவசனத்திற்கு திரும்பிச் செல்லுங்கள்; ஆபிரகாம் (ரோமர்-4) தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக கொடுக்கப்பட்டது அல்லது எண்ணப்பட்டது. ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், ஆகவே தேவன் அவனுடைய விசுவாசித்தின் அடிப்படையில் அவனுக்கு அதை நீதியாக எண்ணப்படச் செய்தார். ஆனால் ஆபிரகாமை நிரூபிக்க, அவர் அவனுக்கு (பண்புக்குரியவனாக குறித்துக்காட்டப்படுதல், அவன் அவனுடைய பாவத்திலிருந்து பண்புக்குரியவனாக குறித்துக்காட்டப்பட்டான், பிறகு அவர் அவனை அவனுடைய பாவத்திலிருந்து கொண்டு வந்தார்), ஏனெனில் அவன் விசுவாசித்திருந்தான், அவர் அவனுக்கு ஒரு அடையாளத்தை அளித்தார். இங்கே தான் என் அருமையான பிரஸ்பிடேரியன் மற்றும் பாப்டிஸ்டு நண்பர்களாகிய நீங்கள் அதைக் காணத்தவறுகிறீர்கள். பாருங்கள்?தம்மில் அவன் கொண்டிருந்த விசுவாசத்தை அவர் பெற்றுக்கொண்டார் என்பதன் ஆதாரமாக, ஒரு சாட்சியாக, விருத்தசேதனத்தின் முத்திரையை அவர் அவனுக்கு அளித்தார். ஆகவே அதன் காரணமாகத் தான் பவுல் அப்போஸ்தலர் 19ல் அப்பொல்லோவை தங்கள் மேய்ப்பனாகக் கொண்டிருந்த, யோவான் பிரசங்கித்த விதமாக அதை விசுவாசித்த அந்த பாப்டிஸ்ட் சகோதரரிடம், ''நீங்கள் விசுவாசித்தபோது பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?' என்றான். நீங்கள் பாருங்கள், அவர்கள் விசுவாசித்திருந்தனர். ஆனால் இன்னுமாக அவர்கள் குணப்படாதிருந்தார்கள். 26இப்பொழுது, நாம் மாற்றம் என்ற வார்த்தையை இன்றைக்கு தவறாக அர்த்தங்கொள்கிறோம். ஒருமனிதன் மது அருந்துவதை நிறுத்தி மற்ற எல்லாவற்றையும் நிறுத்தி சபைக்கு சென்றால்அல்லது சபையை சேர்ந்து கொள்வானானால் அவன் மாற்றப் பட்டவன் என்று நாம் கூறுகிறோம்.ஒருக்கால் அவன் சபையை சேர்ந்து கொள்ளலாம், ஆனால் அவன் மாற்றப்பட்டான் என்பதற்கான அடையாளம் அதுவல்ல. அவனுடைய பழைய ஜீவியமானது மரித்து பிறகு கிறிஸ்துவுக்குள்ளாக அடக்கம் பண்ணப்பட்டு புதியதான ஜீவியத்தின் உயிர்த்தெழுதலில் அவருடன் எழுந்து, பரிசுத்த ஆவியின் மூலமாகவே வருகின்றதான நித்திய ஜீவனின் ஜீவிக்கின்ற நம்பிக்கையை பரிசுத்த ஆவியானவர் அவனுக்குள்ளாக உருவாக்கும் வரை அவன் மாற்றப்படவில்லை. பாருங்கள்? 27இப்பொழுது, இப்பொழுது, அந்த மகத்தான வேதவசனத்தை நான் அறிவேன், நானே அதை பிரயோகிக்கிறேன் - இங்கே அதை எழுதிவைத்துள்ளேன் - பரி. யோவான் 5வது அதிகாரம், 24ஆம் வசனம். இது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஏனெனில் இயேசு இதைக் கூறினார்: ''மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. இதை நான் வாசிக்கட்டும். ஏனென்றால் அதை நான் சரியாக வாசிக்கையில் - பரி. யோவான் 5 இந்த வேத வசனத்தை நாம் பார்க்கையில் நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன், 5:24வது வசனம். என் வசனங்களைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குப்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ''என்னை விசுவாசிக்கிறவனுக்கு. இப்பொழுது, பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவை கிறிஸ்து என்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும் வேதவசனம் கூறுகின்றது. ஆகவே நீங்கள் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை பெறும்வரைக்கும் இயேசுதான் கிறிஸ்து என்று உங்களால் விசுவாசிக்க முடியாது. மேய்ப்பர் என்ன கூறுகிறாரோ அதை, தாய் என்ன கூறுகிறாரோ அதை அல்லது யாரோ ஒரு அருமையான பிரசங்கி கூறுவதை மாத்திரமே அவர்கள் கூறுகின்ற வேதவாக்கியங்களையே நீங்கள் கூறவோ அல்லது சாட்சி கொடுக்கவோ செய்கிறீர்கள். அவர் தம்முடைய உயிர்த்தெழுதலை உங்களுக்கு சாட்சியாய் அறிவிக்கும் வரை உங்களால் அதை அறிந்துகொள்ள முடியாது. பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவை கிறிஸ்து என்றுஒருவனாலும் சொல்ல முடியாது. 28ஆதலால், கேள்வி என்னவென்றால், ஒரு மனிதன் இரட்சிக்கப்பட வேண்டுமென்றால், அவன் கல்வாரியை நோக்கி பார்த்துக்கொண்டே, அந்த நிலையிலேயே அவன் மரிப்பானென்றால், அவன் இரட்சிக்கப்படுவான். நிச்சயமாக, அவன் இரட்சிக்கப்படுவான் என்று நான் விசுவாசிக்கிறேன். முன்பு அவன் ஒரு தருணம் பெற்றிராவிடில், அவன் கடந்து செல்வான் என்று விசுவாசிக்கிறேன். ஆனால் அது .... சிலுவையில் மரித்துக் கொண்டிருந்த அந்த கள்ளனைப் பாருங்கள். நினைவில் கொள்ளுங்கள், அதுதான் அவனுக்கு முதலும் முடிவான தருணமாயிருந்தது. நீங்களோ இந்த இரவைப் பெற்றிருக்கின்றீர்கள். உங்களுக்கு ஒரு இரவு இருக்குமானால் அந்த நேரம் வரைக்கும் நீங்கள் காத்துக் கொண்டிருக்க வேண்டாம், ஏனெனில் உங்களுக்கும் அந்த விதமாகவே இருக்காது. உங்களுக்கு மரணப்படுக்கையில் அறிக்கை செய்யும் தருணம் இல்லாமல் போகலாம். நான் உங்களுக்கு கூறுகிறேன், அவையெல்லாம் சரிதான், ஆனால் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பது என்பது சரியானதல்ல. உங்களுடைய மரணப்படுக்கைக்காக காத்திருக்க வேண்டாம்; சரியாக இப்பொழுதே இதை ஒரு மரணப்படுக்கையாக கருதுங்கள், ஏனெனில் இப்பொழுது நீங்கள் மரித்து பரிசுத்த ஆவியினால் மறுபடியும் பிறந்தவர்களாயிருங்கள். 29இப்பொழுது, அடுத்த கேள்வி... இப்பொழுது அதன் பேரில் ஒரு கேள்வி இருக்குமானால் உங்கள் கரத்தை மாத்திரம் உயர்த்துங்கள். என்னால் முடிந்ததைச் செய்ய எனக்கு மகிழ்ச்சி. பெந்தெகொஸ்தேயிற்கு பிறகு அப்போஸ்தலர்கள் இராப்போஜனம் எங்காகிலும் எடுத்துள்ளனர் என்பதை எங்காகிலும் உங்களால் காண முடிகிறதா? மக்கள் வார்த்தையை பகுத்தறிவதில்லை என்று பவுல் கூற முனைந்தானா? தேவனை தொழுதுகொள்வதற்கு பரிசுத்த ஆவியானவர் மாத்திரம் தான் வழியா? நீங்கள் திராட்சை ரசமும் பிஸ்கட்டும் சாப்பிட்டால் வியாதியும் நித்திரை உங்கள் மேல் வருமா? இப்பொழுது, இங்கே இந்த அருமையான நபர் அவர்கள் என்ன கேட்கின்றனரோ அல்லது அல்லது அவர்கள் அதை கேட்காமலிருப்பதோ, இந்த கேள்வியை உத்தமத்தோடும் ஆழத்தோடும் கேட்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை என்று நான் நம்புகிறேன். ஆகவே நான் - என் சகோதரன் அல்லது சகோதரி அல்லது யாராயிருந்தாலும், நீங்கள் எவ்விதம் கேட்டுள்ளீர்களோ அதே விதமாக நானும் மிகவும் உத்தமமாக ஆழமாக அதற்கு பதிலளிப்பேன். 30இப்பொழுது நீங்கள் என்னுடன் அப்போஸ்தலரின் புத்தகத்திற்கு திருப்ப நான் விரும்புகிறேன் - 42வது வசனத்திலிருந்து நாம் துவக்குவோம். அப்போஸ்தலர் 2வது அதிகாரம், நான் கூறின்விதமாக 42வது வசனத்திலிருந்து துவக்குவோம். இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், பவுல் இராப்போஜனம் எடுத்ததைக் குறித்தும், பிறகு பேதுரு சென்று அதை கைக்கொண்டதை வேதாகமம் எங்கே கூறுகிறது என்பதை என்னால் சரியாக கூறமுடியும் என்று நான் விசுவாசிக்கவில்லை; ஆனால் அவர்கள் சபையைக் குறித்து பேசும் பொழுது, ஒன்றாக இருந்த எல்லாரைக் குறித்தும் என்றே காணப்படுகிறது. பவுல் ஒன்றைப் பிரசங்கித்து, பிறகு அவன் செய்யாததை, மற்றவர்களிடம் செய்யுமாறு கூறியிருப்பான் என்பதை நான் விசுவாசிக்கவில்லை. ஆகவே அப்போஸ்தலர்களில் இதை நாம் காண்கிறோம் : அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும்..... அந்நியோந்நியத்திலும்.... (கவனியுங்கள்! சரீரமாகிய முழு சபை).... அப்போஸ்தலருடைய உபதேசத்திலும் மற்றும் அந்நியோந்நியத்திலும்..... (மற்றும், (and) அங்கே வாக்கியத்திற்கு இடையே வரும், இணைச்சொல் (Conjuction) பாருங்கள்?) (ஆங்கில வேதாகமத்தில் உள்ளபடியே - தமிழாக்கியோன்).... அப்பம் பிட்குத்லிலும்... (அது தான் இராப்போஜனம்) ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். 31பிரசங்கிகளாயிருந்த அந்த அப்போஸ்தலர்கள் தங்கள் உபதேசத்திலும், அப்பம் பிட்குதலிலும் (இராப்போஜனம்), அந்நியோந்நியத்திலும் மற்றும் ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். அப்படியானால், அப்போஸ்தலரிடமிருந்து அது இராப்போஜனத்தை எடுத்துப்போடுமென்றால், அது அப்போஸ்தலரிடமிருந்து ஜெபத்தையும் கூட எடுத்துப் போட்டுவிட்டதென்பதாகும். பாருங்கள்? நாம் இன்னுமாக தொடர்ந்து வாசிப்போம். பாருங்கள். எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள். காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் ஒவ்வொரு மனிதனுக்கும் பகிர்ந்து கொடுத்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து... (அது அப்போஸ்தலர்கள் மற்றும் எல்லாரும்).... அப்பம்பிட்டு.... (அவர்கள் கூடின ஒவ்வொரு தடவையும் இராப்போஜனம்)... 32அதுதான் ஆதி சபையின் மற்றும் அப்போஸ்தலர்களின் உபதேசமாக இருந்தது, அது, அவர்கள் ஒவ்வொரு தடவையும் ஒன்று கூடினபோது இராப்போஜனத்தை கைக்கொண்டார்கள். ஒவ்வொரு தடவையும்!இப்பொழுது, கிறிஸ்தவ சபைக்கு போகின்ற கிறிஸ்தவ மக்களாகிய உங்களை நான் அறிவேன் (நாம் அறிந்துள்ளபடி அந்த காம்பெல்லைட் சபை.... அவைகளில் இரண்டு உள்ளன, ஒன்று கிறிஸ்துவின் சபை ஸ்தாபனம், மற்றொன்று தான் காம்பெல்லைட் சபை), நீங்கள் நாங்கள் ஒவ்வொரு ஞாயிறு காலையிலும் அதைக் கைக்கொள்ளுகிறோம். அதன் பேரில் இருக்கிற வேதவசனம் கூட எங்களுக்கு தெரியும்' என்று கூறுகிறீர்கள். நீங்கள் பிரன்ஹாம் கூடாரம் செய்வதை விட அதற்கு மேலான ஒரு வேத வசனத்தை கொண்டிருக்கிறீர்கள். பிரன்ஹாம் கூடாரம் அதை மாதத்திற்கு ஒரு தடவை கைக்கொள்கிறது. ஆனால் வேதாகமம் நீங்கள் கூடி வரும்போதெல்லாம் என்று கூறுகிறது. அது சரி. அது ஒவ்வொரு தடவையும். அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்தில் தொடர்ந்து அநுதினமும் தரித்திருந்து... வீடுகள் தோறும் அப்பம் பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணினர். பாருங்கள், ஒவ்வொரு தடவையும் அப்போஸ்தலர்கள் தேவாலயத்தில் ஜெப குழுக்கள், கூட்டங்களை நடத்தி, ஒவ்வொரு வீடாக, அவர்கள் கூடி வந்தபோதெல்லாம் அப்பத்தைப் பிட்டு இராப்போஜனத்தைக் கைக்கொண்டனர். 33இப்பொழுது, பவுல், ஒன்று கொரிந்தியரில், இராப்போஜனத்தின்போது இங்கே நாம் வாசிக்கின்ற, அந்த 11வது அதிகாரத்தையும் கூட நாம் வாசிப்போம்..... நாம் அதை வாசிப்போம்... நான் அதை வாசிக்கிறேன், அதனால் உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும், ஒன்று கொரிந்தியர் 11வது அதிகாரம். இப்பொழுது பவுல் பேசுவதைக் கவனியுங்கள், 23வது வசனம். நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில் கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று ராத்திரியிலே அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம்பண்ணின பிறகு அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம்பண்ணின பின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தை எடுத்து:... (இப்பொழுது பாத்திரம்) ....இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம் பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தை தெரிவிக்கிறீர்கள். பார்த்தீர்களா? இது தான் இராப்போஜனம். ஜீவிக்கிற வார்த்தையாகிய கர்த்தருடைய சரீரமானது, கிறிஸ்து தாமே என்பதை நாம் உணர்ந்து அதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஞானஸ்நானம், கால் கழுவுதல் மற்றும் மற்றைய சபை ஒழுங்குகளைப் போன்றே இவைகளும் அடையாளங்கள் தான். ஆனால் அப்பம், அப்பமும் திராட்சரசமும் ஒரு இராப்போஜனத்திற்கு முற்றிலுமான அத்தியாவசியமான தேவையாகும். 34இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ.... இப்பொழுது, இங்கே கேட்கப்பட்ட கேள்வியானது: ''நீங்கள் திராட்சரசமும் பிஸ்கட்டுகளும் எடுப்பது, வியாதியும் நித்திரையும் உங்கள் மீது...'' பாருங்கள் அது... இந்த கேள்வி என்ன என்று நான் நினைப்பதென்னவென்றால், இருக்கின்ற ஒரேயொரு தொழுதுகொள்ளுதல் என்னவெனில், பரிசுத்த ஆவிக்குள் மாத்திரமே, பரிசுத்த ஆவிக்குள் தொழுதுகொள்வது. சரியாக - அதுதான் சத்தியமாகும். நீங்கள் தொழுதுகொள்ள வேண்டியது.... பரிசுத்த ஆவிக்குள் எல்லா தொழுதுகொள்ளுதலும், மேலும் பவுல் இங்கே கூற விழைவது என்னவெனில், இதை புசித்து பானம்பண்ணும் முன்னர் நீங்கள் பரிசுத்தஆவிக்குள் இருக்க வேண்டும், இல்லையெனில் உங்களுக்கு தானே ஆக்கினைத் தீர்ப்புவரும்படிக்கு ஆகும் என்பதே (சரியா?) - நீங்கள் இதைச் செய்யும் முன்னர், இந்த கட்டளையானது கைக்கொள்ளப்படும் முன்னர். 35இப்பொழுது, அதற்கு இன்னுமாக கூறத்தக்கதாக, இங்கே ஜோசபஸ் என்பவர் எழுதியுள்ள ஒன்றை நான் இங்கே வைத்துள்ளேன். அதில் அவர், ஆதி கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரணத்திற்குப்பிறகு, மனித மாம்சம் தின்பவர்கள் என கருதப்பட்டனர், ஏனெனில் அவர்கள் கர்த்தருடைய சரீரத்தை எடுத்து அதைப் புசித்தனர் என்று எழுதியுள்ளார். அவர்கள் (சீஷர்கள்) அவருடைய கல்லறையத் தோண்டி, அவருடைய சரீரத்தை எடுத்து, அதைத் துண்டுகளாக்கி அதைப் புசித்தனர் என்று அவர்கள் (ஜனங்கள்) நினைத்தனர். இது அவர்கள் இராப்போஜனம் எடுத்ததைக் குறித்ததே ஆகும். பாருங்கள்? இப்பொழுது, கவனியுங்கள், ஏன் இந்த வேதவசனம் - இங்கே எப்படி பவுல் கூறுகிறான் என்று பாருங்கள். எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து இந்த அப்பத்தில் புசித்து,.... அப்பத்தில் புசித்து. இப்பொழுது, இயேசுதான் ஜீவ அப்பம் என்பதை நான் அறிவேன்; அது உண்மை. ஆனால் இது ஞானஸ்நானத்தைப் போன்றே ஒரு அடையாளம் ஆகும். ஞானஸ்நானம் உங்களை இரட்சிக்காது; நீங்கள் இயேசு கிறிஸ்துவினுடைய மரணம், அடக்கம் உயிர்த்தெழுதலில் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள் என்பதை சபையாருக்கு சாட்சியாக அறிவிப்பதின் அடையாளம் தான் ஞானஸ்நானமாகும். அது உங்களை இரட்சிக்காது. தண்ணீர் உங்களை இரட்சிக்காது. உங்களை இரட்சிப்பது உங்கள் விசுவாசம் மாத்திரமே. ஆனால் ஞானஸ்நானம் என்பது ஒரு “கட்டளை ஆகும், அது செய்யப்பட வேண்டும், ஏனெனில் ஞானஸ்நானம் எடுக்கவேண்டும் என்று கூறிய பிறகு மறுபடியுமாக அப்படி செய்யத் தேவை இல்லை என்று தேவனால் கூறமுடியாது. அதே போன்று இராப்போஜனம் எடுங்கள் என்று கூறிய பிறகு மறுபடியுமாக அதை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று அவரால் கட்டளையிட முடியாது. நீங்கள் அதைக் கைக்கொள்ளத்தான் வேண்டும். அது தேவனோடு இருக்கின்ற மாறாத ஒரு கட்டளை ஆகும். 36என்னத்தினாலெனில் அபாத்திரமாய்ப் போஜனபானம் பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். இப்பொழுது, உங்களால் காண முடிகிறதா? கிறிஸ்துவுக்குள்ளாக இல்லாமல், ஆவியில் ஐக்கியங்கொள்ளாதிருக்கின்ற ஒரு கிறிஸ்துவன் இராப்போஜனத்தை எடுக்க முயற்சிப்பதைக்குறித்து தான்; அவன் எடுக்க தகுதியுடையவன் அல்ல. மேலும் அவன் சென்று புகைபிடித்து,பொய் சொல்லி, திருடி, விபச்சாரம் அல்லது அதைப் போன்றதைச் செய்து, அல்லது ஒரு கிறிஸ்தவ ஜீவியத்தை செய்யாமல் இந்த இராப்போஜனத்தை எடுப்பானானால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். அவன் ஜீவிக்கின்ற அந்த ஜீவியத்தை மக்கள் காண்கிறார்கள். பிறகு அவன் உள்ளே வந்து, கிறிஸ்துவின் சரீரம் மற்றும் - மற்றும் மரணத்திற்குரிய இந்த கட்டளையை, ஒழுங்கை எடுத்து, வார்த்தையாகிய கிறிஸ்துவை தன்னுடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டான் என்னும் அடையாளத்தை அவனுக்குள் எடுக்கையில், அங்கே ? இருக்கின்ற அந்த அடையாளத்தை எடுக்கையில், அவன் கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத் தீர்ப்பு வரும்படி போஜனபானம் பண்ணுகிறான். 37இன்னும், சில நிமிடங்களில் அந்த அதே கேள்வியை நான் எடுக்கபோகிறேன், நாம் அதை எடுப்போமானால், அது பரிசுத்த ஆவியின் தூஷணத்தின் அதே வரிசையில் வருகிறது. பாருங்கள்? ஏனெனில் ஏதோ ஒன்றை வெளிப்படையாக பிரசங்கித்து பிறகு நீ செய்யக் கூடாததை செய்வாயானால் நீ ஒரு மாய்மாலக்காரனாகக் காணப்படுகின்றாய். சரி! இதை நான் முடிக்கட்டும், பிறகு நாம் நிறுத்துவோம். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். நாம் நியாயந்தீர்க்கப்படும் போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். ஆகையால் என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள் (இப்பொழுது கவனியுங்கள்) ...ஒருவனுக்கு பசியிருந்தால்,...... 38உள்ளே வரவேண்டாம். ஏனெனில், இங்கே மற்றுமொரு வேதவசனத்தில், அவர்கள் இறைச்சியை, இவ்வளவு பானத்தை இன்னும் அதைப் போன்றவற்றை, உள்ளே கொண்டு வந்து, கர்த்தருடைய வீட்டை புசிக்கின்ற இடமாக ஆக்கி, கர்த்தருடைய போஜன பந்தியில் குடித்து வெறித்த நிலையில் இருந்தனர். இங்கே கொரிந்தியர் புத்தகத்தில் அது இருப்பதை நீங்கள் நினைவில் கொண்டுள்ளீர்கள். கர்த்தருடைய போஜன பந்தியில் குடித்து வெறித்திருந்தனர். ஆனால் பவுல் இங்கே கூறுகிறான்: ...நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடி வராதபடிக்கு, ஒருவனுக்கு பசியாயிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம் பண்ணுவேன். (பாருங்கள்) 39இப்பொழுது, நான் நினைப்பதென்னவெனில் பிஸ்கட் தின்பது... இப்பொழுது, ஒரு பிஸ்கட்டிற்கு பதிலாக வட்ட ரொட்டியை வைக்க வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. அது ஒரு பரிசுத்தமான புளிப்பில்லாத அப்பமாயிருக்க வேண்டும் என்றே நான் விசுவாசிக்கிறேன், எகிப்தில் செய்யப்பட்ட அந்த புளிப்பில்லாத அப்பத்தைப் போன்று அது புளிப்பில்லாத பரிசுத்த அப்பமாயிருக்க வேண்டும். அதே போன்று இரத்தமும் குடிப்பதற்கு திராட்சைப் பழச்சாற்றை உபயோகிக்க கூடாது, அது திராட்சை ரசமாக இருத்தல் அவசியம். திராட்சை பழச்சாறானது (Grape Juice) பழையதாகும் போது புளிப்பாகும், பிறகு கெட்டுப்போகும். ஆனால் திராட்சை ரசமோ (Wine) பழையதாகுகையில் இன்னுமாக சிறப்பையும் வீரியத்தையும் பெறும்; அது தன்னுடைய சக்தியை இழக்காது. கிறிஸ்துவின் இரத்தமும் புளித்து கெட்டுப்போகாது; அது பழையதாகையில், இன்னுமாக அது வீரியமடைந்து, ஒரு விசுவாசிக்கு நாட்கள் கடந்து செல்லச் செல்ல சிறப்பானதாக இருக்கும். ஆகவே இது திராட்சரசமும் அப்பமும் தான். இராப்போஜன அப்பமானது தங்களைத் தாங்களே அர்ப்பணம் செய்து, தேவனுக்காகத் தங்களையே அர்ப்பணித்துள்ள மக்களால் தான் செய்யப்பட வேண்டும். பாவிகள் சாபமிட்டு கூச்சல் போட்டு அசுத்தமானதை செய்து கொண்டிருந்த ஒரு சபைக்கு ஒருமுறை நான் சென்றேன், அவர்கள் இவ்வாறு செய்து கொண்டே ஒரு பழைய ரொட்டி துண்டை எடுத்து ஒருபழச்சாறில் (Grape Wine) தொட்டு சாப்பிட்டனர். என்னைப் பொறுத்தவரை அது முட்டாள்தனமான ஒன்றாகும். நான் விசுவாசிப்பதென்னவென்றால் அது சரியாக வேதாகமம் கூறியுள்ளவாறே அதேவிதமாகவே இருக்கவேண்டும், மேலும் வேதாகமத்திலிருந்து ஒரு இம்மியளவு கூட அது பிசகாமல், சரியாக அதேவிதமாகவே தரித்திருக்க வேண்டும். 40இப்பொழுது, கேள்வி! சகோதரன் பிரன்ஹாம், ஒருகாலத்தில் சாத்தான் (வானத்தில் இருந்தவனாக) பிறகு வெளியே துரத்தப்பட்டானா, அவனும் அவனுடைய தூதர்களும் கீழே பூமிக்கு வந்தார்களா, அல்லது அது யோவான் பத்ரு தீவில் கண்ட தரிசனத்தைப் போன்ற ஒன்றா இது? இதை ஏன் நான் கேட்கிறேனென்றால், அது ஒரு தரிசனமாகும் என்று எனக்கு கூறப்பட்டுள்ளது. யோவான் அதை ஒரு தரிசனமாகக் கண்டான், ஆனால் அதுவோ உண்மையாகவே நடந்த ஒரு சம்பவமாகும். நீங்கள் ஏசாயா ... 14:12க்கு திருப்புவீர்களானால். இப்பொழுது, இவை மெதுவாகச் செல்கின்றன. ஆனால் எனக்கோ இவையெல்லாம் - இவையெல்லாம் பாடங்களாயுள்ளன. இது ஏதோ ஒரு... ஒருக்கால் நீங்கள் நல்லது, இப்பொழுது அது எனக்கு தேவைப்படவில்லை'' என்று நினைக்கலாம். தேவனுடைய வார்த்தையின் பேரில் பரிசுத்த ஆவியானவர் எப்படியெல்லாம் போஷிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியாது. போஷிக்கப்படுதல் - அது வார்த்தையினாலேயே இருக்க வேண்டும், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய வார்த்தையின் பேரில் மாத்திரமே போஷிக்கின்றார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா? வேதம் அவ்வாறு கூறுகின்றது, ''மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான். அது சரியே! ஏசாயா 14ஆம் அதிகாரம், இப்பொழுது நாம் 12ஆம் வசனத்திலிருந்து துவக்கப்போகிறோம் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது லூசிபரைக் குறித்து வாசிப்போம். அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, ஓ லூசிபர் (ஆங்கில வேதத்தில் உள்ளபடி - தமிழாக்கியோன்) ...நீ வானத்திலிருந்து விழுந்தாயே!.... (வானத்திலிருந்து விழுந்தவன் - பரலோகத்தைச் சார்ந்த ஒரு தூதன்) அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, ஓ, லூசிபர், நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே நடந்து - விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும் நான் மேகங்களுக்கு மேலாக உயரத்தில் ஏறுவேன்; உன்னதமாணவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆகவே நீங்கள் பாருங்கள், அது ஒரு தரிசனம் அல்ல. நிச்சயமாகவே, லூசிபர் வானத்திலிருந்து வெளியே துரத்தப்பட்டான். 41இப்பொழுது, ஒரு நிமிடம் புதிய ஏற்பாடு, லூக்கா 10:18ற்கு திருப்பி இயேசு என்ன கூறினார் என்பதைப் பார்ப்போம். லூக்காவின் புத்தகத்தில், இந்த கேள்விகளை புரிந்துகொள்ள யாசிப்பவர்கள், இப்பொழுது உங்கள் வேதாகமங்களை லூக்கா10:18க்கு திருப்புங்கள், அவர்களை அவர் நோக்கி, (இயேசு பேசுகின்றார்) சாத்தான் மின்னலைப் போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். பாருங்கள், சாத்தான் தேவனுடைய மூல பிரதான தூதனாவனன். ஒரு சமயத்தில் அவன் பரலோகத்தில் வாசம் செய்தான். தேவனுக்கடுத்ததாக வானங்களில் அவன் ஒரு சமயத்தில் மிகப்பெரிய நபராக இருந்தான். தேவனுடன் ஐக்கியமாக அவன் தேவனுடைய வலதுகரமாக விளங்கினான், ஆகவே அவன் தன் இருதயத்தில் மேட்டிமை கொண்டவனாக ஆனான். 42இன்றைக்கும் மக்கள் அந்த விதமாகத்தானே ஆகின்றார்கள்? தேவன் ஒருவனை ஆசீர்வதித்து அவன் பேரில் சிறிது நம்பிக்கையை வைப்பாரானால், பிறகு அவன் எல்லாம் தெரிந்த ஒருவன் என தன்னை நினைத்துக்கொள்கிறான். பிறகு அவன் ஒரு ... அவன் ஒரு ஸ்தாபனத்தையோ அல்லது வித்தியாசமாகத் தென்படுகிற ஏதோ ஒன்றையோ அவன் செய்ய ஆரம்பித்துவிடுவான். ''ஓ லூசிபர் நீ வானத்திலிருந்து விழுந்தாயே!'' அது தம்மால் தொடர்பு கொள்ளக்கூடிய, ஒன்றைச் செய்ய தேவன் அழைக்கும் வரை தாழ்மையுள்ளவனாக, கீழ்ப்படிதலுள்ளவனாக அப்படியே தரித்திருக்கின்ற, தேவனால் ஆசீர்வதிக்கப்பட இயலுகின்ற வகையில் உள்ள ஒரு மனிதன், மேலும் தன்னை ஒரு தூதனாகவோ அல்லது தேவனாகவோ பாவிக்காமல், இன்னுமாக தன்னைத்தான் ஒரு மனிதனாகவே பாவிக்கின்ற ஒரு மனிதனை கண்டெடுக்க தேவன் மிகவுமாக பிரயாசப்படுகின்றார். அந்த மனிதன் ஆசீர்வதிக்கப்பட்ட, உடனே, தனக்கு ஒன்று அளிக்கப்பட்டவுடன், அவன் ஒரு தேவனாக ஆக விரும்புகிறான்; ஒரு தூதனாக ஆக விருப்பம் கொள்கிறான். அவன் ஒரு மகத்தான மனிதனாக ஆக விரும்புகிறான். ''நான் செய்வது தான், அது .... நான் மற்றும் என் மற்றும் என்னுடையது .... அது தவறான ஒருமனப்பான்மையாகும். தம்மால் ஆசீர்வதிக்கப்படும் வகையில் உள்ள, ஆசீர்வாதங்கள் அவன் மேல் ஊற்றப்பட்டு பிறகு - பிறகு இன்னும் அதிகமாக அவரால் ஆசீர்வதிக்கப்பட்டு, இன்னும் சிறியவனாக ஆகின்ற ஒரு மனிதனை தேவன் கண்டுபிடிக்க முயற்சி செய்துகொண்டேயிருக்கிறார். ஆகவே நீ ஒன்றுமில்லாதவனாக ஆகும் வரை தேவனிடமிருந்து ஒன்றும் உன்னால் இன்னுமாக பெறமுடியாது. நீ உன்னைத் தானே சிறியவனாக ஆக்கிக்கொள்ள வேண்டும். தன்னை தானே உயர்த்திக்கொள்கிறவனை தேவன் தாழ்த்தி விடுகின்றார். தன்னைத் தானே தாழ்த்திக்கொள்ளுகிறவனை தேவன் உயர்த்துகின்றார். நீ பெரியவனாக ஆகும் முன்னர், நீ சிறிவனாக ஆகவேண்டும். அப்போது உன்னாலேயே பெரியவனாக இருக்க முடியாது; உனக்குள்ளாக தேவன் பெரியவராக இருக்கின்ற வகையில் தான் நீ பெரியவனாக இருக்க முடியும். பாருங்கள்? 43ஆகவே இன்றைக்கு லூசிபர் பூமியின் மேல் இருந்து, உலகத் தோற்றத்திற்கு முன்னே அவன் ஆரம்பித்த அந்த அதே நோக்கத்தை நிறைவேற்றத்தக்கதாக சபைக்குள் கிரியை செய்து முயற்சித்துக்கொண்டிருக்கிறான். லூசிபர் வானத்திலிருந்து வெளியே உதைத்து தள்ளப்பட்டான். சரி. இதைக்குறித்து வேறொன்றும் உள்ளதென்று நான் நம்புகிறேன், எசேக்கியல் 28 ஆம் அதிகாரம், 12வது வசனம். எசேக்கியல் 28 : 12 என்ன கூறுகிறதென்று நாம் பார்ப்போமாக. ஆகவே இதை நாம் ஆராய்கையில், கர்த்தர் உரைக்கிறதாவது என்ன என்பதை நாம் காண்கையில், அப்பொழுது உண்மையாகவே அவன் வானத்திலிருந்து விழுந்தானா அல்லது அது ஒரு தரிசனம்தானா என்று நாம் அறிந்து கொள்ளலாம் - 28 மற்றும் 12. சரி. 28:12, இதைத்தான் குறித்து வைத்துள்ளேன் என்று நான் விசுவாசிக்கிறேன். சரி. இங்கே நாம் ஆரம்பிப்போம். இப்பொழுது, இங்கே இது ஒரு மகத்தான காரியமாகும்; இதன் பேரில் சிறிது பிரசங்கிக்க நமக்கு சமயமிருந்தால் நலமாயிருக்கும் என்று விரும்புகிறேன். (புரிகின்றதா?), ஏனெனில் உண்மையாகவே ஏதோ ஒன்று உள்ளது. 44இப்பொழுது, வானத்தில் லூசிபர் தன்னைத்தானே உயர்த்திக்கொள்ள முயற்சித்ததையும், தன்னுடைய எஜமானனுக்கும் மேலாக சிறிது பெரியவனாக இருக்க வேண்டும் என்று எண்ணி, இதன் பேரில் அடிப்படையாகக் கொண்டு பேச முற்பட்டேன். ஆகவே அவன் மிகாவேலுக்கு துரோகம் செய்து தனக்காக வடக்கில் ஒரு பெரிய இராஜ்யத்தை உண்டாக்கிக் கொண்டு கீழே வந்தான். இப்பொழுது அவனும் அவனுடைய தூதர்களும் வெளியே தள்ளப்பட்டார்கள். அந்த நபர் கேட்டது வெளிப்படுத்தல்.... அது வெளிப்படுத்தல் 12, பத்மு தீவில் கண்டது. ஆனால் இப்பொழுது இங்கே 12 வது வசனத்தை கவனியுங்கள், அவன் மனிதனுடைய இராஜ்யத்தில் எப்படி அவன் உட்கார்ந்துள்ளான் என்று கவனித்துப் பாருங்கள். வானத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு தேசத்தையும் பிசாசானவன் தன் கட்டுக்குள்வைத்திருக்கிறான் என்பதை இங்கே எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். அமெரிக்காவை இயக்கிக் கொண்டிருப்பது பிசாசுதான். அமெரிக்க ஐக்கிய நாட்டினுடைய அரசாங்கம் பிசாசுதான். ஜெர்மனியின் அரசாங்கம் பிசாசுதான். வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாட்டையும் இயக்கிக் கொண்டிருப்பது பிசாசுதான். அவன் ஒவ்வொரு நாட்டையும் தன் கட்டுக்குள் வைத்திருக்கிறான் என்று வேதாகமம் கூறுகின்றது. மத்தேயு 4ஆம் அதிகாரத்தை வாசித்துப் பாருங்கள். சாத்தான் இயேசுவை உயர்ந்த மலையின் மேல் கொண்டுபோய் உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவருக்கு காண்பித்து, அவைகள் தன்னுடையவை என உரிமை கோரி, ''நீர் என்னை பணிந்துகொண்டால் இவற்றை உமக்குத் தருவேன்“ என்று கூறினான். ''சாத்தானே, நீ பொய் சொல்கிறாய்'' என்று இயேசு கூறவேயில்லை. அவையெல்லாம் அவனைச் சார்ந்திருந்தன என்பதை அவர் அறிந்திருந்தார். ஆனால் வெளிப்படுத்தல் புத்தகத்தில் வானங்களே, பூமியே களிகூருங்கள், உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தரும் அவருடைய கிறிஸ்துவுக்கு முரிய ராஜ்யங்களாயின. அவர் பூமியின்மேல் ராஜ்யபாரம்பண்ணுவார்'' என்று கூறப்பட்டுள்ளது. ஆயிரவருட அரசாட்சியில் எல்லா அரசாங்கங்களும் ராஜ்யங்களும் உடைந்து போகும் என்றும், அவைகளெல்லாம்வற்றின் மேலும் அவர் தேவனும், அதிபதியுமாயிருப்பார் என்றும் இயேசு அறிந்திருந்தார். அவையெல்லாவற்றிற்கும் சுதந்திரவாளி அவர் தான் என்று அறிந்திருந்தார், ஆதலால், அவர் சாத்தானிடம் ''அப்பாலே போ சாத்தானே!'' என்றார், ஏனெனில் தாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அவர் அறிந்திருந்தார். 45இப்பொழுது இதைக் கவனியுங்கள், இந்த தீர்க்கதரிசி எசேக்கியேல் மேலிருந்த கர்த்தருடைய ஆவியானவர், இந்த ராஜாவிடம் பேசிக்கொண்டிருக்கவில்லை, ஆனால், அந்த ராஜாவிற்குள்ளிருந்த ஆவியிடம் பேசிக் கொண்டிருந்தான். இதை கவனியுங்கள். எப்படி சபையானது மனிதனுடைய ஸ்தாபனங்களை எடுத்துக்கொண்டதினால் தவறான பாதையில் சென்றுவிட்டது என்று நான் இன்று காலை வேதவசனங்களில் காண்பித்தது உங்களுக்கு நினைவிலிருக்கும். அதே காரியம் தான், இஸ்ரவேலானது தேவனை தன்னுடைய ராஜாவாக இராதபடி புறம்பாக்கி, சவுலை ராஜாவாக கொண்டிருக்க விரும்பி பாதையை விட்டகன்றது. பிறகு அவர்களுடைய உண்மையான ராஜாவாகிய இயேசு வந்தபோது, அவரை அவர்கள் அறியாதிருந்தனர், ஏனெனில் அவருடைய - அவருடைய பிரசங்கமும் அவருடைய உபதேசமும், பூமிக்குரிய ராஜாக்களைவிட மிகவும் வித்தியாசமாக காணப்பட்டு அவரை அவர்கள் அறியாமல் போனார்கள். இன்றைக்கும் பரிசுத்த ஆவியானவராகிய சபையின் ராஜா, அவர் இங்கிருக்கையில், மக்களை புதுப்பிக்கத்தக்கதாக, அவர்களுக்கு புதிய பிறப்பை அளிப்பதற்காக அவர் சபைக்குள் வருகையில், அது இந்த ஸ்தாபனங்கள் மற்றும் அமைப்புகளைக் காட்டிலும் மிகவும் வித்தயாசமாகக் காணப்படுவதால் இந்த மக்கள் ஆ, அவர்கள் எனக்கு பரிசுத்த உருளையரைப் போன்று காணப்படுகின்றர் என்கின்றனர். பாருங்கள்? 46அது உனக்கு எந்தவிதமாகத் தென்படுகிறது என்றல்ல, அதைக் குறித்து தேவனுடைய வார்த்தை என்ன கூறுகின்றது என்பது தான். பெந்தெகொஸ்தே நாளின் போது என்ன ஆயிற்று, அது எந்தவிதமாக தென்படுகிறது? மற்ற சமயங்களில் அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றபோது; அது எந்தவிதமாகத் தென்படுகிறது? ஸ்திரீகளும், புருஷர்களும் கன்னி மரியாள் மற்றும் அவர்களெல்லாரும் குடித்து வெறித்த மனிதனைப் போன்று தள்ளாடி, பரியாச உதடுகளாலும், மற்றும் அந்நிய பாஷைகளாலும் கூச்சலிட்டு, புரண்டு, ஒரு பைத்தியக்கார கூட்டத்தைபோன்று சத்தமிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு தாங்களே மரித்துக்கொண்டிருந்தனர். அப்போது பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குள்ளாக வந்துகொண்டிருந்தார். அப்பொழுது அவர்கள் உலகத்தை தீப்பற்றிக் கொள்ளச் செய்தனர். இன்றைக்குள்ள தேவையென்னவெனில் தங்களுக்குத் தாங்களே மரித்து, தங்களுக்கு தாங்களே அழுகிப்போய், ஒவ்வொரு காரியத்தையும் பின்பாகச் சுட்டெரித்து எல்லாவற்றையும் கிறிஸ்துவுக்கு சரணடையச் செய்யும் மனிதர்தான். 47இப்பொழுது, அந்த ராஜாவுக்குள்ளிருந்த பிசாசிடம் பரிசுத்த ஆவியானவர் பேசுவதை கவனியுங்கள். இந்த ராஜாவை கட்டுக்குள் வைத்திருந்த இவன் யார் என்பதை கவனியுங்கள். அங்கே கீழ்த்தரமான நிலையில் காணப்பட்ட ஆடைகளை அணிந்திருந்த அந்த பெண்கள் கூட்டத்தை, அந்த பெண்ணைப் பற்றி என் மனைவி கூறினதை நான் இக்காலை கூறினது உங்களுக்கு நினைவிலிருக்கிறதா? சரியா? ''அவர்கள் சரியான மனநிலையில் இல்லாமல் இருந்திருக்கக்கூடும். ஒரு மனநிலை சரியாயில்லாத ஒரு பெண்தான் அந்த விதமாக தன் நிர்வாணத்தை வெளிக்காட்டுவாள் என்று கூறினாள். நான், ''தேனே, அவள் ஒரு அமெரிக்க பெண்; அவ்வளவே தான். இங்கே அது வாடிக்கையாய் நடக்கிற ஒன்றுதான்“ என்றேன். பாருங்கள், அவர்கள் தங்கள் கல்வியறிவின்படி செயல்படுகின்றனர். நீங்கள் அறிவின்படி, உங்கள் சிந்தையின்படி செயல்படு வீர்களானால், நீங்கள் பிசாசினால் இயக்கப்படுகிறீர்கள். பிசாசானவன் மனிதனின் மூளையை எடுத்துக்கொண்டான், ஆனால் தேவனோ மனிதனின் இருதயத்தை எடுத்துக்கொள்கிறார். நீங்கள் ஏதோ ஒன்றைக் காணும்படியாக பிசாசானவன் செய்வான். நீங்கள் ''நல்லது, அது சரிதான், அது சரிதான், யோசியுங்கள், சிந்தித்துப் பாருங்கள்'' என்று கூறுகிறீர்கள். ஆனால் வேதாகமம் நம்முடைய யோசனைகளை புறம்பாக்கி நம்மால் காணமுடியாதவைகளை விசுவாசத்தினாலே நாம் விசுவாசிக்கிறோம். தேவன் மனித இருதயத்தின் மீது வருகையில் அதைத் தான் செய்கின்றார். 48ஏதேன் தோட்டத்திலே பிசாசானவன் மனிதனுடைய மூளையை எடுத்தான் : தேவனோ அவனுடைய இருதயத்தை எடுத்தார். அந்த மனித இருதயம் தான் தேவன் வாசம்பண்ணுகிற தேவனுடைய சிங்காசனமாக இருக்கின்றது. ஆகவே இப்பொழுது அது அறிவு பூர்வமாக ... நிச்சயமாக, தேவனால் பிறந்த எந்த ஒரு மனிதனோ அல்லது பெண்ணோ , தாங்கள் எந்த இராஜ்யத்திலிருந்து வந்துள்ளனரோ அந்த விதமாகவே நடந்துகொள்வார்கள். அல்லேலூயா அது என்னை சத்தமிடச் செய்கிறது. ஏன்?ஏனெனில் நீங்கள் மரணத்திலிருந்து ஜீவனுக்குள் வந்திருப்பதனால், நீங்கள் பாவத்தை வெறுத்து, மேலும் நீங்கள் தேவனை நேசிக்கிறீர்கள்; ஆதலால் நீங்கள் மரித்தாலும் அல்லது மரிக்காமலிருந்தாலும் அதை எதிர்த்து நிற்பீர்கள். அது தவறாயிருப்பதால், அதை தவறு என்று கூறி அதை எதிர்த்து நின்று தேவனுக்கு முன்பாக நீங்கள் உத்தமராய் நடப்பீர்கள். அது உங்களுடைய ஆவி , உங்களுக்குள் இருக்கின்ற அந்த ஜீவனானது வேறொரு இடத்திலிருந்து வந்திருக்கிறது என்று காண்பிக்கின்றது, அங்கே அது பரிசுத்தமாகவும், சுத்தமாகவும், கற்புடையதாகவும், கறைபடாததாகவும் இருக்கிறது. 49தெய்வீக சுகமளித்தல்?'' என்று நீங்கள் கேட்கலாம். நிச்சயமாக! தெய்வீக சுகமளிப்பவர் எங்கே இருக்கின்றாரோ அங்கிருந்து தான் என்னுடைய ஆவியும் வந்திருக்கிறது. தெய்வீக சுகமளித்தலின் தேசத்திலிருந்து தான் நாம் வந்துள்ளோம். ஆமென்! நீங்கள், ''தேவன் இருந்த இடத்திலிருந்தா'' எனலாம். நிச்சயமாக, தேவன் இருந்த இடத்திலிருந்துதான் வந்துள்ளோம். நாம் ஆபிரகாம் ஈசாக்கைப் போல பரதேசிகளும் அந்நியர்களுமாயிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவரின் நிழலாட்டம் அவர்கள் மேல் வந்தபோது அவர்கள் அந்த தேசத்தினூடாகச் சென்று தாங்கள் பரதேசிகளும் அந்நியர்களுமென்று அறிக்கை செய்தனர். தேவன் தாமே கட்டி உண்டாக்கின அந்த நகரத்தை அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர். இப்பொழுதோ, அது நமக்குள் ஜீவிக்கின்றது என்பதற்கான ஆதாரத்தை நிச்சயத்தை நாம் பெற்ற பிறகு, எவ்வளவாக நாம் பரதேசிகளும் அந்நியர்களுமாயிருந்து, உலகத்தினூடாக நடந்து, தீய காரியங்களிலிருந்து நம்முடைய தலைகளை திருப்ப வேண்டியவர்களாயிருக்க வேண்டும், ஏனெனில் நாம் வேறொரு தேசத்தைச் சார்ந்தவர்கள், அப்பாற்ப்பட்ட மக்கள். நிச்சயமாக! 50இப்பொழுது நாம் எசேக்கியேல் 28:12 வாசிக்கையில் பிசாசானவன் இந்த உலகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை கவனியுங்கள். மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக் குறித்துப் புலம்பி, அவனை நோக்கி கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது ..... (இப்பொழுது கவனியுங்கள்: அந்த ராஜாவிற்குள்ளே இருந்த அந்த ஆவியிடம் அவர் பேசுகிறார். புரிகின்ற தா?). கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால் நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம், நீ ஞானத்தால் நிறைந்தவன்...... பூரண அழகுள்ளவன். (சாத்தான், பிரதான தூதர்களிலேயே மிகவும் அழகாக சாத்தான் காணப்படுவதை பார்த்தீர்களா?) நீ .... ஏதேனில் .... தீருவின் ராஜா அந்த நேரத்தில் ஏதேனில் இருந்திருக்க மாட்டான், ஏனெனில் அது நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஒன்றாகும். பாருங்கள்? “நீ ஏதேனில் இருந்தவன்'', அவர் பேசிக்கொண்டிருப்பது யாரிடம்? அந்த ராஜாவிற்குள்ளிருந்த சாத்தானிடம் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். அல்லேலூயா சகோதரனே, நான் பக்தி வசப்படுகிறேன். அப்போது.... 51அப்படியானால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் கிரியை நடப்பிக்கப்படுகிற மக்களை தூஷித்து ஏளனம் செய்கிற மக்களைக் குறித்தென்ன? இப்படிப்பட்ட மக்களை அவர்கள் பரிகசிக்கும்போது அவர்கள் பரிசுத்த ஆவியை தூஷிக்கிறார்கள், அது முற்றிலும் மன்னிக்கப்பட முடியாத ஒன்றாகும். நீ அந்த மனிதனைக் குறித்துப் பேசவில்லை, அந்த மனிதனுக்குள் அசைவாடிக் கொண்டிருக்கும் ஆவியானவரிடம் தான் நீ பேசிக்கொண்டிருக்கிறாய். நாம் ஒருவருக்கொருவர் கனம்பண்ணி, ஒருவரையொருவர் நேசித்து, ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி, ஒவ்வொருவரைக் குறித்து நன்மையானதையே பேசுங்கள். இதைத்தான் நாம் செய்ய வேண்டும். இப்பொழுது, இதைக் கவனியுங்கள். சரி. ... நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரை மோதிரம், நீ ஞானத்தால் நிறைந்தவன்.... பூரண அழகுள்ளவன் நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம் புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகல வித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. 52இதோ லூசிபர். ஒரு காலத்தில் அவன் ஏதேனில் வாசம் செய்தான். இப்பொழுது, இன்னும் ஒருநிமிடத்தில் நாம் அந்த கேள்வியைப் பார்க்கப்போகிறோம், ஏதேனில் லூசிபர், ஏனெனில், மிகவும் கவனமாகக் கையாள வேண்டிய சர்ப்பத்தின் வித்தைக் குறித்ததானது இங்கே எங்கேயோ உள்ளது. நான் அதைக் கடைசியில் பார்க்கலாம் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவன், பிசாசானவன் வானத்திலிருந்து உதைத்து வெளியே தள்ளப்பட்டான். அவன் எந்த நோக்கத்திற்காக பரலோகத்தில் பிரயாசப்பட்டானோ, அதை, அந்த நோக்கத்தை, அவன் பூமியின் மீது வந்த பிறகு, அதை நிறைவேற்றிக் கொள்ள அவன் தன்னால் இயன்ற அளவிற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறான். அவன் ராஜாக்களிடமும் அதிபதிகளிடமும் செல்கிறான். அவன் அவர்களை அடைந்தவுடன், பிறகு நேராக சபைக்கு வந்து மக்களை அல்லது பிரசங்கியை அடைகின்றான். அப்பொழுது பிரசங்கியிடமிருந்து நேராக சபையார் மத்தியில் சென்று அந்த சபையாரை அந்த அதே பாதிப்பிற்குள், செல்வாக்கிற்குள் கொண்டு வருகிறான், அந்த அதே பிசாசானவன் அதே காரியங்களைச் செய்கிறான். ''உனக்குத் தெரியுமா, நீ ஒரு பிரஸ்பிடேரியன், நீ ஒரு பரிசுத்த உருளையனாக இருக்க முடியாது. நீ இது, அது அல்லது மற்றவனாக இருக்கையில் அவர்கள் மத்தியில் இருந்து கொண்டு, உன்னை நீயே ஏன் அவமானம்படுத்திக்கொள்ள வேண்டும். ஏன், அந்த தெருவில் இருக்கின்ற அந்த பழைய கூடாரங்களில் அல்லது சபைகளில் உட்காருவதைவிட சிறந்தது உனக்குத் தெரியுமே என்ன, அந்த மக்களுக்கு மனநிலை பாதித்து பித்து பிடித்திருக்கிறது. ''இல்லை, இவர்கள் அவ்விதம் இல்லை. இல்லை, அவர்கள் அவ்விதமாக இல்லை; அவர்கள் தங்கள் இருதயத்தின்படியே உள்ளனர்; அவ்வளவுதான். அவர்கள் மனநிலை பாதிக்கப்படவில்லை, அவர்கள் தங்கள் இருதயத்தின்படியே ஆட்கொள்ளப்பட்டுள்ளனர். தேவன் அவர்களுடைய இருதயத்தில் வாசம் செய்கிறார், ஆதலால் அவர்கள் அவருக்கு சொந்தமான ஜனம், ராஜரீகமான ஆசாரியக் கூட்டம், ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகிறவர்கள். அதை உணர்ந்தாலும் அல்லது இல்லையென்றாலும் அவர்கள் தங்கள் உதடுகளின் கனிகளாகிய ஸ்தோத்திர பலிகளைக் செலுத்துகின்றனர். அந்தப் பாடலை எழுதினவன் ''சில சமயங்களில் அவரை நான் காண்பதில்லை, நான் அவரை நம்புகிறேன், அவரைத் துதிக்கிறேன்'', என்றான். 53“நல்லது, நான் சபைக்குச் செல்வேன், அதை நான் உணர்ந்தால் நான் கர்த்தரைத் துதிப்பேன்” என்று நீங்கள் கூறலாம். நல்லது இப்பொழுது ஒரு ஆசாரியன் பலியைச் செலுத்த விருக்கிறான். சபையார் தான் ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்துகிற தேவனுடைய பிரதான ஆசாரியர்கள் ஆவர்; அதுதான் உங்கள் உதடுகளின் கனிகளாகிய தேவனுக்கான ஸ்தோத்திரங்கள். நீங்கள் சென்று, “நல்லது, நான் அதை உணர்ந்தேன், நான் சென்று யாருக்காவது சாட்சி சொல்லுவேன்'' என்று கூறலாம் . நல்லது, எப்படியாயினும் அதைச் செய்யுங்கள்! ஒரு பலியைச் செலுத்த சகோதரனே, நீ ஒரு பிரதான ஆசாரியனாயிருந்தால், நீ அதைச் செய்யவேண்டுமா அல்லது வேண்டாமா என்று உணர்ந்தாலும் சரி, அது உன்னுடைய இருதயத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. நீ சென்று எப்படியாயினும் அதைச் செய், ஏனெனில் நீ ஒரு பலியைச் செலுத்த வேண்டியவனாக இருக்கிறாய், செய்வதற்கு கடினமான ஒன்றுதான். எப்படியாயினும் அதைச் செய், ஏனெனில் தேவன் இந்த இருதயத்தில் வாசம் செய்வதால் நீங்கள் ஒரு ஆவிக்குரிய ஆசாரியத்துவம் உடையவர்கள்; தேவனுக்கு ஸ்தோத்திரத்தை ஏறெடுக்கும் ராஜரீக மக்கள். 54இப்பொழுது, நீங்கள் சாத்தானைச் சார்ந்தவர்களாயிருந்தால் அந்த மக்களை விட சிறிது சிறந்தவர்கள் நீங்கள் தான் என எண்ணுவீர்கள். இப்பொழுது, எது சரியென நீங்கள் எப்படி அறிந்து கொள்ளப்போகிறீர்கள்? வேதவாக்கியங்களின்படி அதை எடுங்கள். ஒரு மனிதன் தேவனால் பிறந்தவனாக இருப்பானானால், எழுதப்பட்ட ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையையும் அவன் விசுவாசிப்பான், இன்றைக்கு அவர் மகத்தானவராக இருப்பது போல என்றென்றும் அவர் இருப்பார் என்றும், அவர் மாறாதவர் என்றும், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் என்றும் அவன் கூறுவான். அவன் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தால், பெந்தெகொஸ்தே நாளில் அவர் அளித்த அதே பரிசுத்த ஆவியை அவன் பெற்றிருக்கிறான், அதேவிதமாக அது அவனை கிரியை நடப்பிக்கச் செய்து அதே காரியங்களை அவன் செய்யும்படிக்குச் செய்யும். அவன் தேவனுடைய ஆவியினால் பிறந்திருப்பானானால், மாற்கு 16ல் இயேசு,''விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும்“ என்று கூறினார். உண்மை! ஆகவே அவன் ”நான் ஒரு விசுவாசி என்று கூறி, அந்த அடையாளங்கள் அவனைப் பின் தொடரவில்லையெனில், அவன் ஒரு பாவனை விசுவாசியாக இருக்கிறான், ஒரு விசுவாசி அல்ல. 55மூன்று வகையான மக்கள் உள்ளனர், ஒன்று விசுவாசி , ஒன்று பாவனை விசுவாசி , மற்றும் ஒரு அவிசுவாசி. இந்த மூன்று வகையினர் மட்டுமே உள்ளனர். அநேக பாவனை விசுவாசிகள் உள்ளனர், அநேக உண்மையான விசுவாசிகள் இருக்கின்றனர்; அநேக அவிசுவாசிகளும் இருக்கின்றனர். ஆனால் நீ ஒரு உண்மையான விசுவாசியாய் இருப்பாயானால், இயேசு, 'விசுவாசிக்கிறவர்களை இந்த அடையாளங்கள் பின் தொடரும். என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள், சர்ப்பங்கள் மேல் அவர்கள் காலை எடுத்து அடியெடுத்து வைக்க நேரிட்டாலும் (சகோதரன் இவான்ஸ்) அது அவர்களுக்கு தீங்குசெய்யாது. அவர்கள் வியாதியஸ்தர் மேல் தங்கள் கைகளை வைப்பார்களானால் அவர்கள் சொஸ்தமாவார்கள்!'' என்று கூறினார். ஓ, தேவனுடைய வார்த்தை அவ்வளவு உண்மையானது. அதிலிருந்து எதையும் எடுத்துப்போட நமக்கு எந்த உரிமையும் கிடையாது. அந்த வார்த்தையோடே எதையாகிலும் எடுத்துப்போட்டால் அல்லது கூட்டினால், அவனுடையது ஜீவ புத்தகத்திலிருந்து எடுத்துபோடப்படும். தேவன் மிகவும் பரிபூரணமுள்ளவர், ஆதலால் ஒவ்வொரு வார்த்தையும் பரிபூரணமாயிருந்து, ஒவ்வொரு வார்த்தையும், தேவனுடைய ஒவ்வொரு கட்டளையும் ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்தல் வரை அதேவிதமாக இருக்க வேண்டும். ஆனால் நீங்களோ அதைக் குறித்து இங்கே ஏதாவதொன்றைக் கூறுவீர்கள் அல்லது சிறிது மாற்றிவிடுகிறீர்கள். 56ஒரு நாள் நான் சகோதரன் சார்லி மற்றும் சகோதரன் உட் அவர்களுடன் ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்திருந்தேன்; நாங்கள் கெண்டக்கியில் வேட்டையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு துப்பாக்கியுடன் வேட்டையாடினோம். நான் .... சகோதரன் சார்லி சகோதரன் உட் அக்காலை தங்கள் வேட்டையை சுட்டிருந்தனர். சுமார் 50 கெஜம் தூரத்தில் அந்த பெரிய இடம், அணிலைப் போன்று பெரிய இடத்தில் ஒரு இலக்கை சுட்டுக் கொண்டிருந்தனர். ''அதுசரி“ என்று அவர்கள் கூறினர். நான் அங்கு சென்றேன். நான் 50 கெஜத்தில் ஆணி அடித்துக் கொண்டிருந்தேன். நான் அணிலின் கண்ணை சரியாக சுடாமல் அதன் கன்னத்தில் சுட்டு விட்டேன். நான் “அது சரியல்ல; என் துப்பாக்கி பழுதடைந்தது” என்றேன். நான் நாள் முழுவதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். அடுத்த மாலையில் நான் சீக்கிரமாகச் சென்றேன். அநேக் குண்டுகளைச் சுட்டுப் பார்த்தேன். நான்... நான் வலதுபக்கம் அதை அங்குலத்திற்கு சிறிது நான் சுட்டேன். ஏன், அது அந்த அணிலின் தலையில் எப்படியாவது சுட்டுவிடும். 57ஆகவே சார்லி மற்றும் அவர்களும் அடுத்த நாள் காலை அங்கு இருந்தனர், துப்பாக்கிகள் சுட்டுக்கொண்டிருந்தன, அணில்களை சுட்டுக் கொண்டிருந்தன, நானோ ஒரு மரத்தின் பின்பாக உட்கார்ந்து கைகளைப் பிசைந்து “ஓ, என் துப்பாக்கிக்கு என்ன ஆயிற்று?'' என்று கூறிக் கொண்டிருந்தேன். நான் மிகவும் வெட்கப்பட்டு, முழங்காலிட்டு, ”ஆண்டவராகிய தேவனே, எனக்கு என்ன ஆனது என்று எனக்குத் தெரியவில்லை. நீர் ஏன் இவ்வாறாக கவலைப்படும்படிக்கு விட்டு விட்டீர்? நான் ஏன் இவ்வாறு இருக்க வேண்டும்? அங்கே அவர்கள் அணில்களை சுட்டுகொண்டிருக்கின்றனரே, தங்களால் முடிந்தவரை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றனரே. அவர்கள் ஏற்கெனவே அநேக அணில்களை வேட்டையாடிவிட்டனர். ஆனால் நானோ இங்கே மரத்தின் பின்னால் உட்கார்ந்து கொண்டு என் கையை பிசைந்துக் கொண்டு 'என்னுடைய - என்னுடைய துப்பாக்கி ஐம்பது கெஜத்திற்கு கூட சுடவில்லையே' '' என்று வியந்து கொண்டிருந்தேன். அங்கே ஒரு வெட்டப்பட்ட மரத்துண்டருகே உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தேன் . அப்பொழுது பரிசுத்த ஆவியானவர் வந்தார், ஒரு சத்தத்தில் அல்ல, ஆனால் வெளிப்பாட்டில் வந்து, “ஒரு நோக்கத்திற்காகவே நான் உனக்கு அந்த விதமாக நேரிடச் செய்தேன்'' என்றார் 58என்ன? வேதாகமம் இங்கே ஒன்றைக் கூறும் போது, சபையானது “பரிசுத்த ஆவி அங்கே இருக்கின்ற அந்த குழுவிற்கு மாத்திரம் தான்” என்று கூறினால் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது; சபை அவ்விதமாக கூறுகிறது; வேதாகமமோ ''விரும்புகிறவன் எவனெவனோ“ என்று கூறுகிறது. அது இலக்கை எட்ட வைக்க என்னால் முடியாது. கர்த்தர் பேரில் மாத்திரம் விசுவாசம் வையுங்கள், அப்போது உங்களுக்கு நித்திய பாதுகாப்பு கிடைத்துவிடும் என்கின்ற கால்வினிச போதகத்தையும், நான் அதைத் தொடாமலும், கையாளாமலும், சுவைக்காமலும் இருப்பேனானால், அதைச் செய்ய எனக்கு - எனக்கு விருப்பம், ஆனால் அதை என்னால் செய்ய முடியாது!'' என்கின்ற ஆர்மீனியர்களின் உபதேசமானது.... ஆர்மீனிய கொள்கை கால்வினியக் கொள்கையை விட மிகவும் அகன்றுள்ளது, ஆனால் இரண்டுமே தவறான போதகங்களாகும். நான் அதை அவர்கள் இருவருமே வேதவசனங்களைக் கொண்டுள்ளனர், ஆனால் அது இலக்கை எட்டும் வகையில் சரியாக அமைந்திருக்க வேண்டும். இந்த வேதாகமத்தில் தேவன் ஒரு காரியத்தைக் கூறியிருப்பாரெனில், அது சரியாக இலக்கை அடிக்கத்தான் வேண்டும். அது வேதாகமத்தில் உள்ள ஒவ்வொரு வளையமும் சரியாக அந்த இலக்கு மையத்தை வந்தடைய வேண்டும். அது அப்படித்தான் இலக்கை அடையவேண்டும், ஏனெனில் அது தேவனுடைய வார்த்தையாகும்; அவர் முடிவற்றவர். ஆதலால் அவரால் மாற முடியாது. ஆமென் எனக்கு அது பிடிக்கும், ஏனெனில் அது தேவனுடைய நித்திய வார்த்தை என்று பரிபூரணமாக திருப்தியடைந்து உன்னால் இளைப்பாற முடியும். ஆதலால் தேவனுடைய வார்த்தை என்ன கூறுகிறதென்று பார்க்கத்தக்கதாக நான் அதை பல்வேறு வேதவாக்கியங்களைக் கொண்டு ஆராய முயற்சிப்பேன். சரி. 59தேவனாலும் பிரதான தூதனாகிய மிகாவேலாலும் சாத்தான் வானத்திலிருந்து வெளியே பிடித்துத் தள்ளப்பட்டான். அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான், அவன் பூமிக்கு வந்து சர்ப்பத்திற்குள்ளாக புகுந்துகொண்டு ஏவாளை வஞ்சித்து, பிறகு மனிதன் மற்றும் பெண்களுக்குள்ளாக புகுந்து, துவக்கத்தில் அவன் ஆரம்பித்த அதே காரியத்தை காலங்களினூடாக செய்து வந்தான் - ஒரு மகத்தான பெரிய இராஜ்யம், மற்றவனைக் காட்டிலும் அழகான ஒன்று, எல்லாவற்றின் மேலும் ஆளுனராக, எல்லாம் அறிந்தவனாக இருத்தல். ''எங்கள் ஸ்தாபனம் தான் மிகப் பெரியது, அது - அது - அது மற்றெல்லாரையும் விட உயர்ந்த செல்வாக்கு மிக்கதாகும்''. ''என்ன, எங்கள் ஸ்தாபனத்தில் அநேக நூற்றுக்கணக்கான பிரசங்கிகள் இருக்கின்றனர். அங்கே நகரத்திலே மிகப்பெரிய சபைகள் எங்களுக்கு உண்டு' என்று அவர்கள் கூறுவதைக் கேட்டுள்ளீர்கள். அது எனக்கு சா - த் - தா - ன் என்று தான் எழுத்து கூட்டிச் சொல்கிறது. அது சரி. என்னைப் பொறுத்த வரை அது எனக்கு பிசாசுதான். ஒரு மனிதன் பிரிந்து, ஸ்தாபித்துக் கொண்டு, சகோதரத்துவத்தை உடைத்து இந்த சிறிய சபையுடன் ஈடுபடுவதற்கு ஒன்றுங் கிடையாது என்று கூறுகையில்.... 60கீழ்த்தரமான ஒரு நபரையும் நான் கண்டதில்லை, அல்லது பாவத்தில் மிகவுமாக உள்ள எந்த ஒரு நபரையும் நான் கண்டதில்லை; மிகவும் தாழ்ந்து கொடுக்கின்ற ஒரு பெண்ணையோ அல்லது மிகவும் தாழ்ந்து கொடுக்கின்ற மனிதனோ நான் கண்டதில்லை, நான் அவனிடம் சென்று என்ன செய்வேனென்றால், என் கரங்களை அவன் தோள் மீது போட்டு என்னால் கூடிய மட்டும் அதினின்று அவனை வெளியே கொண்டு வருவேன். குதித்து கொண்டு, சத்தமிட்டுக் கொண்டு, கூச்சலிட்டுக் கொண்டு இருக்கின்ற ஒரு கூட்டம் பரிசுத்த உருளையர்களை அல்லது நீங்கள் அவர்களை எப்படியெல்லாம் அழைக்கிறீர்களோ அங்கே சென்று அவன் கறுப்பு, மஞ்சள், பழுப்பு அல்லது வெள்ளை நிறத்தவனாயிருந்தாலும் அல்லது அவன் என்னவாயிருந்தாலும் சரி நான் அவர்களுடன் சேர்ந்து குதித்து, கூச்சலிட்டு, தேவனை மகிமைப்படுத்துவேன். ஆம், ஐயா! பரிசுத்த ஆவியானவர் ஒரே சீரான நிலையில் வருகின்றார்; அங்கே தான் நீ தேவனுடைய தேவையை பூர்த்தி செய்கின்றாய். நீ அதைப் பெறுவாயானால், நீ தேவனுடைய சீரான சமநிலையில் வருகின்றாய் - பரிசுத்த ஆவியைக் குறித்த உன்னுடைய சொந்த எண்ணங்களின்படியல்ல.சாத்தான் அதை முதல் தரமான இலக்கிய நயம் வாய்ந்த, ஏதோ மகத்தான ஒன்றாக, ஏதோ பெரிய ஒன்றாக, அறிவு பூர்வமானதாக ஆக்க முயல்கிறான். அந்த விதமான சிந்தனையை நீங்கள் வெளியே எறிந்து, அதைக் குறித்து வார்த்தை என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் விசுவாசியுங்கள். ஆமேன்! 61இப்பொழுது இங்கே வேறொரு கேள்வி; இது என்னவென்பதை நாம் பார்ப்போம். சரி. ஐந்து கன்னிகைகளைக் குறித்த உவமையை விளக்கவும். ஒரு கிறிஸ்தவன் பாவம் செய்வானா? இப்பொழுது, ஐந்து கன்னிகைகளைக் குறித்த உவமை - அல்லது அது பத்து கன்னிகைகளைக் குறித்தது, தயவு கூர்ந்து பொறுத்துக் கொள்ளவும். பத்து கன்னிகைகள் மத்தேயு 25:1ல் காணப்படுகின்றனர். பத்து கன்னிகைகள் மணவாளனை சந்திக்கப் புறப்படுகின்றனர் (இப்பொழுது கவனியுங்கள் ) அவர்களில் ஐந்து பேர் புத்தியுள்ளவர்களாயிருந்து தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைக் கொண்டிருந்தனர், ஐந்து பேர் புத்தி இல்லாதவர்களாக தங்கள் தீவட்டிகளில் எண்ணெயைக் கொண்டிராமல் இருந்தனர். அவர்கள் உறங்கிக் கொண்டிருக்கையில் ''இதோ மணவாளன் வருகிறார் அவருக்கு எதிர்கொண்டுப்போகப் புறப்படுங்கள் என்ற சத்தம்- சத்தம் வந்தது. தங்கள் தீவட்டிகளில் எண்ணெயை உடையவர்களாக இருந்தவர்கள், தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினர், நெருப்பு எரிந்து கொண்டிருந்தது, அவர்கள் மணவாளனைச் சந்திக்கச் சென்றனர். மற்றவர்களோ எண்ணெய் வாங்கிக்கொள்ள இவர்களிடம் வந்தனர், இவர்களோ நீங்கள் விற்கிறவர்களிடத்திற்கு போய் உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறினர். அவர்கள் சென்றபோது, மணவாளன் வந்து விட்டார், அப்பொழுது புத்தியுள்ள கன்னிகை உள்ளே பிரவேசித்தாள், தூங்கிக் கொண்டிருந்த கன்னிகை புறம்பே தள்ளப்பட்டாள். 62இது உங்களை புண்ப்படுத்தப் போகிறது, உண்மையாகவே புண்படுத்தப்போகிறது, ஆனால் நான் அதை கூற வேண்டியவனாகவே இருக்கிறேன். கேள்வியை நான் கேட்கவில்லை; நான் அதற்கு பதிலளிக்க கட்டமைப்பட்டவனாக இருக்கிறேன். இப்பொழுது, இது மிக நெருக்கமாக வருகிறது, சகோதரனே, மிக நெருங்கி காணப்படுகிறது, இது உங்களை புண்படுத்துவதை விட உங்களுக்கு உதவும் விதத்தில் இருக்கும் என நான் நம்புகிறேன். வழக்கமாக புண்படுதல்..... என் தாயார் என்னை அடிக்கையில் வழக்கமாக இவ்வாறு கூறுவார்கள், ''உனக்கு அது நன்மை செய்யும் முன்னர் அது உன்னை புண்படுத்த வேண்டும்'' என்பார்கள். நல்லது, அது - அது சரியே. பாருங்கள்? அப்பொழுது என்னால் அதைக் காண முடியவில்லை, ஆனால் நான் - நான் இப்பொழுது அதைக் காண்கிறேன். 63கவனியுங்கள், இந்த ... அங்கே புறப்பட்டுச் சென்ற பத்து பேரும் கன்னிகைகள். இப்பொழுது, கர்த்தரை சந்திக்கும்படியாக அங்கே பத்து கன்னிகைகள் இருந்தனர். இப்பொழுது, கன்னிகை என்ற வார்த்தைக்கு, ''பரிசுத்தமாக்கப்பட்டது (யாருக்காவது இது தெரியுமா?) பரிசுத்தம், சுத்தமான, பரிசுத்தமாக்கப்பட்ட'' என்று அர்த்தம். கர்த்தரை சந்திக்கப் புறப்பட்டுச் சென்ற அவர்கள் பத்து பேர்களாயிருந்தனர். இப்பொழுது கவனியுங்கள், அவர்கள் முதல் ஜாமம், இரண்டாவது ஜாமம், மூன்றாம் ஜாமம் துவங்கி ஏழாம் ஜாமம் வரை நித்திரை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் இவர்களோ உண்மையாகவே கர்த்தரைச் சந்திக்கச் சென்றனர். ஆகவே நினைவில் கொள்ளுங்கள், அவர்கள் புறப்பட்டுச் சென்றபோது கர்த்தர் வந்தார். அது கர்த்தருடைய வருகையின் நேரமாக இருந்தது. எந்த ஜாமத்தில் .... சிலர் முதலாம் மணி நேரத்தில், சிலர் இரண்டாம் மணி நேரத்தில் நித்திரை செய்தனர். சிலர்... என்பதை குறித்து இயேசு பேசினார். ஆனால் கர்த்தருடைய வருகையின்போது அவர்கள்ளெல்லாருமே விழித்துக்கொண்டனர். ஆனால் இந்தக் காரியத்தில், இது கடைசி மணி நேரமாக இருந்தது, ஏனெனில் அவர்கள் பத்துபேரும் கர்த்தரைச் சந்திக்க புறப்பட்டுச் சென்றனர். ஐந்து பேர்களின் தீவட்டிகள் எண்ணெயில்லாமல் புகைபிடித்து போயிருந்தது, மற்ற ஐந்து பேர்களோ எண்ணெயைக் கொண்டிருந்தனர். 64இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், வேதாகமத்தில் எண்ணெய் எதற்கு அடையாளமாகக் காணப்படுகிறது? யாராவது கூறமுடியுமா? (சபையார் பரிசுத்த ஆவி என்று பதிலளிக்கின்றனர்-ஆசி) பரிசுத்த ஆவி! அப்படியானால் நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிராமல், நீங்கள் சுத்தமாயும், தூய்மையாகவும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். சுத்தமாக்கப்படுதல் என்பது நீங்கள்.... இப்பொழுது கவனியுங்கள், நான் இந்த சிறிய பாட்டிலை எடுக்கப்போகிறேன். இது அங்கே கோழிகள் அறுத்தெறியப்படும் இடத்தில் காணப்படுகிறது, அந்த இடம் முழுவதுமாக இருக்ககின்றது. நான் இதை எடுக்கின்றேன்; அதுதான் நீதிமானாக்கப்படுதல்: ''நான் இந்த பாவியை உபயோகப்படுத்தப் போகிறேன்.'' பிறகு இதை நான் உபயோகப்படுத்தப் போகிறேன் என்றால் நான் செய்ய விருக்கின்ற அடுத்த காரியம் நான் இதை சுத்தமாக்க வேண்டும். பிறகு நான் அதை சுத்தப்படுத்தின பின்பு, இதற்கு அடுத்ததாக நான் என்ன செய்வேன்? இதை பரிசுத்தப்படுத்துவேன். பரிசுத்தப்படுத்துதல் என்கிற வார்த்தைக்கு ''சுத்தமாக்கு“ இது பரிசுத்தம் என்கிற வார்த்தை இணையானது வார்த்தை. பரிசுத்தம் -பரிசுத்தம் என்பது எபிரேய வார்த்தையாகும். பரிசுத்தமாகுதல் என்பது கிரேக்க வார்த்தையாகும். பரிசுத்தமாகுதல் என்ற வார்த்தை ”ஊழியத்திற்கென சுத்தப்படுத்தி தனியாக வைத்தல்“ என்று பொருள்படும். ஆகவே பிறகு, நீதியின்மேல் பசிதாகம் உடையவர்கள் பாக்கியவான்கள், ஏனெனில் அவர்கள் நிரப்பப்படுவார்கள், பிறகு அவர்கள் ஊழியத்தில் வைக்கப்படுவார்கள். 65இந்த பாத்திரங்கள்... பழைய ஏற்பாட்டின் கூடாரம், பீடம் பாத்திரங்களை பரிசுத்தப்படுத்துகின்றது. அவைகள் ஊழியத்திற்கென்று தனியாக வைக்கப்படுகின்றன. அவைகள் ஊழியத்திற்கென்று இருக்கும் பொழுது அப்பொழுது அவைகள் நிறப்பப்படுகின்றன. இப்பொழுது இங்கே தான், அருமையான, விலையேறப் பெற்ற நசரீன்கள், இன்னும் மற்றவர்கள் வழிவிலகிப் போயிருக்கிறார்கள். பாருங்கள்? நாமெல்லாரும் .... ஏன் நீங்கள் தவறிப்போகிறீர்கள்? ஏன் பெந்தெகொஸ்தேயினர் உங்களை விட்டு ஓடிப்போனார்கள். ஏனென்றால் நீங்கள் ஒளியில் நடக்க மறுத்ததால், அது முற்றிலும் சரியே. பாருங்கள்? அது சரிதான். நான் முதன் முதலாக முழங்காலிட்ட பலிபீடம் அந்த விலையேறப் பெற்ற அங்கே இருக்கின்ற அந்த பழைய நசரின் பலிபீடம் தான். அந்த அருமையான, பரிசுத்தமுள்ள, சுத்தமான சபையாகிய அவர்களை தேவன் ஆசீர்வதிப்பாராக, ஆனால் நீங்கள் மிகவுமாக வழிமுறைகளின்படி நடக்கப் பார்க்கிறீர்கள், ''நீ இதைச் செய்ய வேண்டும், நீ அதைச் செய்துதான் ஆக வேண்டும். நீ இதை செய்து தானாக வேண்டும்'' என்று கூறி, அது தேவனுடைய கிருபையென்றும், நீங்கள் தெரிந்துகொள்ளுதலின்படி அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்றும் உணராதிருக்கிறீர்கள். ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல ஓடுகிறவனாலும் அல்ல இரங்குகிற தேவனாலேயாம். பாருங்கள்? தேவன் சபையை உலகத்தோற்றத்திற்கு முன்னரே முன் குறித்தார் (இன்னும் சற்று கழித்து அதைக் குறித்த கேள்வி நம்மிடம் இருக்கிறது. பாருங்கள்?), உலகத் தோற்றத்திற்கு முன்பே சபையை முன் குறித்தார். 66கவலைப்படுகிறதினால் உன் சரீர அளவோடு ஒரு முழத்தையும் உன்னால் கூட்ட முடியாது. “என் பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'' பாருங்கள்? பாருங்கள், தேவன் தான் அழைப்பை விடுத்தார், தேவன் தான் இழுத்தார், தேவன் தான் சபையை அமைத்தார். இப்பொழுது, இப்பொழுது, நீங்கள், ''சகோதரன் பிரன்ஹாம், அது முழுக்க கால்வீன் கொள்கையாயிற்றே' எனலாம். இல்லை, அது அவ்வாறல்ல. இப்பொழுது, பொறுங்கள் தேவன் ஒரு மனிதனை எடுத்து, ”இதோ, நான் உன்னை எடுத்து பிறகு...'' என்று கூறிவிடுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. இந்த பாப்டிஸ்டுகளும் பிரஸ்பிடேரியன்களும் நல்லது, நான் கர்த்தரை விசுவாசிக்கிறேன், என் மனசாட்சி குற்றப்படுத்துவதற்கான அவசியமே இல்லை!'' எனலாம். குற்றப்படுத்துவதற்கு உங்களிடம் ஒன்றுமே இல்லாதிருப்பதே ஒரு ஆச்சரியமிக்க காரியம் தான். அவர்கள், ''நல்லது நடனமாடுவது என்னைக் குற்றப்படுத்துவதில்லை. சமுதாய விருந்தில் சிறிது மது அருந்துவது எனக்கு எந்த பாதிப்பையும் உண்டாக்காது' என்கின்றனர். ஏனெனில் உங்களுக்கு பாதிப்பை உண்டு பண்ண உங்களுக்குள் ஒன்றுமே இல்லை. ''கீழ்த்தரமான தரங்கெட்ட நகைச்சுவைத் துணுக்குகள் கூறுவது எனக்கு ஒன்றும் தொல்லை தராது'' ஏன்? உங்களுக்கு பாதிப்பை உண்டுபண்ண உங்களுக்குள் ஒன்றுமே இல்லை . 67நான் சேவை செய்யாவிடில் அவர் என்னை நரகத்திற்கு அனுப்பிவிடுவாரோ என்றெண்ணி நான் கர்த்தருக்கு சேவை செய்வதில்லை; நான் அவரை நேசிப்பதால் அவருக்கு சேவை செய்கிறேன். எனக்குள் ஏதோ ஒன்று இருப்பதால் தான் நான் அவருக்கு சேவை செய்கிறேன். நீங்கள் வெளியில் சென்று, ''எங்கள் சபை இதில் விசுவாசம் இல்லாமலிருப்பதால் நான் இதை விட்டுவிட வேண்டியதாயிற்று'' என்று கூறினால் நீங்கள் ஒரு மாய்மாலக்காரனைப் போன்று நடந்து கொள்ளுகிறீர்கள். அது சரி. ஆனால் நீங்கள் அதை நேசிப்பதனால் அதை செய்வீர்களானால், அது தேவனுக்கு ஒரு சேவையாக இருக்குமாயின், உங்கள் இருதயத்தில் ஏதோ ஒன்று தேவனுக்கான உங்கள் அன்பை , இந்த காரியங்களைக் காட்டிலும் அதற்கு மேலாக மிகப் பெருகச்செய்யுமென்றால், இப்பொழுது நீங்கள் சரியான வரிசையில் இருக்கிறீர்கள். ஆனாலும் நான் இன்னுமாக மது அருந்தாமலும், புகைபிடிக்காமலும், மெல்லாமலும், சாபமிடாமலும் இருந்தால் கூட இன்னுமாக நான் நரகத்திற்குச் செல்வேன். நிச்சயமாக! நான் எல்லா சபைகளையும் சேர்ந்து, ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லா சபைப் புத்தகங்களிலும் என் பெயர் இருந்தாலும், நல்ல வாழ்க்கையை வாழ்ந்திருந்தாலும், ''ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்''. அது சரியே! 68இப்பொழுது இந்த கன்னிகைகள் பத்து பேர்கள் வந்தனர். நசரீன் மக்களை அப்படியே ஆடிப்போக வைத்தது : ஏனெனில் பரிசுத்த ஆவியின் ஆரம்ப அடையாளமாகிய அந்நிய பாஷையில் பேசுதலை பெந்தெகொஸ்தேயினர் எடுத்தனர். அவர்கள் மக்களை பலிபீடத்தண்டை கொண்டு வந்து அவர்களை ஏதோ ஒன்றைக் கூறச் செய்து அல்லது ஒன்றன் மேல் ஒன்றைக் கூறச் செய்து அல்லது ஒன்றன் மேல் ஒன்றை பேச வைத்து அந்நிய பாஷை பேசும் வரை காக்க வைத்தனர். ஒரு மெய்யான, உண்மையான பெந்தெகொஸ்தே மக்கள் அவ்விதமாகச் செய்ய விழையமாட்டார்கள். உங்கள் நசரின் சபையின் பிசாசும் கூட அநேக காரியங்களை கொண்டிருந்தானே . பாருங்கள்?பெந்தெகொஸ்தே சபையில் அநேகமான காரியங்களை அவன் கொண்டிருக்கிறான், ஆனால் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பொறுத்த வரையில், அது சத்தியமாகும். அது முற்றிலும் சத்தியம் ஆகும். 69எனக்குத் தெரிந்த வரையில் அவர்களில் அநேகம் பேர் உள்ளனர். மக்கள் அந்நிய பாஷையில் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். என்னால் நியாயந்தீர்க்க முடியாது; நியாயத்தீர்ப்பு செய்ய நான் அனுப்பப்படவில்லை. அவைகளில் அநேகவற்றை நான் கேட்டிருக்கிறேன்; சத்தமிடுகிற வெண்கலம் போலவும் ஓசையிடுகிற கைத்தாளம் போலவும் அது காணப்படும். ஆனால் அந்நிய பாஷையில் பேசுகின்ற உண்மையான பரிசுத்த ஆவி இருப்பதை நான் அறிவேன். அது உண்மை என்பதை நான் அறிவேன். ஆம், ஐயா! ஆனால் மக்கள் உள்ளே வந்து “தேவனுக்கு மகிமை , நான் அதைப் பெற்றுக்கொண்டேன்'' என்று கூறுவதை அவர்கள் கண்டனர். நல்லது அப்படியானால், அந்த அதே காரியமானது ....இப்பொழுது அவர்கள் மேலும் கீழும் குதித்து அந்நிய பாஷையில் பேசினதால் அதை பெந்தெகொஸ்தே என்று அழைக்காதீர்கள், நீங்கள் அவர்களை யாரோ ஒருவருடைய மனைவியுடனோ அல்லது யாரோ ஒருவருடைய கணவனோடு கண்டிருக்கிறீர்கள். ''அது பரிசுத்த ஆவியா?'' என்று நீங்கள் கேட்கலாம். நசரீன் ஸ்தாபனத்தாராகிய நீங்கள் தரை முழுவதுமாக புரண்டு கூச்சலிட்டு பிறகு அதே காரியத்தை செய்கிறீர்கள். நீங்கள் கூச்சலிடும்போது அதைப் பெற்றுக்கொண்டீர்கள் என்று நீங்கள் கூறினீர்கள். பாருங்கள்? நீங்கள் ஜீவிக்கும் ஜீவியத்தின் மூலமாக தவிர அதை நிரூபிக்கத்தக்கதாக எந்த ஒரு வழியும் கிடையாது. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்“ இது ஒன்றுதான் வழி. ஆழ்ந்த பக்தியுள்ள ஜீவியம் மற்றும் கிறிஸ்து உன்னுடன் கிரியை செய்து வார்த்தையை உறுதிபடுத்தி, உன் ஆழ்ந்த பக்தியுள்ள ஜீவியத்தினால்அடையாளங்களும் அற்புதங்களும் பின் தொடர்ந்தால், அதுதான் உண்மையான காரியமாகும். ஜீவியம் இல்லாமல் அநேக அடையாளங்களையுடையவராயிருக்கலாம். நீங்கள் அடையாளங்கள் இல்லாமல் ஜீவியத்தை போலியாக நடித்துக் காட்டலாம், ஆனால் நீ இரண்டையும் ஒன்றாகக் கண்டாயானால், அப்பொழுது அதுதான் சரியானதாகும். அதுதான் சரியான ஒன்றாகும். இப்பொழுது! அப்படியானால், நினைவுகூருங்கள், மணவாட்டியானவள்... இப்பொழுது உங்களுக்கு சில நிமிடங்கள் இருக்குமாயின் நான் இதை முடிக்க ஏதுவாயிருக்கும். 70கவனியுங்கள், ஒரு பெண் உடுத்த ஒரு ஆடையை வெட்டி எடுக்கப்போகிறாள். அவள் ஒரு பெரியதுண்டு துணியை வைத்திருக்கிறாள். (அதை என்னவென்று அழைப்போம்? பருத்தித் துணி , கட்டங்களிட்டு நெய்யப் பெற்ற பருத்தித் துணி வகை அல்லது ஏதோ ஒன்று, ஏதோ ஒரு பெயரிட்டு அழைக்கிறீர்கள். அதை பட்டு என்று அழைப்போமாக) அவளிடம் ஒரு அமைப்பு (Pattern) இருக்கின்றது. அவள் இந்த பெரிய துண்டு துணிகளைப் பார்க்கிறாள். இப்பொழுது இந்த துணிகளைப் பார்க்கிறாள். இப்பொழுது இந்த மாதிரித்துணியை எங்கே வைத்துப் பார்க்கப்போகிறாள் என்பது அவளைப் பொறுத்தது தான். அது சரியா? அந்த முழுதுணியும் எந்த ஒருபாகத்தையும் அவள் தெரிந்தெடுக்கலாம். அந்த முழு துணியுமே பரிசுத்தமாக்கபட்ட துணி, சுத்தமான துணி ஆகும். பாருங்கள், அது தான் தெரிந்துகொள்ளுதல். தேவனின் தெரிந்துகொள்ளுதல். ஆகவே அவர் செய்வது என்ன? தெரிந்து கொள்ளுதலின்படி அவர் அதை எடுத்து, இந்த கிறிஸ்துவாயிருக்கின்ற மாதிரி அமைப்பை எடுத்து துணியின் எந்த பாகத்தில் அவர் வைக்க விரும்புகிறாரோ அங்கே அவர் பொருத்திப் பார்க்கிறார். பிறகு அது வெட்டி எடுக்கப்படுகின்றது. இந்த வெட்டி எடுக்கப்பட்ட பகுதி எப்படி பரிசுத்தமாக இருந்ததோ அதே போன்று துணியின் மற்றைய பாகமும் பரிசுத்தமாயிருந்தது, ஆனால் தேவன் தெரிந்துகொள்ளுதலின்படி, தம்முடைய தெரிந்துகொள்ளுதலை உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே செய்தார். பவுல் கொரிந்தியர் 8ல் - இல்லை, ரோமர் 8ல் “குயவன் - களிமண் குயவனை நோக்கி நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?'' என்று கூறவில்லையா. நீதியுள்ள தேவனாகிய அவர் ஏசா அல்லது யாக்கோபிடம், அந்த இருவரும் பிறப்பதற்கு முன்னர் அல்லது சரியானதை அல்லது தவறானதை செய்யுமுன்னர் எப்படி ”ஏசாவை வெறுத்து யாக்கோபைச் சிநேகித்தேன்'' என்று கூறமுடியும்? ஏனெனில் முன்னறிவின்படி ஏசா எப்படிப்பட்டவனென்றும் யாக்கோபு எப்படிப்பட்டவனென்றும் அவர் அறிந்திருந்தார். மனிதனுக்குள் என்ன இருக்கிறதென்பதை அவர் அறிந்திருக்கிறார். அவர் உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவர் அறிந்திருந்தார், அவர்.... 71முடிவில்லாதவர் என்கிற வார்த்தையை உங்களால் விவரிக்க முடியுமானால் ....முடிவில்லாதவர் என்கின்ற வார்த்தையானது .... கோடான கோடி கணக்கான கொசுக்கள் இருக்கின்றன, கோடிக் கணக்கான கொசுக்கள் இவ்வுலகில், அவை ஒவ்வொன்றும் தங்கள் கண்களை நூறாயிரங் கோடி இன்னும் அதிகமான கோடி முறைகள் கண்மூடித் திறந்திருக்கும். அவைகள் ஒன்றாகிலும் தங்கள் கண்ணை மூடித் திறக்கும் முன்னரே தேவன் அதை உலகத்தோற்றத்திற்கு முன்பாகவே அறிந்திருந்தார். அதுதான் முடிவில்லாமை நிலை. அதுதான் முடிவில்லாத நிலையில் இருக்கும் ஒன்றாகும். பாருங்கள்? அவர் முடிவில்லாதவர். ஆகவே நீ என்ன செய்வாய் என்பதை உலகத் தோற்றத்திற்கு முன்னரே அவர் அறிந்திருந்தார். ஆகவே அவர். கிறிஸ்துவை அனுப்பினார், அந்த ... யாராவது ஒருவர், ''நல்லது நான் என்னுடைய இழிவான மனப்பான்மையை விட்டு விட்டு அவரைப் பின்பற்றுவேனானால்'' அல்லது அதைப் போன்ற ஒன்றை நினைப்பாரெனில், அவ்வாறல்ல. யார் யார் இரட்சிக்கப்படுவார்களென்பதை அவர் அறிந்திருந்தார், ஆகவே யார் இரட்சிக்கப்படுவர் என்பதை அவர் முன்னதாகவே கண்டவர்களை இரட்சிக்க அவர் கிறிஸ்துவை அனுப்பினார். 72இப்பொழுது, சபைக்கும் கூட நித்திய பாதுகாப்பானது இருக்கின்றது. நீங்கள் சபைக்குள் இருப்பீர்களானால், நீங்கள் சபையுடன் பாதுகாப்பாய் உள்ளீர்கள். ஆனால் நீங்கள் சபைக்கு வெளியே சென்றால், நீங்கள் பாதுகாப்பில் இல்லை. பாருங்கள்? இப்பொழுது, நீங்கள் சபையிலேயே தரித்திருக்கிறீர்கள். சபைக்குள்ளாக எப்படி நீங்கள் வருகிறீர்கள்? கைகள் கோர்ப்பதினாலா, உங்கள் பெயரை புத்தகத்தில் எழுதுவதாலா? எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். அதுதான் சபை. எப்படி? பரிசுத்த ஆவியின் அபிஷேகம் மூலமாக நாம் கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளாக முத்திரையிடப்பட்டுள்ளோம். எவ்வளவு காலத்திற்கு? எபேசியர் 4:30. அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்.'' மீட்கப்படும் நாள் வரைக்கும் நீங்கள் முத்திரையிடப்பட்டுள்ளீர்கள். இப்பொழுது, நிச்சயமாக, நிச்சயமாக, அதுதான் பரிசுத்த ஆவியாகும். 73ஆகவே இப்பொழுது அந்த சபையானது எடுக்கப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு இயேசுகிறிஸ்துவில் விசுவாசம் கொண்டிருக்கிற மீதியாயிருக்கிற ஸ்திரீயின் வித்தானது (பாருங்கள்?), மணவாட்டியல்ல, மீதமாயிருக்கின்ற அந்த ஸ்திரீயின் வித்து. அப்பொழுது அந்த வலுசர்ப்பமானது தன் வாயிலிருந்து வெள்ளத்தை ஊற்றி அந்த வித்தின் சந்ததியுடன் யுத்தம் பண்ணப்போயிற்று. அது தான் இப்பொழுது உருவாக்கப்பட்டுள்ள, மிருகத்திற்கு சொரூபமான, சபைகளின் சங்கத்தின் கீழிருக்கின்ற பிராடெஸ்டெண்ட் சபையாகும். இதைப்போன்று எல்லா சபைகளும் புறக்கணிக்கப்படும். இப்பொழுது வரி வசூலிப்பது நாம், அது சர்ச்சையில் உள்ளது, நாம் ஒரு சபையல்ல என்று கூற முயற்சிகள் செய்யப்படுகின்றன, ஆனால் நாம் சபைதான் என்று நம்மை அழைத்துக் கொள்ளத்தக்கதாக நமக்கு அரசியல் சாசன உரிமைகள் இருக்கின்றன. நம்முடைய முற்பிதாக்கள் அதற்காகத்தான் உறுதியாக நின்றார்கள். ஆனால் நாம் செய்திருப்பது என்ன, ஒவ்வொரு அரசியல் சாசன சட்டத்தையும் நாம் உடைத்து, எல்லா சபைகளும் ஸ்தாபனங்களையும் உள்ளடக்கிய சபைகளின் சங்கத்தை உள்ளே வரவேற்றுள்ளோம், ஆகவே பிசாசு இதற்குள்ளாக உள்ளே வந்து உலகப்பிரகாரமான காரியங்களும் மற்றும் எல்லாவற்றையும் உள்ளுர் சபை அங்கத்தினர்களுக்குள் கொண்டு வந்து, இன்னும் மகத்தான சபைக்குழுக்கள் மற்றும் உயர்தர வகுப்பார், மற்றும் சமுதாயத்தினர் இன்னும் பிறவற்றைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த பழைய சபையோ மற்ற பிறப்பைப் போன்று குழப்பத்திலிருந்து மறுபடியும் பிறந்து, இன்னுமாக அதற்கான கிரயத்தை செலுத்திக் கொண்டு, இன்னுமாக அமர்ந்து, பெந்தெகொஸ்தே நாளிலே அவர்கள் எப்படியாக பிறந்தனரோ இன்னும் அதே விதமாகவே செயல்பட்டுக் கொண்டு, அங்கே இருக்கின்ற அதே சபையானது. அவைகள் சபைகளின் சங்கத்தின் கீழாக மூடப்பட்டு அடைக்கப்படும். அது ஒரு சங்கம் அல்லது அதைப்போன்று ஒன்றினால் புறக்கணிக்கப்படும். ஒன்று நீங்கள் உள்ளே வரவேண்டும் அல்லது வெளியே செல்லவேண்டும். 74மிருகத்தின் முத்திரையானது இப்பொழுது இன்றைக்கு செயலில் உள்ளது. மேலும் - பரிசுத்தஆவி தான் தேவனுடைய முத்திரையாகும். அதைப் புறக்கணிப்பதென்பது மிருகத்தின் முத்திரையாகும். நீ கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டிய பரிசுத்த ஆவியை நீ கண்டு, அதை ஏற்றுக்கொள்ளாமல் போனால், தானாகவே நீ அந்த மிருகத்தின் முத்திரையை எடுத்துக்கொள்கிறாய், ஏனெனில் இரண்டு சாரார் மாத்திரமே இருக்க முடியும்: தேவனுடைய முத்திரையை கொண்டிராத எல்லாரும் மிருகத்தின் முத்திரையை பெற்றிருந்தனர். ஆகவே தேவனுடைய முத்திரையைப் பெற பரிசுத்த ஆவியைப் பெறத்தான் வேண்டும். அதை பெற வேண்டும். இதோ இதுதான் முழு காரியமும். அது முற்றிலுமாகச் சரியே. 75இப்பொழுது மணவாட்டி மேலே செல்கிறாள், மீதமுள்ளவர்கள் இங்கே விடப்படுகின்றனர். இவளே இரண்டாம் உயிர்த்தெழுதலில் வருகிறவள். முதலாம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான். இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. அது சரி. இரண்டாம் உயிர்த்தெழுதலானது வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பாக இருக்கும், பிறகு சபையானது .... பவுல் ''நீங்கள் அவிசுவாசிகளிடத்திற்கும் வழக்கறிஞர்களிடமும் ஏன் செல்கிறீர்கள், பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா?' என்றான். இவ்வித காரியங்கள் சபைக்கு முன்பாக நியாயந்தீர்க்கப்பட வேண்டும், அநீதியான நீதிபதி, மாஜிஸ்ட்ரேட் மற்றும் இன்னாருக்கு முன்பாக செல்லக்கூடாது, ஆனால் நம்முடைய காரியங்கள் சபைக்கு முன்தான் கொண்டு வரப்பட வேண்டும். நீங்கள் அங்கே ஒருவருக்கொருர் சட்டத்திற்கு கொண்டு செல்கிறீர்கள். ஒரு கிறிஸ்தவனை சட்டத்திற்கு முன் நிற்கவைக்கின்ற மனிதன் மீது தேவன் இரக்கம் பாராட்டுவாராக. அது சரி. அவ்விதமாகச் செய்ய பவுல் அவர்களுக்கு சவாலிட்டான். இப்பொழுது, அது தான் மணவாட்டி ஆகும், உறங்கிக் கொண்டிருந்த கன்னிகைகள் பூமியின் மீது விடப்படுகின்றனர். புத்தியுள்ள கன்னிகை தன்னுடைய தீவட்டியில் எண்ணையை உடையவளாக பரலோகத்திற்குள் செல்கின்றாள். இதன் பேரில் அதிக நேரத்தை நாம் செலவிடலாம் என்பதை நானறிவேன், ஆனால் நான் துரிதமாக சொல்லப்போகிறேன். 76கிறிஸ்தவர்கள் பாவம் செய்வார்களா? நிச்சயமாக கிடையாது! ஒரு கிறிஸ்தவன் பாவம் செய்வான் என்று கூறும் எந்த வேதவாக்கியமும் கிடையாது. இதற்கு ஆக்ஷேபனை உண்டு என்பதை நான் அறிவேன். நல்லது, 1யோவான் 3ற்கு திருப்பி வேத வசனம் என்ன கூறுகிறதென்று நாம் பார்ப்போம். ஒரு கிறிஸ்தவன் பாவமே செய்யமாட்டான். நீங்கள் எப்பொழுதாகிலும் ஒரு கறுப்பு, வெள்ளை நிறப்பறவை அல்லது வெள்ளை, கறுப்பு பறவையை கண்டதுண்டா? இல்லை! நீங்கள் ஒரு பாவி பரிசுத்தவானை பார்த்ததும் கிடையாது. அப்படிப்பட்ட ஒன்றுமே கிடையாது. இப்பொழுது, இது சிறிது புண்படுத்துமானால் இதற்குள் நிறைய தைலத்தை வைத்துவிடுங்கள், அது உங்களுக்குத் தெரியும், ஆகவே அது - அது சிறிது நேரத்தில் சுகத்தை அளிக்கும். 77இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருப்பவைகளின் முற்றிலும்மான, ஒருபோதும் தவறாத ஆதாரங்கள் வேத வசனங்கள் தான். 1யோவான், 3வது அதிகாரம் 9வது வசனம். சரி, இதற்கு செவிகொடுங்கள் பாவங்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ் செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்படுத்தப்பட்டார். கவனியுங்கள், நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? உங்கள் கவச உடைகளைத் தரியுங்கள், சர்வாயுதவர்க்கத்தை இறுக்கிக் கட்டிவிட்டீர்களா? கூர்ந்து கவனியுங்கள். இது அதிர்ச்சியூட்டும் ஒன்றாகும். தேவனால் பிறந்த எவனும் பாவம் செய்வதில்லை; ... (புரிகிறதா?). ஏனெனில் அவருடைய வித்து...(அவருடைய வித்து, தேவனுடையது) .... அவனுக்குள் தரித்திருக்கிறது .... (அந்த மனிதன்!) .... அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படுத்தப்படும்கின்றது. நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்பு கூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. ஆகையால் நீங்கள் ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி, வேறுபாடுகளை வரையுறுத்தி, இன்னும் அதைப்போன்றவைகளைத் தெரிந்துகொண்டு பிறகு எப்படி நீங்கள் தேவனால் பிறந்தவர்கள் என்று உங்களாலே கூறமுடிகின்றது? அப்படிப்பட்ட ஒன்று கிடையவே கிடையாது. அது சாத்தானுடைய ஏமாற்று வேலை யாகும். அது சரி. ஆனால் தேவனால் பிறந்த ஒரு மனிதனால் பாவமே செய்யமுடியாது; பாவம் செய்வதென்பது அவனால் கூடாத ஒரு காரியமாகும். 78கவனியுங்கள்! இதை என்னால் எடுக்க முடியுமானால் கிறிஸ்து அறையப்பட்டுள்ள சிலுவையை இங்கே ஒரு நிமிடத்திற்கு நான் எடுக்கட்டும். பாவ நிவாரணப்பலியாக இருந்தவர் யார்? இயேசு கிறிஸ்து. நாம் எப்படி கிறிஸ்துவுக்குள் செல்லுகிறோம்? நமக்காக மரித்தவர் யார்? கிறிஸ்து. அவர் எதற்காக மரித்தார்? நம்முடைய பாவங்களுக்காக . என்னுடைய ஆக்கினையை அவர் எடுத்துகொண்டார். அது சரி தானே? ஆகவே அப்படியானால் நான் எவ்வாறு அவருக்குள் செல்கிறேன் ? ஒரே ஆவியால் நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். ஆகவே இந்த சரீரத்தில் நாம் இரத்தத்தினாலே மூடப்பட்டு நியாயந்தீர்ப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுதலைப் பெற்றிருக்கிறோம். அவனால் பாவமே செய்யமுடியாது, ஏனெனில் அவனுக்காக இரவும் பகலுமாக ஒரு இரத்த பலியானது இருந்து கொண்டிருக்கிறது. அல்லேலூயா! அவனால் பாவம் செய்ய முடியாது. பாவம் செய்ய அவனுக்கு விருப்பமே இராது. அவ்வாறு செய்வானானால் - ஏதாவது தவறை அவன் புரிவானானால், அதை வேண்டுமென்றே அவன் செய்திருக்கமாட்டான். வேதாகமம் எபிரேயர் 10 ஆம் அதிகாரத்தில் - சத்தியத்தை அறியும் அறிவை அடைந்த பின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ் செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொரு பலி இனியிராமல், நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம் பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ் செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்த மென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். 79ஏனெனில் நாமெல்லாரும் ஒரே ஆவியாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம். ஆகையால் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றவராயிருப்பதால், நம்மால் பாவம் செய்யமுடியாது, பாவமே செய்ய முடியாது. நமக்காக ஒரு பாவபிரயாசித்த பலி காத்துக்கொண்டிருக்கிறது. ஆகவே உங்கள் இருதயத்தில் இன்னுமாக பாவம் செய்ய வேண்டும் என்கின்ற வாஞ்சை இருக்குமானால் நீங்கள் இன்னுமாக அந்த சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை என்று அர்த்தமாகிறது, ஏனெனில் நீங்கள் மரித்து உங்கள் ஜீவனானது கிறிஸ்துவுக்குள்ளாக தேவனின் மூலமாக மறைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள் பாவமே செய்வதில்லை. அவர்கள் தவறுகள் செய்வார்கள், ஆனால் அவர்கள் பாவம் செய்வதில்லை. ஆமென் அதன் காரணமாகத்தான் அவர்களால் முடியாது, ஏனெனில் அவனால் பாவம் செய்யமுடியாது. என்னால் எப்படி .... நான் இங்கே நகரத்தினூடாக செல்கையில் நகரத்தின் மேயர் என்னிடம் வந்து திரு. பிரன்ஹாம், நீங்கள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்க செல்லும் ஒருவர் என்று எனக்குத் தெரியும். வேகக்கட்டுப் பாடுகள் இங்கே உண்டு. நகரத்தில் அதிகபட்சமாக மணிக்கு முப்பது மைல் வேகத்தில் தான் செல்ல வேண்டும். ஆனால் உங்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் தொண்ணூறு மைல் வேகத்தில் செல்ல நான் உங்களுக்கு அனுமதிதருகிறேன், ஏனெனில் உங்களுக்கு மிக அவசரமான அழைப்போ அல்லது யாரோ ஒருவர் விபத்தில் மரித்துக் கொண்டிருக்கும் தருவாயில் இருந்தாலொழிய தவிர மற்ற நேரத்தில் நீங்கள் வேகக் கட்டுபாடு விதிகளை மீறமாட்டீர்கள் என்ற நம்பிகை உங்கள் மேல் எனக்கு உண்டு. நீங்கள் ஒரு சிகப்பு விளக்கை அல்லது அதைப் போன்ற ஒன்றை பொருத்தி நீங்கள் வாகனத்தை ஓட்டிச் செல்லலாம் என்று, இந்த நகரத்தின் மேயர் என்கின்ற அடிப்படையில் நான் உங்களுக்கு அனுமதி அளிக்கிறேன்“ என்று கூறும் பட்சத்தில், நான் முப்பது மைல் வேகத்தில் செல்ல வேண்டிய பகுதியில் நாற்பது மைல் வேகத்தில் சென்றால் ஒரு சாதாரண அதிகாரியினால் எப்படி என்னை கைது செய்ய முடியும்? அவனால் முடியாது. இந்த நகரத்தில் இருக்கின்ற வேகக்கட்டுப்பாட்டு விதிகளை என்னால் உடைக்க முடியாது. ஏன்? ஏனெனில் அந்த வேகக்கட்டுபாடு விதிகளுக்கு மேலாக நான் உள்ளேன். ஆமென் நான் சொல்ல விழைவதைக் காண்பீர்கள் என நான் நம்புகிறேன். 80ஆகவே நாம் மரிக்கையில் நம்முடைய மனந்திரும்புதலை தேவன் அங்கிகரிக்கின்றார், நம்முடைய ஞானஸ்நானத்தை அங்கிகரிக்கின்றார், விசுவாசத்தின் மூலம் வைக்கப்பட்ட அவர் தம்முடைய சொந்த குமாரனின் இரத்தத்தை அங்கிகரிக்கின்றார். அவருடைய முன் குறித்தலை அவர் அங்கிகரித்து நான் அதைச் செய்வேன் என்று அறிந்திருந்து, கிறிஸ்துவுக்குள்ளாக என்னை அவர் அடையாளங் கண்டுகொண்டு, மரித்த... உலகத் தோற்றத்திற்கு முன்பாக அவர் அடிக்கப்பட்ட போது என் ஸ்தானத்தில் கிறிஸ்து மரித்தார். ஒரு கிறிஸ்தவனாக என்னுடைய பெயர் அவருடைய புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. அல்லேலூயா! என் மரணத்தை கிறிஸ்து மரித்தார். கிறிஸ்துதான் என்னுடைய பலி. தேவன் இனிமேல் என் பாவத்தை எண்ணாதிருப்பார். நான் மரணத்தினின்று ஜீவனுக்குள் கடந்து சென்றேன் என்பதற்கான சாட்சியாக பரிசுத்த ஆவியின் முத்திரையை அவர் எனக்களித்தார். வியூ அது தான் செய்கிறது. 81அப்படியானால் தேவனால் பிறந்த எவரும் பாவம் செய்வதில்லை. ஏனெனில் அவனால் பாவமே செய்ய முடியாது. பழைய ஏற்பாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பாவத்தைக் குறித்து நினைவுறுத்தப்பட்டுக் கொண்டிருக்கும். ஆனால் கிறிஸ்து , ஒரே பலியினாலே அந்த வழிபடுபவனை அவர் என்றென்றுமாக பரிபூரணப்படுத்தினார். ''ஆராதனை செய்கிறவர்கள் ஒருமுறை சுத்தமாக்கப்பட்ட பின்பு, இன்னும் பாவங்கள் உண்டென்று உணர்த்தும் மனசாட்சி அவர்களுக்கு இல்லாதிருக்கிறார்கள்.'' ஆகவே சபையில் ஓடி, மேலும் கீழுமாக குதித்து, சத்தமிட்டு, அந்நிய பாஷையில் பேசி, ஒரு கிறிஸ்துவனைப் போலவே சரியாக செய்யும் இந்த மக்களை நீங்கள் எடுத்துக்கொள்வீர்களானால், அவர்கள் பிறகு வெளியே ஓடி, அடுத்த வருடம், அடுத்த வாரம் அவர்கள் மறுபடியுமாக வரவேண்டியதாக இருக்கும். அவர்கள் துவக்கத்திலேயே சரியான ஒன்றிற்கு அருகாமையில் கூட வரவில்லை. அவர்கள் போலித்தனமாக செய்து கொண்டிருக்கிறார்கள், ஏனெனில் நம்முடைய மீட்கப்படும் நாளுக்கென்று பரிசுத்த ஆவியானவர் நம்மை கிறிஸ்துவுக்குள்ளாக முத்திரையிட்டிருக்கின்றார் என்று வேதாகமம் கூறியுள்ளதே. அல்லேலூயா! தேவன் அதை வாக்குத்தத்தம் செய்துள்ளபடியால், அதுவே என்னை மிகவும் நிச்சயத்திற்குள்ளாக்குகின்றது. 82பாவம் இனிமேல் கிடையாது. பாவத்திற்கான பிரயாசித்தம் செலுத்தப்பட்டாயிற்று. அதன் காரணமாகத்தான் ஒரு கிறிஸ்தவனுக்கு பாவம் மிகவும் அசுத்தமாகக் காணப்படுகிறது. அதன் காரணமாகத்தான் இங்கே குட்டைக் கால்சட்டை, ஷார்ட்ஸ், (Shorts) அணிந்து காணப்படுகின்ற பெண்கள் ஒரு கிறிஸ்தவனுக்கு மிக அசுத்தமாகக் காணப்படுகிறார்கள். அதன் காரணமாகத்தான் பாலுணர்வு காட்சிகள், மற்றும் அநேக அசுத்தமாக காரியங்கள் உள்ளன, அதனால் தான் புகைபிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல், தொலைகாட்சியில் (TV) வருகின்ற தணிக்கை செய்யப்படாத காட்சிகள், எல்லாம் அசுத்தமாயிருக்கின்ற காட்சிகள். ஏன்? - ஏனெனில் நீங்கள் வேறொரு இராஜ்யத்தை சேர்ந்தவர்களாயிருப்பதனால். நீங்கள் தேவனுடைய இராஜ்யத்தில் பிறந்து மீட்கப்படும் நாள் வரை பரிசுத்த ஆவியால் முத்திரையிடப்பட்டுள்ளீர்கள். தேவனாலே பிறந்தவன் பாவம் செய்யமாட்டான், ஏனெனில் அவனால் பாவமே செய்ய முடியாது. தேவனுடைய வித்து அவனுக்குள் இருப்பதால் அவனால் பாவமே செய்ய முடியாது. பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருக்கும் வரை அது பாவத்தைக் குறித்த ஒவ்வொரு வாஞ்சையும் உங்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடும். ஆமென் உங்களால் பாவமே செய்யமுடியாது; உங்களுக்குள் வாஞ்சையே இராது. அதன் பேரில் நாம் அதிக நேரம் செலவிடலாம், ஆனால் துரிதமாகப் பார்ப்போம். அப்படியில்லையெனில் எல்லாவற்றையுமே கடந்து செல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன். 83பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும் சபைகள் ஏன் பெண் பிரசங்கிகளை பிரசங்கம் செய்ய அனுமதிக்கின்றன, ஏன் அவர்களுக்கு அவ்வளவு வல்லமையும் அதிகாரமும் இருக்கிறது? இப்பொழுது, இது ஒரு சிக்கலான காரியம் தான். இப்பொழுது, இதில் கருத்து வேறுபாடு கொள்ளப்போகின்ற மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன், ஆனால் ஒரு கிறிஸ்தவன் என்கின்ற வகையில் நான் அதைக் கூறித்தானாக வேண்டும். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானத்தைக் குறித்த வேதவசனப் பூர்வமான மேற்கோள் வேதாகமத்தில் இல்லவேயில்லை. பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் எந்த ஒரு நபருக்காகிலும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதாக வேதாகமத்தில் எந்த இடத்திலும் இல்லை. அது ஆறாம் நூற்றாண்டில் போதிக்கப்பட்ட ஒரு கத்தோலிக்க பாரம்பரியமாகும். தெளிக்கப்படுதல் என்பதும் வேதாகமத்தில் கிடையாது, மக்களின் மீது தெளிக்கப்படுதல் அல்லது ஊற்றப்படுதல் என்பது கிடையாது. ஆனால் தண்ணீரில் மூழ்குதல் என்பது உள்ளது. நீங்கள் அதை அறிந்துகொள்ள விரும்பினால், இதைக் குறித்து என்னிடம் கிரேக்க மற்றும் எபிரேய குறிப்புகள் என்னிடம் உள்ளன. 84பெந்தெகொஸ்தே நாளிலே, தங்கள் பாவ மன்னிப்புக்கென்று மனிதர் மனந்திரும்பி இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பேதுரு முக்கிய நிபந்தனை விதித்தான். ஆகவே பிதா, குமாரன் பரிசுத்த ஆவி என்பது ஒரு நாமமல்ல. பிதா, குமாரன் பரிசுத்த ஆவி... மத்தேயு 28:19 கூறுகிறது, ''ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளுக்கும் உபதேசித்து ... நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுத்து நாமங்களில் அல்ல, நாமத்திலே, ஒருமை ... பிதாவின் நாமத்திலே, குமாரனின் நாமத்திலே பரிசுத்த ஆவியின் நாமத்திலே அல்ல, ஆனால் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலேதான். பிதா ஒரு நாமம் அல்ல; குமாரன் ஒரு நாமம் அல்ல; பரிசுத்த ஆவி ஒரு நாமம் அல்ல. அவையெல்லாம் ஒரு நாமத்தைச் சார்ந்த பட்டப் பெயர்கள் தாம் ஆகும். 85இப்பொழுது, பத்து நாட்கள் கழித்து பேதுரு “மனந்திரும்பி, ஒவ்வொருவரும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்' என்று கூறினான். பிதா, குமாரன் பரிசுத்த ஆவி - பாருங்கள் அந்த தீவிரமான திரித்துவ கருத்தானது... பாருங்கள், அதிலிருந்து மூன்று தேவர்களை உருவாக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். மூன்று தேவர்கள் கிடையாது. இங்கே அதை மூல கிரேக்க வேதாகமத்திலிருந்து உங்களுக்கு வாசித்துக் காண்பிக்க விரும்புகிறேன். அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்த ஒரே வழி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் தான், ஏனெனில் அதன் மூலமாக அவர்தான் தேவன் என்று அவர்கள் அடையாளங் கண்டுகொள்ளச் செய்ய வேண்டும் என்று மூல கிரேக்க வேதாகமமானது கூறுகின்றது. பிதா,குமாரன், பரிசுத்த ஆவி என்பது ஒரே தேவனின் அலுவல்களாகும். அவர் பிதாவாயிருந்தார்; அவர் குமாரனாயிருந்தார்; அவரே பரிசுத்த ஆவியானவராக உள்ளார். இது மூன்று அலுவல்கள் அல்லது மூன்று யுகங்கள், பிதாத்துவம், குமாரத்துவம், மற்றும் பரிசுத்த ஆவியின்யுகம். ஆனால் பிதா, குமாரன், பரிசுத்த ஆவிக்கு ஒரேயொரு நாமமுண்டு, அது தான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்பதே. ஆகவே அந்த நாள் முதற்கொண்டு ஒவ்வொரு நபரும் இயேசு கிறிஸ்து நாமத்திலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டனர், மேலும் சிலர் எந்த நாமமும் இல்லாமல் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதை அவர்கள் கண்டுபிடித்தனர். ஆகவே மூல கிரேக்க மற்றும் எபிரேய வேதாகமமும், இயேசுவின் நாமத்திலே கொடுக்கப்படுகின்ற ஞானஸ்நானமானது பாவங்களின் மன்னிப்புக்காகத்தான் என்கிறது- கிரேக்க மற்றும் எபிரேய வேதாகமம் இரண்டுமே. மன்னிப்பு (Remit) என்றால், ''கருணைகாட்டுதல்' என்பதே. நான் ஏதாவதை மன்னித்தால், அதை எடுத்துப் போட்டுவிடுவதே என்பதாகும். அதை மன்னித்தல் - ''அதை எடுத்துப்போடுவதே''. 86வேதாகமத்தில் எந்த ஒரு வேதவசனமும் காணப்படவில்லை .... மற்றும் அபோஸ்தலனாகிய பவுல் மேடான வழியாய் கடந்து போய் சில பாப்டிஸ்ட் சகோதரர்களைக் கண்டான், அப்போஸ்தலர் அவர்கள் ஒரு மகத்தான நேரத்தை அனுபவித்துக் கொண்டிருந்தனர்; அவர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தனர்; அவர்கள் மகத்தான களிகூருதலையும் மற்றும் மகத்தான காரியங்களையும் உடையவர்களாயிருந்தனர்; அவர்கள் பிரசங்கித்து கூடாரத்தில் களிகூர்ந்து கொண்டிருந்தனர். 18ஆம் அதிகாரத்தில் ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் இம்மக்களை சந்தித்திருந்தனர். அப்போலோஸ்; அவர்கள் பாப்டிஸ்டுகளாயிருந்தனர். ஆகவே பவுல் அவர்களிடம் சென்று, ''நீங்கள் விசுவாசிகளான முதற்கொண்டு பரிசுத்த ஆவி பெற்றீர்களா?' என்று கேட்டான். அதற்கு அவர்கள், பரிசுத்த ஆவி என்பது உண்டு என்று எங்களுக்கு தெரியாதே“ என்றனர். அவன், “எவ்வாறு உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது?'' என்று கேட்டான். ஜேமஸ் அரசன் மொழிப்பெயர்ப்பில் ''அப்படியானால் எந்த'' என்றுள்ளதை நானறிவேன்; மூல வேதாகமத்தில், ”அப்படியானால் எவ்வாறு என்றிருக்கிறது. ''எந்த அல்லது எவ்வாறு நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள்?'' அவர்கள், 'இயேசுவிற்கு ஞானஸ்நானம் கொடுத்த அதே யோவான் தான் எங்களுக்கும் ஞானஸ்நானம் கொடுத்தான்'' என்றார்கள். பவுல், “இனிமேல் அது கிரியை செய்யாது. நீங்கள் மறுபடியுமாக ஞானஸ்நானம் பெற வேண்டும் என்றான் என்று கூறினான். அவர்கள் இதைக் கேட்ட மாத்திரத்திலே மறுபடியுமாக தண்ணீருக்குள் வந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே மறு ஞானஸ்நானம் பண்ணப்பெற்றார்கள். பவுல் அவர்கள் மீது கைகளை வைத்தான், பரிசுத்த ஆவி அவர்கள் மீது வந்தார். இப்பொழுது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று இங்கே கூறப்பட்டு, இங்கேயும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று கூறப்பட்டிருக்குமானால், அது இரண்டுமே ஓரே இலக்கை அடிக்காது. அது சரியாக இருக்கவேண்டும். 87இப்பொழுது, மத்தேயு 28:19, இது தான் மத்தேயுவின் கடைசி அதிகாரம், மற்றும் கடைசி வசனம். நீங்கள் ஒரு காதல் கதையை , அது 'ஜானும் மேரியும் பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்'' என்றிருந்தால், ஜானும் மேரியும் யார்? நீங்கள் திருப்பி புத்தகத்தின் துவக்கத்திற்கு சென்று அவர்கள் யாரென்பதை கண்டு பிடியுங்கள். பிறகு மகிழ்ச்சியாக வாழ்ந்த ஜானும் மேரியும் யாரென்பதை தெரிந்துகொள்ளுங்கள். இயேசுவும் புறப்பட்டுப் போய் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுங்கள்'' என்றார், பிதா என்பது ஒரு பெயரல்ல, குமாரன் என்பது ஒரு பெயரல்ல,பரிசுத்த ஆவி, என்பதும் ஒரு பெயரல்ல, அப்படியானால் அவர் பேசிக் கொண்டிருந்தது எதைக் குறித்ததாயிருந்தது? பிதா, குமாரன், பரிசுத்த ஆவி யார்? அதைக் குறித்ததுவக்கத்திற்கு சென்று வாசித்துப் பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் வம்ச அட்டவணையை நான் மேற்கோள் காட்டுவேன் , 1 ஆம் அதிகாரம் 18வது வசனம். இயேசுகிறிஸ்துவினுடைய ஜெபத்தின் விவரமாவது..... இப்பொழுது மிக கூர்ந்து கவனியுங்கள். அந்த கம்பத்தை நாம் பிதா என்று அழைக்கலாம், இந்த பிரசங்க பீடம், குமாரன் எனலாம், இது பரிசுத்த ஆவி எனலாம். இப்பொழுது இயேசுகிறிஸ்துவினுடைய பிதா யார்? தேவன். நீங்கள் எல்லாருமே அதை ஏற்றுக்கொள்கிறீர்களா? தேவன் தான் இயேசு கிறிஸ்துவின் பிதா. அது பிதாவாகிய தேவன் (கம்பம் -தமிழாக்கியோன்) இது தேவனாகிய குமாரன் (பிரசங்க பீடம் - தமிழாக்கியோன்) இது தேவனாகிய பரிசுத்த ஆவி. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெபத்தின் விவரமாவது.... (மத்தேயு 1:18) அவருடைய திருமணமான - தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடிவருமுன்னே அவள் .....(சபையார் பரிசுத்த ஆவியினால்!'' என்று கூறுகின்றனர் - ஆசி) கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (தேவன் தான் அவருடைய பிதா என்று நான் நினைத்திருந்தேன். நம்முடைய பிதாவானவர் தேவன் தான் என்று அவர் கூறினதாக நான் நினைத்திருந்தேன். அப்படியானால் தேவனும் மற்றும் பரிசுத்த ஆவியானவராகிய இருவரும், வெவ்வேறு மக்களாக இருப்பார்களானால், இரண்டு பேரும் வித்தியாசமான நபர்களாக தனிப்பட்ட நபர்களாக இருப்பார்களானால் தனிப்பட்ட குணம் வாய்ந்தவராயிருப்பார்களானால் அல்லது எந்தவிதத்திலும் நீ அவர்களை கூறி பொருத்தினாலும், எவ்விதத்தில் இருவரும் அவருடைய பிதாவாக இருக்க முடியும்? அப்படியானால் அவர்கள் அதே தன்மை கொண்ட ஒரே நபராக இருக்கவேண்டும். இல்லையென்றால் அவருக்கு இரண்டு ஆவிக்குரிய தகப்பன் இருந்தார்கள் என்று தான் எடுக்க வேண்டும்) இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது : அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில் அவர்கள் கூடி வருமுன்னே அவள் பரிசுத்த ஆவினாலே... (பிதாவாகிய தேவனால் அல்ல) தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு பிள்ளையை சுமப்பாள்... (பாருங்கள்?) அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள். இம்மானுவேல் என்பதற்கான வியாக்கியானம் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். 88அவருடைய நாமம் என்னவென்று அழைக்கப்பட்டது? இயேசு. சரி. பிதா குமாரன் பரிசுத்த ஆவி. இப்பொழுது பிதா மற்றும் பரிசுத்த ஆவி இரண்டுமே ஒரே தன்மையுடைய ஆவியானவர்தான். ஆவி என்றால் என்ன? அது தேவனுடைய ஆவியாகும். அது அவ்வாறிருக்கையில், இயேசுவின் ஞானஸ்நானத்தின் மீது வந்து அவருக்குள் வாசம்பண்ணினார், ''இவர் என்னுடைய நேசகுமாரன். இவரில் வாசமாயிருக்க பிரியமாயிருக்கிறேன். ''அவர் கீழே வந்து இயேசுவுக்குள் வாசம் செய்து அவரை பூமியின் மீது இம்மானுவேல் ஆக்கினார். ஆகவே பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமம் என்னவாயிருந்தது? (சபையார், ''இயேசு கிறிஸ்து“ என்று பதிலளிக்கின்றனர் - ஆசி) நிச்சயமாக அது தான். அதே வெளிப்பாட்டைத்தான் பேதுருவும் கொண்டிருந்தான். இப்பொழுது நம்முடைய பார்வையை சரியாக திசை நோக்கச் செய்வோம். நாம் சரியாக குறியை நோக்கி சுடுகிறோம். சீஷர்களும் அதே விதமாகத்தான் சரியாக சுட்டார்களா என்று நாம் பார்ப்போம். ஒவ்வொரு தடவையும் அவர்கள் கூடி வந்த போது, ஒவ்வொரு தடவையும் ஒரு ஞானஸ்நானமானது கூறப்பட்டபோது இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டியதாயிருந்தது, ஏனெனில் நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை'' என்று அவர் கூறினார். ஆகவே அது பிசாசின் பொய்யான ஒரு கருத்தாகும், இதை ஆதரிக்க எந்த ஒரு வேதவசனமும் கிடையாது. அது சரியே. 89ஆகவே இப்பொழுது இது புண்படுத்தவில்லையென்று நான் நம்புகிறேன், ஆனால் இது சத்தியமாகும். பாருங்கள்? இது சத்தியமே, சகோதரனே. உன்னால் அதை ... பிதா குமாரன் பரிசுத்த ஆவியின்நாமத்தில் யாருக்குமே கொடுக்கப்படாதிருக்கையில் உன்னால் பிதா குமாரன் பரிசுத்தஆவியை ஒரு புறத்திலும் இயேசுவை மறுபுறத்திலும் பொருத்த முடியாது. வேதாகமத்தில் ஒவ்வொரு நபருக்கும் இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது. அவ்விதமாக ஞானஸ்நானம் பெறாதவர்கள், பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளுமுன்னர் மறுபடியுமாக வந்து ஞானஸ்நானம் பெற வேண்டியிருந்தது. அவர்கள் அதிக வல்லமையுடையவர்களாக ஒருக்கால் காணப்படலாம். ஆனால் தேவனுடைய மாபெரிய திட்டத்தை நீ பின்பற்றித்தான் ஆக வேண்டும். அது முற்றிலுமாக சரி. சரி. பிதா, குமாரன் பரிசுத்த ஆவி தவறான ஒன்றாகும். இப்பொழுது, பெண் பிரசங்கிகளைப் பொறுத்தவரையில், அது தவறான ஒன்று என்று எந்த ஒருவரும் அறிவர். அதைக் கூட நீங்கள் அறியாமலிருந்தால் அதைக் குறித்து என்ன கூறப்பட்டுள்ளது என்று கிரேக்க வேதாகமத்திலிருந்து உங்களுக்கு வாசித்துக் காண்பிக்க எனக்கு நேரமிருந்தால் நலமாயிருக்கும். “ஸ்திரீகள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது வெட்கக்கேடானதாயும் (shameful), அவமானம் விளைவிக்கிறதாயும் (disgraceful) இருக்கிறதே கிரேக்க மொழியில் அல்ல, எபிரேய மொழியில் - அவர்கள் மேய்ப்பர்களுக்கு (Pastors) எல்லாவற்றிலும் கீழ்ப்படிந்து பேசாமலிருக்ககக்கடவர்கள் என்று நியாயப்பிரமாணமும் (law) சொல்லுகிறது, (பாருங்கள்?) ஏனெனில் ஸ்திரீகள் சபையில் பேசுவது வெட்கக்கேடானதாயும் (shameful) அவமானம் விளைவிக்கிறதாயும் (disgaceful) இருக்கிறதே. என்னே அதை ஒவ்வொருவரும் அறிந்திருக்கவேண்டும். இப்பொழுது... அவைகள் வேதமுழுவதிலும் - மற்றும் தீமோத்தேயு இன்னும் மற்ற வேதவசனங்களையும் நான் இங்கே எழுதி வைத்துள்ளேன். அது சத்தியாயிருக்கிறது. சரி. 90இப்பொழுது, அப்படியானால் அவர்களிடம் எப்படி வல்லமை இருக்கிறது? நீங்கள், எப்படி அது செயல்படுகிறது'' எனக் கேட்கலாம். கவனியுங்கள், சகோதரனே உங்களை நான் கேட்கட்டும், அல்லது சகோதரனே, இந்த கேள்வியை கேட்டிருப்பவர் யாராயிருந்தாலும் சரி, சற்று கவனியுங்கள். முகமதியர்கள் மத்தியில் நடந்த சில மிக வல்லமை மிகுந்த கூட்டங்களை நான் கண்டிருக்கிறேன், அவர்கள் கூச்சலிட்டு, குதித்து, ஒரு கத்தியை எடுத்து இந்த விதமாக சரியாக நேராய் இருதயத்திற்குள் குத்தி மறுபக்கத்தில் அந்த ஓட்டைக்குள்ளாக தண்ணீரை ஊற்றுவார்கள், வெறுங்காலால் நெருப்பிற்குள் நடந்து செல்வார்கள், அதைப் போன்ற மற்ற எல்லாவற்றையும் செய்வார்கள், ஆணிகளாலான படுக்கைகளின் மேல்படுத்துக் கொள்வார்கள், மேலும் - மேலும், ஒரு பட்டயத்தை எடுத்து தங்கள் வாயில் நிற்க வைத்து அதை அப்படியே உள்ளே புகுத்துவார்கள் - நீங்களே போய் அதை வெளியே இழுத்து எடுக்கலாம், அதன் மீது இரத்தம் மற்ற எல்லாமும் இருக்கும். அந்த காரியங்களைக் குறித்து நீங்கள் பேசவேண்டாம். பாருங்கள்? அது சத்தியம் அல்ல; அது எதையுமே உறுதிபடுத்துவதில்லை. பாருங்கள்? இயேசு கூறினார். இங்கே உங்களுக்காக நான் எழுதி வைத்துள்ள வேத வசனங்களை நான் வாசிக்கட்டும், மத்தேயு 7:21-23; பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா! உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை அக்கிரமச் செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்கு சொல்லுவேன். 91ஆகவே நீங்கள்... பாருங்கள், சத்தியம் ஒரேயொரு வழியில் மாத்திரம் தான் வரும் சகோதரனே. இப்பொழுது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் மக்கள் எல்லாரும் நரகத்திற்கு போவார்கள் என்று நான் கூறவில்லை. அவ்விதம் நான் கூறமாட்டேன். தேவன் தான் நியாயாதிபதியாவார்; அவர் என்ன செய்யவிரும்புகிறாரோ அதை அவர் செய்யட்டும், ஆனால் ஒருவனுக்கு பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பண்ணப்பட வேண்டும் என்று வேதாகமத்தில் சட்டப்படியான வேத வசனங்கள் எதுவுமே கிடையாது. இயேசுவின் நாமத்தின்படியல்லாமல் வேறு விதத்தில் ஞானஸ்நானம் பெற்றிருந்த ஒவ்வொருவரையும் வந்து மறுபடியுமாக இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற வேண்டும் என்று பவுல் கட்டளையிட்டான், வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொரு போதகத்தை பிரசங்கித்தால் (கலா.1:8), அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்' எனக் கூறினான். ஆகவே தான் பவுல், முன் சொன்னது போல மறுபடியும் சொல்லுகிறேன். வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது வேறொன்றை உங்களுக்கு பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.“ என்று கூறினான். 92இப்பொழுது அது ... இங்கேயும் அங்கேயுமாக ஒரு இலக்கை நீங்கள் அடிக்க முடியாது. பிதாகுமாரன் பரிசுத்த ஆவி, 'அவர்கள் கொடுக்கட்டும், அவர்கள் எல்லாம் சரிதான்'' என்றும் பிறகு இயேசுவின் நாமம், அதையும் கொடுக்கச் செய்து, ''அது சரிதான்“ என்று கூறுவது சரியல்ல. சரியான ஏதோ ஒன்று இலக்கை அடிக்கத்தான் வேண்டும். தேவன் குழப்பத்திற்கு ஆக்கியோன் அல்ல. நீங்கள் வேதாகமம் முழுவதுமாக எங்கு வேண்டுமானாலும் புரட்டிப் பாருங்கள், அது ஒரு பொய்யான ஞானஸ்நானம் என்பதை நீங்கள் கண்டு அறிந்துகொள்வீர்கள். பிறகு வரலாற்றுக்கு சென்றுபாருங்கள். அது ஆறாம் நூற்றாண்டில் மகத்தான அக்டோபஸ் என்பவன், அப்படித்தான் என நான் நம்புகிறேன்; ஞானஸ்நானம் கொடுத்தவன் அல்லது ஒன்றான ... அது அக்டோபஸ் தான் என்று நான் கூறமாட்டேன், ஞானஸ்நானம் பண்ணப்பட்டவனின் பெயரை நான் மறந்துவிட்டேன்.... நீங்கள் அதைக் காணவேண்டுமென்றால் அதை - நிசாயா பிதாக்களுக்கு முன் புத்தகத்தில் காணலாம், 325 கி. பி. நடந்த நிசாயா ஆலோசனை சங்க கூட்டத்திற்கு முன்னர் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தனர். பிறகு கத்தோலிக்க சபையானது அதிகாரத்திற்கு வந்தபோது அவர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தை எடுத்துக்கொண் டனர். அந்த சமயத்திற்கு முன்னர் எந்த ஒரு நபருக்கும் பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்படவேயில்லை. அது ஒரு கத்தோலிக்க பாரம்பரியமாகும். 93அதில் அநேகத்தை லூத்தர் தன்னுடன் வெளியே கொண்டு வந்தார். மற்றதை வெஸ்லி கொண்டு வந்தார், இன்னுமாக நாம் அதனிடம் செல்கிறோம். ஆகவே அந்த கத்தோலிக்க போதகமானது, அதற்கு நம் பிதாக்களின் விசுவாசம் என்று அழைக்கப்படுகிறது, அது 144வது பக்கத்தில் காணப்படுகிறது என்று நான் நம்புகிறேன், அதில் அவர்கள் - அது, 'பிராடெஸ்டெண்டுகள் யாராவது இரட்சிக்கப்படுவார்களா? என்பதற்கு, அது ஒருக்கால் அவர்களில் சிலர் இரட்சிக்கப்படலாம். அவர்கள் வேதாகமத்தின்படியே தான் ஜீவிப்போம் என உறுதி கூறி, அதே நேரத்தில் கத்தோலிக்க போதகத்தின் சிலவற்றை அவர்கள் கை கொள்கின்றனர்'' என்று கூறுகின்றது. பின்னும் அது, “வேதாகமம், மற்ற கத்தோலிக்கர், பிதா -கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுத்தனர், ஆனால் நாம் அதிலிருந்து பக்தி பூர்வமானதை எடுத்து, அதை பிதா, குமாரன் பரிசுத்த ஆவியின் மேல் வைக்கின்றோம், பிராடெஸ்டெண்டுகள் அதை அடையாளங் கண்டுகொள்கின்றனர். ஒருக்கால் அவர்களில் சிலர் இரட்சிக்கப்படலாம் என்று கூறுகிறது என்று எண்ணுகிறேன். அதனால் அவர்கள் இரட்சிக்கப்பட முடியாது! அது சரி. 94ஒன்றுக்கும் மேற்பட்ட உலகம் இருக்கின்றதா? ஆம், அநேக உலகங்கள் இருக்கின்றன, எபிரேயர் 1வது அதிகாரம் 2வது வசனம், எபிரேயர் 11வது அதிகாரம் 3வது வசனம். அநேக உலகங்கள் உள்ளன. தேவன் உலகங்களை உண்டாக்கினார், உ-ல-க-ங்-க-ள், உலகங்களை (W-O-R-L-D-S) உண்டாக்கினார். 95ஒன்றுக்கும் மேற்பட்ட வானம் இருக்கின்றதா? ஆம், I-II கொரிந்தியர் 12:3ல் மூன்றாம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்ட ஒரு மனிதனை தான் அறிந்துள்ளதாக பவுல் கூறுகிறான். மேலும் வெளிப்படுத்தின விசேஷத்தில் இன்னும் பிறவற்றில் அதிக வானம் காணப்படுகிறது. நான் வேகமாக கடந்து செல்லப்போகிறேன், ஏனெனில் முடிக்க வேண்டிய நேரத்தைக் கடந்துவிட்டேன். இவைகளில் மற்றவற்றை வாசித்து கருத்தைக் கூறினால் பரவாயில்லையா? 96கிறிஸ்துவுக்குள்ளாக இருக்கின்ற ஒரு குழந்தை எடுத்துக்கொள்ளப்படுதலில் செல்லுமா? நிச்சயமாக, அது ஒரு குழந்தையாக இருந்தால் அது மறுபடியும் பிறந்த ஒன்று. அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் பரவாயில்லை, எப்படியாயினும் அது மேலே சென்று விடும். உங்களுக்கு புரிகின்றதா? 97நான் சாக்கிரமந்துகளை, (SACRAMENTS) (புனித ஜெபங்களை) செய்யத் துவங்கும்போது கிறிஸ்து ஏன் எனக்கு தோன்றுகிறார்? நல்லது, உங்கள் இருதயமானது ஒரு நிலைப்பட்டு அதைச் செய்ய பரிசுத்தத்துடன் தேவனிடம் நீங்கள் வந்து கொண்டிருந்ததில் சந்தேகமேயில்லை; அதன் காரணமாகத் தான், உங்களுக்கு அவர் தோன்றினார். பாருங்கள், எனக்குத் தெரிந்தவரையில் அது தான் உண்மையான காரணமாகும். அதற்கு மேல் என்னால் கூற முடியவில்லை. 98அதற்கு ... நாம் பார்ப்போம். நாம்...(ஓ, ஓ . இங்கே நாங்கள் நிறுத்த விருப்பமில்லை, அப்படித்தானே?) நாம் உலகத்தோற்றத்திற்கு முன்னே இரட்சிக்கப்பட்டிருந்தால் - நாம்? ஆம், ஐயா! வெளிப்படுத்தின விசேஷம் 13:8 ''நீங்கள் இரட்சிக்கப்பட்டு உங்கள் பெயரானது உலகம் உண்டாக்கப்படுவதற்கு முன்பாகவே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டது' என்று கூறுகின்றது. எபேசியர் 1:4 மற்றும் 5... நான் அதை வாசிப்பேன்; ஒரு நிமிடத்திற்கு மேல் ஆகாது, நீங்கள் பாருங்கள், அதை நான் மேற்கோள் காட்டவில்லை, நான் - நான்..... சரி, இதோ எடுத்துவிட்டேன்; இதை நாம் வாசிப்போம். நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு ... (எபேசியர்1 ஆம் அதிகாரம் 3 வது வசனம்) நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். அவர் கிறிஸ்து இயேசுவுக்குள் (ஆங்கில வேதத்தில் உள்ளபடி - தமிழாக்கியோன்) உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்: (கவனியுங்கள்...தமக்கு முன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு..... (கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே) .... அவர் உலகத் தோற்றத்துக்கு முன்னே கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே தம்முடைய கிருபையின் மகிமைக்கு புகழ்ச்சியாக தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே நம்மை இயேசு கிறிஸ்து மூலமாய்த் தமக்குச் சுவிகாரப்புத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். இப்பொழுது வெளிப்படுத்தல் புத்தகத்தில் .... இதோ நான் எடுத்துவிட்டேன்; இதை நான் சீக்கிரமாக வாசிக்கட்டும், ஆதலால் நீங்கள் - நீங்கள் பாருங்கள். நான் அதை மேற்கோள்காட்டவில்லை. அதை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். வெளிப்படுத்தல் 13:8, இதைச் சீக்கிரமாக கவனியுங்கள். உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். (அப்பொழுது தான் அது - சரி) 99அப்படியானால் அப்பொழுது நாம் ஆவிகளாக இருந்தோமா? இல்லை, அப்பொழுது நாம் இருந்திருக்கவேயில்லை, ஆனால் தேவனுடைய சிந்தையில் நாம் இருந்தோம். அவர் அதைப் பேசினார். அப்பொழுது அது உண்டானது. இயேசு ... உலகத் தோற்றத்துக்கு முன்னே அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி இயேசு கிறிஸ்து தான் என்று வேதாகமம் போதிப்பதை எத்தனைப்பேர் அறிவீர்கள். எப்படி? தேவன் அதை பேசினார், ஆகவே அதை அவர் பேசினபோது அதுசெய்து முடிக்கப்பட்ட ஒன்றாக ஆனது. அவர் என்னைக் கண்ட போது, உலகத் தோற்றத்துக்கு முன்னே உன்னை அவர் பார்த்துவிட்டார், அவருடைய சிந்தையில் நாம் உருவகமாக மாத்திரமே இருந்தோம். பிறகு நாம் பூமிக்கு வந்தபோது, நாம் மனிதன் மற்றும் மனுஷியாக, ஆணும் பெண்ணுமாக இருந்தோம். அவர் ஆணிலிருந்து பெண்ணின் ஆவியை வேறுபிரித்து அதிலிருந்து ஒரு பெண்ணை உண்டாக்கி ஆணின் ஆவியை மனிதனுக்குள் விட்டுவிட்டார். ஒரு பெண் ஆணைப் போல் நடந்துகொள்வதை நீங்கள் காண்பீர்களானால், ஏதோ தவறு அங்கே உள்ளது. ஒரு ஆண் ஆண்மையில்லாத ஆவியைப் போன்று பெண்ணாக நடந்து கொள்வதை நீங்கள் காண்பீர்களானால், அங்கேயும் ஏதோ ஒன்று தவறாயுள்ளது. ஆகவே அவர் அப்பொழுது மனுஷனின் பக்கவாட்டில் ஒரு விலா எலும்பை எடுத்து அவனிலிருந்து ஒரு துணைவியை அவர் உண்டாக்கினார், ஆகவே அவர்கள் இருவரும் ஒன்றுதான். 100உலகத்தோற்றத்திற்கு முன்னே நம்முடைய பெயர்களை ... ஆட்டுக் குட்டியானவர் அடிக்கப்பட்ட போது, புத்தகத்தில் நம்முடைய பெயர்கள் எழுதப்பட்டது, தேவனுடைய சிந்தையில் இருந்தபோது அவர் நம்மை உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே முன் குறித்தார். முன்னறிந்து, ஓ, சகோதரனே, இது சபையை எழச் செய்து இருக்கைகளினூடாக ஓடச் செய்யாதா? இதைக் குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். மறுபடியும் பிறந்தவர்களாகிய நீங்கள், உலகத் தோற்றத்துக்கு முன்னே ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் உங்கள் பெயர்களை தேவன் எழுதிவிட்டார். கிறிஸ்து மரித்து உங்களை நித்திய ஜீவனுக்கென்று அழைக்கத்தக்கதாக பரிசுத்த ஆவியை இங்கே அனுப்பியுள்ளார். நீங்கள் அதைப் பெற்றுள்ளீர்கள்; உங்களுடைய மீட்கப்படும் நாள் வரை நீங்கள் அங்கேயே இருக்கத்தக்கதாக அவர் உங்களை முத்திரித்திருக்கிறார். அல்லேலூயா! அப்படியே தரித்திருத்தல். அப்படியே நானே தரித்திருக்கவில்லை; அவர்தான் தரித்திருக்கச் செய்கிறார். நான் என்ன செய்தேன் என்பதல்ல; அவர் என்ன செய்தார் என்பதே. ''நான் புகை பிடிப்பதை விட்டுவிட்டேன்; பொய் சொல்வதை நான் விட்டு விட்டேன்; திருடுவதை நான் விட்டுவிட்டேன்' என்பதல்ல. அது, அவர் எனக்காக மரித்த காரியம் ஆகும். அவர் என்னிலிருந்து என் ஆவியை வெளியே எடுத்து ஒரு புது சிருஷ்டியாக என்னை மாற்றிவிட்டார் இப்பொழுது அடுத்த கேள்வி... சீக்கிரமாக இதை நாம் பார்ப்போம். 101சரீரம், ஆத்துமா, மற்றும் ஆவி இவைகளுக்கிடையே உள்ள வித்தியாசம் என்ன? அழுகிப்போக வேண்டியதாயிருக்கின்ற, நீ காண்கின்ற மாம்சம் தான் சரீரமாகும். இந்த சரீரமானது தகப்பன் மற்றும் தாயினுடைய பாலுணர்வின் வேட்கையினால் பிறந்த ஒன்றாகும். இது அழுகிப்போக வேண்டும், இதனால் ஒரு நன்மையும் கிடையாது. ஆதலால் புதிய பிறப்பில், உயிர்த்தெழுதலில், நீ ஒரு புதிய சரீரத்தில் கொண்டு வரப்படும்போது, அது தேவன் ஆதாமுக்குச் செய்தது போன்று அவருடைய சிருஷ்ட்டிக்கும் வல்லமையாக அது இருக்கும், அப்பொழுது நீ வருவாய். 102ஏவாள் பிசாசினால் காயினை கர்ப்பந்தரித்தாள் என்கின்ற உங்களுடைய கருத்தை தயவு கூர்ந்து நீங்கள் விளக்கி கூறமுடியுமா? நானாக அதைக் கூறினதே கிடையாது; ஏவாள் காயினை சர்ப்பத்தினால் கர்ப்பந்தரித்தாள் என்று கூறினேன். ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி காயீனைப் பெற்று “தேவனால் ஒரு மனுஷனைப் பெற்றேன்'' என்று கூறினாள். ஆதியாகமம் 4ம் அதிகாரம் 1ம் வசனம் தெளிவாகக் கூறுகின்றது. நிச்சயமாக! எல்லா ஜீவனும் தேவனிடத்திலிருந்துதான் வரவேண்டும். ஜான் டில்லிங்கர் தேவனிடத்திலிருந்து தான் வந்தான். அடால்ப் ஹிட்லர் தேவனிடமிருந்துதான் வந்தான். ஒவ்வொரு... ஜார்ஜ் - ஜார்ஜ்விட்ஃபீல்டு தேவனிடமிருந்து வந்தார். அதே போன்று பாப் இங்கர்சால் கூட, ஒவ்வொரு நபரும் தேவனிடத்திலிருந்து வந்தவர்கள் தான். நான் கூறினதெல்லாம் இதுதான் இதை யாராவது இடித்து வீழ்த்தும்படியாகவே நான் விரும்புகிறேன். பாருங்கள்? வேதாகமம் கூறுகிறது - அவர் (ஆதியாகமம் 3:8ல்) -நான்... அந்த இந்த கேள்வியானது ஏவாளுக்கு ஏதோ ஒன்று நேர்ந்தபோது கேட்கப்பட்டது, அவள் சர்ப்பத்தை சந்தித்தாள். இப்பொழுது சர்ப்பமானது ஒரு பாம்பாக இருக்கவில்லை; அவன் ஒரு மிருகமாக இருந்தான், சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் தந்திரமுள்ளவனாயிருந்தான். அங்கே ஒன்றுமே... 103மனிதனையும் குரங்கையும் ஒன்றாக இணைத்துக் காட்டக்கூடிய ஏதோ ஒரு மிருகத்தின் எலும்பை இன்றைக்கு விஞ்ஞானமானது நோக்கி கொண்டிருக்கிறது. அதற்கு நெருங்கின இனமாக மனிதன் போன்று வாலில்லா ஆப்பிரிக்க குரங்கு வகையான சிம்பான்சியை அவர்கள் கண்டெடுத்துள்ளனர். அவர்களால் ஒரு எலும்பையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களால் முடியாது, ஏனெனில் அது சர்ப்பமாயிருந்தது. இது தேவனுடைய வெளிப்பாடாகும். கவனியுங்கள்! சர்ப்பமானது ஒரு வரலாற்றுக் காலத்துக்கு முந்தைய காலத்தில் இருந்த மனிதனைப் போன்று, தேவனுக்கு - அல்லது மனிதனுக்கு அடுத்த நிலையில் இருந்த ஒன்று. ஆகவே அது தான் ஒரேயொரு காரியமாகும். சாத்தான் வேறொரு விலங்கை உபயோகிக்க நேர்ந்திருந்ததேயானால், அந்த வித்தானது ஸ்திரீயினுடைய வித்துடன் கலந்திருக்காது. எந்த ஒரு விலங்கின் வித்துடன் ஒரு மனிதனின் வித்தை உங்களால் கலக்க முடியாது. அது கிரியை செய்யாது. இந்த விலங்கிற்கு முற்றுபுள்ளி வைத்தாயிற்று - அது அழிந்துவிட்டது. தேவன் அவனை ஒரு பாம்பாக மாற்றி விட்டார். ஆனால் நினைவு கூறுங்கள்... ஏன் நீ ஒளிந்து கொண்டாய்? ஏன் நீ உன்னையே அத்தி இலைகளினால் மூடிக் கொண்டாய்?'' என்றார். அப்பொழுது அவர்கள் ஒருவரை நோக்கி ஒருவர் பழி சுமத்த ஆரம்பித்தனர் - ஒரு சேனையிலுள்ளவர்கள் செய்வது போல. ஆதாம், ''நீர் எனக்கு தந்த ஸ்திரீயானவள், அதின் கனியை எடுக்கும்படிக்கு என்னை கவர்ச்சியூட்டி இழுத்தாள்'' என்றான். அதற்கு அந்த ஸ்திரீயானவள், ''சர்ப்பமானது என்னை வஞ்சித்தது'' என்றாள். இப்பொழுது, வஞ்சித்தல் என்றால் என்ன அர்த்தம்? 'அவள் - அவன் என்னை வஞ்சித்தான்'' தேவன் உன் வித்துக்கும் சர்ப்பத்தின் வித்துக்கும் நான் பகை உண்டாக்குவேன் என்று கூறினார், வித்து சர்ப்பத்திற்கு வித்தென்பது உண்மையாகவே இருந்தது, 104அது காயீனின் மூலமாக வந்தது. பெருவெள்ளம் ஏற்பட்ட காலம் வரை மெருகேற்றப்பட்ட அறிவாளிகள், கல்வி அறிவு பெற்ற மக்கள் எல்லாருமே காயீனின் மூலமாகத்தான் வந்தனர். அதற்குப் பிறகு கொல்லப்பட்ட ஆபேல் வந்தான். இயேசுவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலை பிரதிநிதித்துவப் படுத்தத்தக்கதாக அவனுடைய இடத்தில் சேத் எழுப்பப்பட்டான். அவனிலிருந்து ஆடு மேய்ப்பவர்கள், தாழ்மையான மக்கள் வேத பயமுள்ள மக்கள் இன்னும் பிறமக்கள் வந்தனர். இந்த பிரபஞ்சத்தின் பிள்ளைகள் இராஜ்யத்தின் பிள்ளைகளைக்காட்டிலும் அறிவாளிகளாகவும், சாதுரியமானவர்களாயிருக்கிறார்கள் என்று இயேசு கூறினார். அது சரியே! அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க நம்மால் முடியாது. அவர்களைப் போல உங்களை ஆக்கிக்கொள்ள முயற்சிக்காதீர்கள். தேவனுக்கு முன்பாக உங்களை தாழ்த்துங்கள். அறிவாளியாகவும் சாதுரியவானாகவும் இருக்க விருப்பம் கொள்ளாதீர்கள். இயேசுவை மாத்திரமே அறிந்து கொள்ள வாஞ்சை கொள்ளுங்கள், அதை அப்படியே விடுங்கள், ஏனெனில் அங்கே தான் இன்றைக்கு சர்ப்பத்தின் வித்தானது இருக்கின்றது. ஆனால், விஞ்ஞானிகளும், நாகரீகப் பாங்கான மனிதர்களும், கல்வி அறிவு பெற்றவர்களும், மகத்தான அறிஞர்களும் தங்கள் சபைகளில் இருக்கிறார்கள் என்று மக்கள் பெருமைக்குரிய சிறப்பாக கூறிக்கொள்கின்றனர். நான் அதைக் காட்டிலும் ஆரம்ப எழுத்துகளைக் கூட (a,b,C) அறியாதிருக்கிற ஆனால் அவன் கிறிஸ்துவின் வித்தாக இருக்கின்ற வரைக்கும் தேவனை நன்றாக அறிந்திருக்கிற, ஒரு மனிதனை என் சபையில் கொண்டிருப்பதையே நான் விரும்புவேன் (சரியா). 105ஸ்திரீயின் வித்தானது, கிறிஸ்துதான் அந்த ஸ்திரீயின் வித்தாகும். கிறிஸ்துவை மரியாள் பிறப்பித்தாள். காயீன் யூதாஸ் காரியத்துக்குள் வந்தது தான் சர்ப்பத்தின் வித்தாகும். அங்கே சரியாக இயேசு மற்றும் யூதாஸ் அவதாரம் எடுத்திருந்தனர், தேவன் மற்றும் பிசாசு. கல்வாரி சிலுவையில் அங்கே நான்கு பேர் மரித்துக் கொண்டிருந்தனர்.இயேசுவின் இரு பக்கத்திலும் கள்ளர் இருந்தனர், யூதாசும் ஒரு காட்டத்தி மரத்தில் தூக்கிட்டுக் கொண்டான். மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் அதுவும் ஒரு சிலுவைதான்: அங்கே இருந்த ஒரு கள்ளன், ''நீர் தேவனுடைய குமாரனானால் எங்களை கீழே இறங்கச்செய்யும்'' என்றான். மற்றவனோ, ''கர்த்தாவே, நாங்கள் நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நீரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே. நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும்'' என்று கூறினான். இயேசு, ''இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசியிலிருப்பாய்'' என்று கூறினார். சுவிசேஷப் பிரசங்கியாகிய இயேசு சிலுவையின் மீது அங்கே பிரசங்கித்துக் கொண்டிருந்தார். சாத்தான் அவிசுவாசியாகிய அந்த சர்ப்பத்தின் வித்தை தன்னுடன் எடுத்துக்கொண்டு திரும்பவுமாக பாதாளத்திற்கு சென்று கொண்டிருந்தான். ஸ்திரீயின் வித்தாகிய அவருடனே ஒரு மனந்திரும்பின பாவியுடன் தேவன் பரலோகத்திற்கு திரும்ப சென்று கொண்டிருந்தார். நிச்சயமாக! அது பிசாசினுடைய வித்தல்ல; அது சர்ப்பத்தின் வித்தாக இருந்தது. சர்ப்பம் வித்தைக் கொண்டிருந்த ஒன்றாக காணப்பட்டது; அதற்கு வித்து இருந்ததென்று வேதாகமம் கூறுகின்றது. அந்த சர்ப்பத்தின் வித்தானது இன்றைக்கும் இருந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதிகளவில் ..... இப்பொழுது நீங்கள் இதைக் குறித்து மற்றொரு கேள்வியை என்னிடம் கேட்கலாம். நமக்கு மாத்திரம் நேரம் இருந்தால், உங்களுக்கு தேவையான எல்லா காரியங்களும் என்னிடம் இருக்கின்றது.... 106I யோவான்5:18ல் காணப்படுகின்ற “பாவஞ்செய்யான்'' என்றால் என்ன என்று உங்களால் தயவு கூர்ந்து விவரித்து கூற இயலுமா? என்னே, நாம் இங்கே சரியாக அதில் இருக்கிறோம், என்று விசுவாசிக்கிறேன். ஒருக்கால் அது ... இதோ எடுத்துவிட்டேன், சரியாக இதற்கு திருப்பினேன். ஒருக்கால் நான் இதை வாசிக்கவேண்டுமென்று கர்த்தர் விரும்பியிருக்கலாம். சரி. I யோவான், தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று;... நிச்சயமாக இல்லை நான் அதை முழுவதும் விளக்கிக் கூறினேன். அவனால் பாவம் செய்யமுடியாது; அவன் தேவனால் பிறந்தவனாக இருக்கிறான்.''பாவஞ்செய்யான்'', அவனால் பாவம் செய்ய முடியாது, வித்தானது அவனுக்குள்ளாக தரித்திருக்கும். இதற்கு ஒத்ததாக நீங்கள் ஒப்பீட்டுப் பார்க்க வேறொரு வேதவசனம் உள்ளது, ரோமர் 4:8, 4 மற்றும் 5-8, தேவன்.... அநேக வருடங்களுக்கு முன்னர் தாவீது பேசினான், ''எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் (பாருங்கள்?), ஏனெனில் அவன் பாவம்செய்யான்'' என்றான். 107இப்பொழுது, இன்னும் ஒரு கேள்வி உள்ளது. அவ்வளவு தான். நாம் இதைப் பார்ப்போம்! சகோரதன் பில் மத்தேயு 19:9ல் காணப்படுகின்ற வேசித்தனம் மற்றும் விபச்சாரம் இவைகளுக்கு உள்ள வித்தியாசம் என்ன? மத்தேயு19:9ல், இயேசு, ''ஆதலால், எவனாகிலும் தன் மனைவி, வேசித்தனம் செய்த காரணத்தினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், விபாரஞ் செய்கிறவனாயிருப்பான்“ என்று கூறினார். வேசித்தனம் மற்றும் விபச்சாரம் என்பதற்கிடையேயுள்ள வித்தியாசத்தைப் பொறுத்தமட்டில், இந்த வார்த்தையை எப்படி வேண்டுமானாலும் பொருத்தலாம். ஆனால் அவர் அங்கே எதைக் குறித்து பேசுகிறார் என்பதைத் தெளிவாக பார்ப்போமானால், திருமணமாகாத ஒரு பெண்ணால் விபச்சாரம் செய்ய முடியாது, ஏனென்றால், அவளுக்கு புருஷன் இல்லாமல் இருப்பதால் அவனுக்கு மாறாக அவளால் விபச்சாரம் செய்வதற்கில்லை. ஆனால் அது அவளுக்கோ ஒரு அசுத்தமான ஒன்றாகும். அவள் அவ்விதமாகச் செய்திருந்தால், அதை அவள் புருஷனுக்கு, அவர்கள் இருவரும் விவாகமாவதற்கு முன்னதாகவே அவள் அறிக்கை செய்ய வேண்டும். அப்படி செய்யாதிருக்கும் பட்சத்தில், அவளுடைய புருஷனுக்கு பின்னர் அது தெரிய வருமானால், அவளை தள்ளிவிட அவனுக்கு உரிமை உள்ளது, ஏனெனில் அவள் ஒரு பொய்யான வாக்கை செய்தவளாகக் காணப்படுகிறாள். ஏனெனில் வேதாகமம் கூறுகிறது, இது .... இல்லை வழக்கம் கூறுகிறது, இது உங்களுக்கு நன்றாக அறியப்படுவதாக (எனக்கும் அவ்வாறு தான் செய்யப்பட்டது) தேவனுடைய வார்த்தையின் பிரமாணம் அனுமதிக்கும் விதத்தைத் தவிர அதற்கு மாறாக தம்பதிகள் இணைக்கப்படுவார்களாயின், அவர்களுடைய விவாகம் சட்டப் பூர்வமான ஒன்றல்ல. இருதயத்தின் அந்தரங்கங்கள் எல்லாம் பகிரங்கமாக வெளிப்படத்தப்படப்போகின்ற அந்த நியாத்தீர்ப்பின் நாளிலே பதிலளிக்கப்போகிற உங்கள் இருவருக்கும் நீங்கள் செய்யவேண்டியதென்ன என்று நான் கட்டளையிடுகிறதாவது, சட்டப்படியாக நீங்கள் இணைக்கப்படக்கூடாது என்று உங்கள் இருவருக்கும் ஏதாவது தடை இருக்குமானால் இப்பொழுதே அதை நீங்கள் அறிக்கையிடுங்கள்'' உங்களுக்கு புரிகின்றதா. பாருங்கள்? ஆதலால் வேசித்தனம் என்பது ஒரு இளம் பெண் அசுத்தமான ஜீவியம் செய்வாளெனில், அது தான் வேசித்தனமாகும், ஏனெனில் அவளுக்கு புருஷன் இல்லை. ஆனால் அவளுக்கு விவாகமாகி, பிறகும் அதே விதமாகவே அவள் ஜீவிப்பாளெனில், அவள் தன் புருஷனுக்கெதிராக விபச்சாரம் செய்கிறாள். 108சில காலத்திற்கு முன்னர் ஒரு பெண் என்னிடம் வந்து, “ஓ, நான் எல்லாவற்றையும் அறிக்கை செய்து விட்டேன்'' என்றாள். அவள் மிகவும் பதற்றம் கொண்டவளாக நரம்புத்தளர்ச்சி கொண்டிருந்தாள், ''அதைக் குறித்த எல்லாவற்றையும் தேவனிடம் அறிக்கை செய்து விட்டேன்'' என்றாள். நான், ''நீ அதை உன் புருஷனிடம் அறிக்கையிட வேண்டும். நீ தேவனுக்கு கெதிராக விபச்சாரம் செய்யவில்லை; உன் புருஷனுக் கெதிராகத்தான் விபச்சாரம் செய்தாய் என்றேன். அது சரி. ஆகவே ஒரு மனிதன் ஒரு பெண்ணை விவாகம் செய்யுமுன், அந்தப் பெண்ணோ அவனை விவாகம் செய்யும் முன்னர் அசுத்தமான ஜீவியம் செய்து, பிறகு அவள் அவனிடம் வந்து திருமணம் செய்து நீண்ட காலம் சென்று பிறகு அவள் அவனிடம் “உங்களிடம் ஒன்றை நான் கூற விரும்புகிறேன். நான் வேறொரு மனிதனுடன் வாழ்ந்து திரிந்து கொண்டிருந்தேன், உங்களிடம் நான் கூறவில்லை'' என்று கூறுவாளானால், அவன் அவளைத் தள்ளி விட்டு வேறொருத்தியை விவாகம் செய்ய இவனுக்கு உரிமையுண்டு என்று இயேசு கூறினார், ஏனெனில் துவக்கத்திலேயே இவர்களுக்கு விவாகமாகவில்லை, ஏனெனில் அவனுக்கு எதிராக ஒரு - ஒரு பொய்யை வஞ்சகமாக கூறியிருந்தாள். 109இப்பொழுது, வேறொரு கேள்வி இங்கேயிருக்கிறது... உங்களுக்கு நன்றி... தயவுகூர்ந்து 1 யோவான் 5:16 ஐ விளக்கிக் கூறவும். I யோவான் 5, இதோ நான் எடுத்துவிட்டேன். மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல் செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அந்த பாவத்துக்கு வேண்டுதல் செய்ய நான் சொல்வேன். சரி. நாம்... இதற்கு நாம் நேரடியாக பதிலளித்து சீக்கிரமாக முடிப்போம், இது கடைசி கேள்வியாகும். நாம். மாற்கு -க்கு திருப்புவோம், மரணத்துக்கு ஏதுவான பாவம் என்னவென்று சரியாக இது விளக்கும். மரணத்துக்கு ஏதுவான பாவம் ஒன்றிருக்கிறது, அந்த பாவத்துக்கு நீங்கள் ஜெபிக்கவும் செய்யமாட்டீர்கள். மாற்குக்கு திருப்புங்கள், மாற்கு 3ஆம் அதிகாரம். மாற்கு 3 ஆம் அதிகாரம் நாம் எடுத்து பிறகு, சீக்கிரமாக முடிக்கும் முன்னர் இந்த ஒரு வேதவசனத்தை நாம் பார்ப்போம். நாம் 3, 22க்கு திருப்புவோம். எருசலேலமிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயல்செபூலைக் கொண்டிருக்கிறான். (அவர் மக்கள் எண்ணங்களைபகுத்தறிந்ததை அவர்கள் கண்டிருந்தனர்)... இவன் பெயல்செபூலைக் கொண்டிருக்கின்றான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள் அவர்களை அவர் அழைத்து ஒரு உவமையாய் அவர்களுக்குச் சொன்னதாவது, சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?... (இப்பொழுது, பிசாசினால் சுகமளிக்க முடியுமானால், எப்படி அவனால் செய்யமுடியும்?) ... சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலை நிற்கமாட்டாதே. ஒரு வீடு தனக்குத் தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலை நிற்கமாட்டாதே. சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலை நிற்கமாட்டாமல், அழிந்து போவானே. பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக் கூடாது. கட்டினானேயாகில், அவன் வீட்டை கொள்ளையிடுவான். எப்படி அவராலே அவர்களுடைய இருதயங்களுக்குள் சென்று அதை .... கண்டுபிடிக்க முடிந்தது. பாருங்கள்? அவர் தேவன். மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்த தூஷணங்களும் அவர்களுக்கு மன்னிக்கப் படும்; ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ் சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான். அதுதான் பிரிக்கப்படுதல் ... (ஏன் அதை அவர் கூறினார்?) .... அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார். 110கிறிஸ்துவுக்குள்ளிருந்து இந்த அற்புதங்களைச் செய்து கொண்டிருந்த தேவனுடைய ஆவியை இவ்விதமாக அழைத்தல், இவைகளைச் செய்தது பிசாசினுடைய ஆவி என்று அவர்கள் கூறினார்கள், இதுதான் மன்னிக்க முடியாத பாவம் என்று இயேசு கூறினார். ஆகவே நீங்கள் பாருங்கள். ஒரு மனிதன்... அவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாக பேசி , பரிசுத்த ஆவியை பரியாசம் செய்வானானால் அவனுக்காக நீங்கள் ஜெபம் செய்யாதீர்கள், அவ்விதமான ஒரு நபருக்கு ஜெபம்செய்ய உங்களுக்கு அனுமதி இல்லை. அதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்களா? ஏனெனில் மரணத்துக்கேதுவான பாவமுண்டு. ஒரே ஒரு பாவம் மாத்திரமே உண்டு. எல்லா விதமான பாவமும் மனுஷர் குமாரர்களுக்கு மன்னிக்கப்படும், ஆனால் பரிசுத்த ஆவியை தூஷித்தால் அது மன்னிக்கப்படவே முடியாது என்று இயேசு கூறினார். இப்பொழுது, மக்கள் ''சரி, பரிசுத்த ஆவியை தூஷித்தல் ...'' எனலாம். தூஷணம் என்றால் என்ன? ''ஏளனம் செய்து கேலிக் கூத்தாக்கி பரியாசம் செய்தல், தூஷணம்'' என்று அர்த்தமாகும். சரி அவரை என்னவென்று தூஷணம் செய்தார்கள்? அவரை கிரியை நடப்பிக்கச் செய்து, அவர் செய்துகொண்டிருந்த காரியங்களை நடப்பிக்கச் செய்து, அவருக்குள் இருந்த பரிசுத்த ஆவியானவரை அவர்கள், 'இவன் பிசாசாகிய பெயல்செபூலினாலே பீடிக்கப்பட்டுள்ளான். இவனுக்குள் இருக்கின்ற குறி சொல்லுகின்ற ஒருவன், அதாவது பிசாசுதான் இவன் இந்த காரியங்களை நடப்பிக்கும்படிக்குப் பண்ணுகிறான். மக்களுடைய இருதயத்திலுள்ள அந்தரங்கங்களை அறிதல், பிலிப்பு கூட்டத்திற்கு வருமுன்னர் அவன் யார் என்று அறிந்ததாக இவன் கூறுதல், பிசாசுகளை துரத்துதல், இங்கே இந்த காரியங்களைச் செய்தல், இவன் பெயல்செபூலினாலே இதைச் செய்கிறான், இவன் ஒரு பிசாசு'' என்று கூறினர். ஆகவே இயேசு இந்த பாவத்திற்கு மன்னிப்பில்லை, இது ஜெபிக்கப்பட முடியாத மன்னிக்கப்பட முடியாத ஒரு பாவமாகும். இது மன்னிக்கப்பட முடியாது. இதை செய்கின்ற ஒரு மனிதனோ அல்லது பெண்ணோ தங்களை, என்றென்றுமாக நித்தியமாக தேவனுடைய பிரசன்னத்திற்குள் வரமுடியாதபடிக்கு முத்திரையிட்டுக் கொண்டார்கள், இவர்களுக்கு மன்னிப்பேயில்லை . 111நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? நேசிக்கிறேன், நேசிக்கிறேன் முந்தி அவர் என்னை நேசித்ததால் சம்பாதித்தார் என் இரட்சிப்பை கல்வாரி மரத்தில் கவனியுங்கள், நீங்கள் மிக அருமையாக இருந்தீர்கள், இந்த கேள்விகள் கடினமானவைகள்,இவை நிறைய நேரம் எடுத்தன. நீங்கள் இந்த சபைக்குள் 7.30, 8.30, 9.30, இரண்டரை மணிநேரமாக இந்த உஷ்ணமான சபையில் உட்கார்ந்து கொண்டிருந்தீர்கள். இந்த நேரம் வரை சபையாரில் தொண்னூற்றெட்டு சதவீதம் அப்படியே தங்கள் இருக்கையில் அப்படியே இருந்தனர். இதை நான் கூற விரும்புகிறேன்: ஜெபர்சன்வில்லே, இவ்வாறு நான் உணர்கிறேன்; நீ இந்த கிருபையின் நாளிலே, பாவத்துக்குள்ளாகி விலகிக் சென்றாய் என்று நான் நம்புகிறேன். முழு அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இதுவே தான் என நான் நம்புகிறேன், ஆனால் உலகத்திலேயே எனக்கு மிகவும் உத்தமமான நண்பர்களில் சிலர் சரியாக இங்கே ஜெபர்சன்வில்லில் இருக்கின்றனர். எனக்காக மரிக்கவும் தயாராக உள்ள மக்கள் இங்கே எனக்குண்டு. 112இப்பொழுது, இவ்வாறுள்ள ஒரு உஷ்ணமான இரவு பொழுதில், நம்முடைய வாசலில் உள்ள அந்நியர்கள், ஒருக்கால் நான் வேதவசனங்களின் பேரில் பேசி அதை விவரித்த விதத்தைக்கூட விசுவாசிக்காத ஒரு நபர் இங்கே எவ்விதம் அமர்ந்து கொண்டிருப்பார் என்பதை எனக்கு கூறுங்கள், ஆனால் அவர்களோ பயபக்தியுடன் தேவபயத்துடனே உட்கார்ந்து அதை கவனித்தனர். நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்களாக. காரியங்கள் தூசிகளாய் மாறும்போது நீங்கள் தாமே கிறிஸ்து இயேசுவின் பேரில் வாழ்வீர்களாக. உங்களுடைய தேவையாயிருக்கின்ற எல்லாவற்றையும் தேவன் அளிப்பாராக. உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையெல்லாவற்றையும் அவர் உங்களுக்கு அளிப்பாராக. நான் அவருடைய ஊழியக்காரன் என நீங்கள் விசுவாசித்து, என்னுடைய ஜெபங்கள் உங்களுக்கு உதவும் என்று விசுவாசித்தால், நம்முடைய பாவங்களுக்கு பரிகாரமாக, நமக்காக மரித்த, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை எழுப்பின பரலோகத்தின் தேவனானவர், இங்கே இப்பொழுது இந்த கட்டிடத்தில் எங்கும் வியாபித்து நிறைந்துள்ளவராகிய அவர் தாமே உங்களுடைய இருதயத்தின் வாஞ்சையை உங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே, உங்கள் ஒவ்வொருக்காவும் நான் ஏரெடுக்கும் உத்தமமான ஜெபமாகும். சூரியன் உங்கள் மேல் வந்து உங்களை சுட்டெரித்துப் போடாத உஷ்ணமான காற்றுகள், உங்கள் மீது வீசாத ஒரு தேசத்திலே , நான் உங்களுடன் வருடக்கணக்காக இலட்சக்கணக்கான வருடங்களாக உங்கள் ஒவ்வொருவருங் கூட தேவனுடைய ராஜ்யத்தில் உட்கார்ந்து இந்த இரவுகளின் நித்தியமான காரியங்கள், மற்றும் எப்படியெல்லாம் நாம் ஒன்றாக உட்கார்ந்திருந்தோம் என்பதைப் பற்றி பேசுவேன் என நான் நம்புகிறேன். 113அவருடைய கிருபை தாமே உங்களுடன் இருப்பதாக. உங்களுடைய வியாதிகளிலிருந்து அவர் தாமே உங்களை சுகப்படுத்துவாராக. அவர் தாமே உங்களுக்கு பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் கொடுப்பாராக. இதை நான் இப்பொழுது எவ்வித அவமதிப்பும் இல்லாமல் கூறுகிறேன். சர்ப்பதின் வித்தைக் குறித்தும் இயேசுவின் நாமத்தில் ஞானஸ்நானத்தைக் குறித்தும், மற்றவைகளைக் குறித்தும் நான் கூறினது ஏதாவது மனஸ்தாபத்தை விளைவித்திருக்குமானால்.... இப்பொழுது, ஒருவர், ''சகோதரன் பிரன்ஹாம் ஒருத்துவக்காரர்'' என்று கூறுவாரானால், இல்லை ஐயா, நான் ஒருத்துவக்காரன் அல்ல. இயேசுவே தம்முடைய சொந்த பிதாவாக இருப்பார் என்று நாம் நம்புவதில்லை. இயேசு ஒரு பிதாவைக் கொண்டிருந்தார் என்றும் அவர் தான் தேவன் என்றும் நான் விசுவாசிக்கிறேன். ஆனால் தேவன் இயேசு என்று அழைக்கப்பட்ட இந்த சரீரத்திற்குள்ளாக கூடாரமிட்டு வாசம் செய்தார், நம்மோடிருக்கிற தேவனாகிய இம்மானுவேல் அவர் தான். இந்த தேவனைத் தவிர வேறே தேவன் கிடையாது. அவர் தான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி. ஆகவே பிதா, குமாரன் பரிசுத்த ஆவி நாமம் ... கர்த்தராகிய பிதா, குமாரனாகிய இயேசு, தேவனுடைய ஆவியாகிய, லோகாஸாகிய பரிசுத்த ஆவி. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து; அது அவராகும். தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருந்தது. 114நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் பெற்றோ, தெளிக்கப்பட்டோ, ஊற்றப்பட்டோ அல்லது எந்த விதத்திலோ இருந்தாலும், உங்களை நான் நேசித்து, நீங்களும் நானும் தேவனுடைய ராஜ்யத்தில் சந்திப்போம் என்று என் முழு ஆத்துமாவோடும் சரீரத்தோடும் நான் ஜெபிக்கிறேன், சந்தேகத்திற்கிடமின்றி நான் விசுவாசிக்கிறேன், நான் தவறாயிருந்தால், தேவன், என்னை மன்னித்து விட்டுவிடுவார். உங்களுடைய தவற்றையும் மன்னித்து விட்டு விடுவார். ஆனால் வேதாகமத்தை பொறுத்தவரை என்னுடைய உறுதியான நம்பிக்கையானது, ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை சரியாக இலக்கை அடிக்க வேண்டும் என்பதேயாகும். நீங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் எடுக்கவில்லையெனில் மறுபடியுமாக நீங்கள் அவ்விதமாக எடுக்க வேண்டும் என நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன். 115நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறவில்லையெனில், உங்கள் ஜீவியம் இனிமையை உணராதிருந்தால் நீங்கள் அந்நிய பாஷையில் பேசியிருந்தாலும், நீங்கள் சத்தம் போட்டிருந்தாலும், நீங்கள் மேலும் கீழும் குதித்திருந்தாலும், நீங்கள் வியாதியஸ்தர் மேல் கைகளை வைத்து அவர்கள் சுகமாக்கப்பட்டிருந்தாலும், நீங்கள் எல்லா விதமான அற்புதங்களும் அடையாளங்களும் செய்திருந்தாலும் அவை ஒரு பொருட்டல்ல. ஆனால் ஆவியின் கனிகளாகிய, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, நற்குணம், சாந்தம், தயவு, பொறுமை, விசுவாசம் ஆகிய இந்த எல்லா காரியங்களும் உங்களிடம் காணப்படவில்லையெனில், அப்படியானால் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் நான் உங்களுக்கு கட்டளையிட்டு உங்களை கட்டாயம் பண்ணுவதென்னவெனில், பரிசுத்த ஆவியானவர் உங்கள் மீது வரும் வரைக்கும் நில்லாமல் ஜெபித்துக் கொண்டேயிருங்கள்! நீங்கள் எவ்வளவாக அந்நிய பாஷையில் பேசியிருந்தாலும், எவ்வளவாய் நீங்கள் கூச்சலிட்டிருந்தாலும், எவ்வளவு காலமாக ஒரு சபையின் அங்கத்தினராக நீங்கள் இருந்திருந்தாலும், நீங்கள் இங்கே இருந்திருந்தாலும், அது ஒரு பொருட்டேயல்ல. நீங்கள் என்ன வெல்லாம் செய்திருந்தாலும் பரிசுத்த ஆவியானவராகிய கிறிஸ்து உங்களுடைய இருதயத்தில் தம்முடைய இடத்தை எடுக்கும் வரை, நீங்கள் உலகத்தின் காரியங்களுக்கெல்லாம் மரித்து, கிறிஸ்துவிற்காக புதிய சிருஷ்டியாக ஜீவிக்கும்வரை, அவையெல்லாம் ஒன்றுமே கிடையாது. 116தேவன் உங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே என்னுடைய ஜெபமாகும். இப்பொழுது நாம் எழுந்து நிற்போம். ஓ, இது ஒரு அருமையான சபைக்கூட்டம். நீங்கள் மிக அருமையாக இருந்தீர்கள்; இப்படியே நீங்கள் நிற்கும்படிக்கு விடுவதை நான் வெறுக்கிறேன். அங்கே பின்னால் இருக்கும் சிறு எடித்தின் பிறந்த நாள் இதுவாகும். எடித் நான் உன்னுடைய... இதை எனக்காக நான் சகோதரன் நெவிலை செய்யச் சொல்லப்போகிறேன். இந்த வாலிப பெண்ணிற்கு என்ன வயதாகிறதென்று நாம் பார்ப்போம். முப்பத்தெட்டு வயது. தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. டேவி, இல்லை டெட்டி உன்னால் கூடுமானால் உனக்கு மகிழ்சியான பிறந்த நாளாயிருப்பதாக என்னும் பாடலுக்கு ஸ்ருதியை கொடு . சரி. உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாயிருப்பதாக உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாயிருப்பதாக சகோதரி எடித் உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாயிருப்பதாக உனக்கு மகிழ்ச்சியான பிறந்தநாளாயிருப்பதாக இப்பொழுது சபையாரெல்லாருமாக சேர்ந்து, வயது செல்லாது என்று சேர்ந்து பாடுவோமாக. வயதுசெல்லாது, வயது செல்லாது, அந்த தேசத்திலே நமக்கு வயதாகாது வயது செல்லாது , வயதுசெல்லாது, அந்த தேசத்திலே நமக்கு வயதாகாது அந்த இனிமையிலே நாம் அழகான அக்கரையிலே சந்திப்போம் அந்த இனிமையிலே நாம் அழகான அக்கரையிலே சந்திப்போம்.